டிசம்பர், 2015 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: டிசம்பர் 2015

தொடர்ச்சியாக பறந்து செல்வது

ஆலன் டெனன்ட் எழுதியுள்ள இறக்கையின் மேல் என்ற புத்தகத்தில், பிற பறவைகளைக் கொன்று தின்னும் இராஜாளி என்ற கழுகினம் இடம் பெயர்ந்து செல்லும் முறையைத் தொடர் பதிவு செய்வதற்காக, அவர் செய்த முயற்சிகளைப் பற்றி அவர் எழுதியுள்ளார். அழகு, வேகம், செயல்படும் திறனுடைய அப்பறவைகள், முற்காலத்தில் அரசர்கள், பிரபுக்கள் இவர்களுடைய வேட்டைத் தோழனாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1950களில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட D.D.T என்ற பூச்சிக் கொல்லி மருந்தினால், அவைகளின் இனப்பெருக்கத்திறன் பாதிக்கபட்டதால், அவை வெகுவேகமாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அழிந்து…

இளைப்பாற ஓர் அழைப்பு

ஒரு மருத்துவமனையில் அவசரகால மருத்துவ வார்டில் சேர்க்கப்பட்டிருந்த எனது சிநேகிதனின் படுக்கையண்டையில் நான் நின்று கொண்டிருந்த பொழுது, அங்கிருந்த மற்ற நோயாளிகளின் வேதனைக் குரல் என்னை அசைத்தது. என் நண்பனுக்காகவும் மற்ற நோயாளிகளுக்காகவும் நான் ஜெபித்த பொழுது, இந்த பூமியில் நமது வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதை உணர்ந்தேன். பின்பு ஜிம் ரீவ்ஸ் அவர்களால் பாடப்பட்டுள்ள இந்த உலகம் நமக்கு சொந்தமான வீடல்ல “நாம் அதன் வழியாக கடந்து செல்கிறவர்களாக இருக்கிறோம்” என்ற ஒரு நாட்டுப்புறப் பாடலை நினைவு கூர்ந்தேன்.

நமது உலகம் வேதனை,…

ஆர்வம் இல்லாமையை தவிர்த்தல்

நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட வேலைகளை முடிக்க அழகிய சேலைகளைக் கட்டிய பெண்கள், அங்கும் இங்கும் வேகமாக சென்று கொண்டிருந்ததால், அந்த அறை முழுவதும் மனதை ஈர்க்கக் கூடிய பலவர்ண நிறங்களால் நிறைந்திருந்தது. இந்தப் பெண்கள் முன்பு இந்தியாவில் வாழ்ந்தவர்கள். இப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கிறார்கள். ஆயினும் அவர்களது சொந்த நாட்டைப் பற்றிய கரிசனையுடன் இருந்தார்கள். இந்தியாவில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான ஒரு கிறிஸ்தவ பள்ளியின் பொருளாதாரத் தேவையைப்பற்றி கேள்விப்பட்டதோடு நின்று விடாமல், அப்பள்ளியின் தேவையைச் சந்திக்க முழு மனதோடு செயல் பட்டார்கள்.…

அடைக்கலமான இடம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில், வேன்கூவர் நகரத்தில் வாழ்ந்து வந்த வீடற்ற மக்களுக்கு ராத்தங்க ஒரு புது வித தூங்கும் இடம் கிடைத்தது. உள்ளுரிலிருந்த ரெயின் சிட்டி ஹவுசிங் என்ற சேவை நிறுவனம் தற்காலிக தங்கும் இடமாக மாற்றப்படுவதற்கான சிறப்புத் தன்மைகள் கொண்ட பெஞ்சுகளை உண்டாக்கினது. அந்த பெஞ்சுகளில் சாய்ந்து கொள்ள பயன்படும் பின் பகுதி காற்று, மழையிலிருந்து ஒரு மனிதனை பாதுகாக்கும் முறையில் ஒரு உறைபோல இழுக்கப்படக் கூடியதாக இருந்தது. இரவு நேரங்களில் தூங்கக் கூடிய இந்த இடங்களை எளிதாகக் கண்டு கொள்ளத்தக்கதாக “இது ஒரு…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உள்ளான சுகத்திற்கான வேட்டை

அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் வசிக்கும் கார்சன், வேட்டையாடுவது, மீன்பிடிப்பது, பைக்குகள் ஓட்டுவது மற்றும் ஸ்கேட்போர்டில் செல்வது என்று எப்போதும் மும்முரமாகவே செயல்படுவார். அவர் வெளியே பொழுதைக் கழிப்பதில் அதிக பிரியப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி விபத்திற்குள்ளானதால், அவருடைய மார்புக்கு கீழ் அனைத்தும் செயலிழந்துபோனது. விரைவில் மனச்சோர்வுக்குள் மூழ்கினார். அவருடைய எதிர்காலம் இருண்டுபோனது. அவனுடைய சிநேகிதர்களில் சிலர் அவனை மீண்டும் வேட்டைக்கு கூட்டிச்சென்றனர். அந்த தருணத்தில் தன்னுடைய துயரங்கள் அனைத்தையும் மறந்து சுற்றியிருக்கும் அனைத்து அழகையும் ரசித்தான். இந்த அனுபவம் அவனுக்கு உள்ளான இருதய சுகத்தை ஏற்படுத்தி, அவனுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது. அவனைப் போல் இருப்பவர்களும் அந்த அனுபவத்தை பெறும் நோக்கத்தோடு, “வேட்டையிலிருந்து சுகத்துக்கு” (ர்ரவெ 2 ர்நயட) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தான். அவன், “என்னுடைய விபத்தானது எனக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது... நான் எப்போதும் செய்ய விரும்பியதை இப்போது மற்றவர்களுக்கு செய்வதின் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொல்லுகிறான். மிகவும் கடுமையான சரீர குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தேவையான இடவசதியை ஒழுங்குசெய்து அவர்களுக்கு உள்ளான சுகத்தை கொடுப்பதில் இப்போது அவர் மும்முரமாய் செயல்பட்டு வருகிறான்.  
நொருங்குண்ட இருதயங்களை காயங்கட்டும் ஒருவரின் வருகையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்துள்ளார் (ஏசாயா 61). அவர் “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்... துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும்” கிரியை செய்வார் (வச. 1-2). இயேசு இந்த வேத வாக்கியங்களை தேவாலயத்தில் வாசித்த பின்பு, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” (லூக்கா 4:21) என்றார். இயேசு நம்மை இரட்சிக்கவும் பூரணப்படுத்தவும் வந்தார்.  
உங்களுக்கு உள்ளான சுகம் அவசியப்படுகிறதா? இயேசுவிடம் வாருங்கள், அவர் “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையை” (ஏசாயா 61:3) உங்களுக்குக் கொடுப்பார்.  

நன்றியுள்ள இருதயம்

 ஹான்ஸ்லி பார்ச்மென்ட், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டார். டோக்கியோவில் நடைபெறும் தன்னுடைய அரையிறுதி ஒலிம்பிக் போட்டிக்கு செல்லுவதற்கு தவறான பேருந்தில் ஏறிவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக விளையாட்டில் உதவிசெய்யும் டிரிஜானா ஸ்டோஜ்கோவிச்சைச் சந்தித்தார். அவர் டாக்ஸியில் செல்லுவதற்கு சிறிது பணத்தைக் கொடுத்து உதவினாள். பார்ச்மென்ட், சரியான நேரத்திற்கு அரையிறுதிக்கு சென்று, 110 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதற்கு பின்பதாக, அவர் ஸ்டோஜ்கோவிச்சைக் கண்டுபிடித்து அவளது உதவிக்கு நன்றி தெரிவித்தார். 
லூக்கா 17ஆம் அதிகாரத்தில், சமாரியவைச் சேர்ந்த குஷ்டரோகியை இயேசு சுகமாக்கியதின் நிமித்தம் அவருக்கு நன்றி சொல்லுவதற்கு ஒருவன் மாத்திரம் திரும்பி வந்த சம்பவத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம் (வச. 15-16). இயேசு ஒரு கிராமத்திற்குள் பிரவேசிக்கிறார். அங்கு பத்து குஷ்டரோகிகளை சந்திக்கிறார். அவர் அனைவரும் சுகமடையும்படிக்கு விரும்பி, அனைவரும் கிருபையையும் வல்லமையையும் பெற்றுக்கொண்டனர். தாங்கள் சுகமானதைக் கண்டு பத்துபேரும் ஆச்சரிப்பட்டாலும், அதில் ஒருவன் மாத்திரம் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தினான். அவன் “உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்” (வச. 15-16).  
தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் ஒவ்வொரு நாளும் பல விதங்களில் அனுபவிக்கிறோம். உபத்திரவப்படும் சரியான நேரத்தில் பதில் பெறுவது என்பது, எதிர்பாராத விதமாய் அந்நியரிடத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் ஆச்சரியமான பலனாய் இருக்கும். சிலவேளைகளில் அவருடைய ஆசீர்வாதங்கள் என்பது நல்ல தட்பவெப்ப நிலை, வெளியரங்கமான சில காரியங்களாய் கூட இருக்கலாம். அந்த நன்றியுள்ள சமாரியனைப் போல் நாமும் தேவனுடைய கிருபைகளுக்காய் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.

கிருபையும் மாற்றமும்

குற்றம் அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் இருந்தது. அதைச் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்வந்த ஆண்டுகளில் சிறையில் கழித்த அந்த மனிதன், தன்னுடைய சிந்தையையும் ஆவிக்குரிய சுகத்தையும் நாடினான். அது அவனை மனந்திரும்புதலுக்கு வழிநடத்தி, இயேசுவுடனான ஜீவியத்தை புதுப்பித்தது. இந்த நாட்களில் அவன் தன்னுடைய சக சிறைக் கைதிகளிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டான். தேவனுடைய கிருபையினாலும் அவனுடைய சாட்சியினிமித்தமும் உடன் இருந்த கைதிகளில் சிலர் இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு அவரிடம் மன்னிப்பைப் பெற்றனர்.  
விசுவாச வீரனாய் கருதப்படும் மோசேயும் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு குற்றத்தை செய்துவிட்டான். ஒரு எகிப்தியன் எபிரேயனை அடித்து துன்புறுத்துவதைப் பார்த்த மோசே, அவனை கொன்றுவிட்டான் (யாத்திராகமம் 2:11-12). அவன் பெரிய பாவத்தை செய்தபோதிலும், தேவன் அதை கிருபையாய் சரிகட்டினார். பின்பாக, தேவன் தன்னுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்பொருட்டு மோசேயை தெரிந்துகொண்டார் (3:10). ரோமர் 5:14இல், “மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது” என்று நாம் வாசிக்கிறோம். தொடரும் வரிகளில், எங்களுடைய கடந்தகால பாவம் எப்படியிருந்தாலும் அதை மாற்றி அவரோடு ஒப்புரவாக்குதலை கர்த்தருடைய கிருபை சாத்தியமாக்கிற்று என்று பவுல் சொல்லுகிறார் (வச. 15-16). 
நாம் செய்த தப்பிதங்களின் அடிப்படையில் தேவனுடைய மன்னிப்பை பெற்றுக்கொண்டு அவருடைய நாம மகிமைக்காய் செயல்படுவது சாத்தியமில்லாதது என்று ஒருவேளை நாம் எண்ணலாம். ஆனால் அவருடைய கிருபையினிமித்தம், நாம் மறுரூபமாக்கப்பட்டு, மற்றவர்களையும் அந்த மறுரூப அனுபவத்திற்குள் பிரவேசிக்கச் செய்யலாம்.