என் பேரனும் அவனது நண்பர்களும் டி-பந்து விளையாடுவதைப் பார்ப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியையளிக்கும். இந்த பேஸ்பால் போன்ற விளையாட்டில் அதிகம் பயிற்சி பெறாத இளம் விளையாட்டு வீரர்கள், தவறான பகுதிக்கு ஒடுவார்கள் அல்லது பந்தைப் பிடிக்க நேர்ந்தால் என்ன செய்வதென்று அறியாது திணறுவார்கள். பேஸ்பால் விளையாட்டையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள் விளையாடும் பொழுது இப்படிப்பட்ட தவறுகள் வினோதமாகக் காணப்படாது.

இவற்றில் தேர்ச்சி பெற்று முதிர்ச்சியடைவதே காரியம்.

என்ன செய்வதென்று அறியாமல் அல்லது எல்லாவற்றையும் மிகச் சிறந்த முறையில் செய்யத் தெரியாத நிலையில் – இவ்வாறு இளம் விளையாட்டு வீரர்கள் சிரமப்படுவது (சரியே) ஏற்றுக் கொள்ளத்தக்கதே. அவர்கள் முயற்சி செய்கிறார்கள் கற்றுக் கொள்கிறார்கள். எனவே அவர்களைப் பொறுமையுடன் பயிற்றுவித்து, நன்கு கற்றுத் தேற வழிகாட்டுகிறோம். பின்பு அவர்கள் குழுவாக திறமையுடன் விளையாடி வெற்றி பெறுவதை நாம் பாராட்டுகிறோம்.

இயேசுவைப் பின்பற்றுபவர்கள் வாழ்க்கையிலும் இதே போன்ற காரியங்கள்தான் நிகழ்கின்றன. “மிகுந்த மனத்தாழ்மையுடையவர்களாய் அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கிச்” செல்லக்கூடிய மக்கள், சபைக்குத் தேவை (எபே 4: 2) என்று பவுல் அப்போஸ்தலன் குறிப்பிடுகிறார். (மேய்ப்பர்கள், போதகர்கள், ஆவிக்குரிய வழி காட்டிகள்) போன்ற
பலதரப்பட்ட “பயிற்சியாளர்கள்” நாம் பக்திவிருத்தியடைந்து நிறைவான வளர்ச்சியினால் விசுவாசத்தின் ஒருமைப்பாட்டில் பூரண புருஷராகும் வரைக்கும் நமக்கு உதவ தேவைப்படுகிறவர்கள் (வச. 18).

நாம் வேத வசனங்களை வாசிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும், ஆலயத்தில் சகோதர சிநேகத்தை மகிழ்வுடன் அனுபவிக்கும் பொழுதும் கிறிஸ்துவுக்குள் பூரணபுருஷராக வளருவதையே நாம் நமது நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் (வசனம் 15). நாம் ஒவ்வொருவரும் இந்த விசுவாசப் பயணத்தில் இருக்கிறோம். எனவே நாம் ஒருவரை ஒருவர் ஊக்குவித்து கிறிஸ்துவுக்குள் பூரணபுருஷராகக் கடந்து செல்வோம்.