இன்று எப்படி இருக்கிறீர்கள் அம்மா? என்று நான் சாதாரணமாக 84 வயதுள்ள என் சிநேகிதியை விசாரித்த பொழுது, மூட்டுக்களில் உள்ள வேதனைகளையும், வலிகளையும் காண்பித்து, “முதுமை என்பது கடினம்! ஆனால் தேவன் எனக்கு நல்லவராகவே இருக்கிறார்” என்று மெல்லிய குரலில் பதிலளித்தார்கள்.

“என் வாழ்க்கையில் முதுமை அடைவது என்பது எனக்கு மாபெரும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று “வீட்டை நெருங்கி” என்ற நூலில் பில்லி கிரகாம் கூறுகிறார். “நான் இப்பொழுது ஓர் வயது முதிர்ந்தவன். இது ஓர் இலகுவான காரியம் அல்ல என்று என்னை நம்புங்கள்.” வயது ஆக ஆக நாம் சந்திக்க இருக்கும் பிரச்சனைகளைக் குறித்து வேதம் விவரிக்காவிட்டாலும், முதுமை என்பது புறக்கணிக்கப்பட வேண்டிய ஓர் காலம் என்றும் சொல்லவில்லை, அல்லது பல்லைக் கடித்துக் கொண்டு கஷ்டத்தை சகித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் கூறவில்லை என்றும் கூறுகிறார். வயதாகும் பொழுது எழும் சில கேள்விகளைச் சமாளிக்க எவ்வாறு நிர்பந்தப்படுத்தப்படுகிறார் என்றும் கூறுகிறார். நாம் பயத்தையும், பிரச்சனைகளையும், அதிகரித்து வரும் திறமைக் குறைவுகளையும், நாம் அனுசரித்துச் செல்லக் கற்றுக் கொள்வது மட்டுமல்லாது எவ்வாறு இப்படிப்பட்ட கஷ்டங்களுக்கூடாக நம் உள்ளான மனிதனில் உண்மையாகவே பலப்படுகிறோம்? ஏன்ற கேள்வியை எழுப்புகிறார்.

“உங்கள் முதிர் வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் என்று ஏசாயா 46: 4ல் தேவன் நமக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தத்தைப் பார்க்கிறோம்.

இவ்வுலகத்தில் எவ்வளவு காலம் நாம் வாழப்போகிறோம் என்று நமக்குத் தெரியாது. நம் வாழ்நாள் முழுவதும் தேவன் நம் மீது கரிசனை கொள்கிறார் என்பது மாத்திரம் நிச்சயம்.