Archives: நவம்பர் 2015

மிக உயரிய விருதைப் பெறல்

ஓவ்வொரு துறையிலும் முயற்சியின் உச்சத்திற்கு மனிதரால் மதிக்கப்பெற்ற ஓர் உயரிய விருது உண்டு. நடிப்பிலே சிறந்ததற்கு தரப்படும் அகாடாமி பரிசு உதாரணமாக ஒலிம்பிக் போட்டியில் பெற்ற தங்கப்பதக்கம், கிராமி பரிசு, இசை, அல்லது நோபல் பரிசு போன்றவைகள், உலகில் மிக மேன்மையான பரிசுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றைம்விட பெற்றுக் கொள்ளக்கூடிய மிகப் பெரிய பரிசு ஒன்று உண்டு.

முதலாம் நூற்றாண்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றவர்கள் பரிசைப் பெறுவதற்காக முழுமையுமாக முயற்சி எடுத்தார்கள் என்பதை பவுல் அப்போஸ்தலன் நன்கு அறிந்திருந்தார். இதை மனதில்…

நமது முக்கிய கரிசனை

சிநேகிதர்களால் வரும் மனஅழுத்தம், அன்றாட வாழ்வில் ஒரு பகுதி சில சமயங்களில் ஒரு தீர்மானம் எடுக்குமுன் நமது சொந்த கருத்திற்கோ அல்லது அது தேவனுக்கு பிரியமாக இருக்குமோ, இருக்காதோ என்று எண்ணுவதை விட, மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் அல்லது என்ன சொல்லுவார்கள் என்பதை வைத்தே நாம் நமது தீர்மானங்களை எடுக்கிறோம். இவன் இப்படிப்பட்டவன் என்று பிறர் நம்மை தீர்மானித்து விடுவார்கள் என்றோ அல்லது பிறரால் ஏளனம் செய்யப்பட்டுவிடுவோமோ என்பதைக் குறித்து நாம் கவலைப்படுகிறோம்.

அப்போஸ்தலனாகிய பவுலும், அவனைச் சுற்றியிருந்த மக்களால் இந்த அழுத்தத்திற்கு உட்பட்டார்.…

எழுதின படியே

எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், மரச்சாமான்கள் போன்றவற்றின் பல்வேறு பாகங்களை ஒன்றாக இணைப்பதில் எனக்கும் என் மகனுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. எனது மகன் ஸ்டீவ் எந்திர நுணுக்கங்கள் மீது அதிக நாட்டம் உடையவனாக இருந்ததால், கொடுக்கப்பட்ட செயல் விளக்க முறைகளை தள்ளிவிட்டு அவனாகவே செயல்படுவான். “பொருட்களை இணைக்க ஆரம்பிக்கும் முன்பு இதை வாசியுங்கள்”. என்ற ஆலோசனைக் குறிப்பை வாசிப்பதற்கு அதிக நேரம் செலவழித்து என் கவனம் முழுவதையும் அதில் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது, ஸ்டீவ் அவ்வேலையை பாதிக்கு மேலாக செய்து முடித்திருப்பான்.

சில சமயங்களில் ஸ்டீவைப்…

குமாரனைப் பிரதிபலித்தல்

வட அட்சரேகையில் மலைகளால் சூழப்பட்ட இடமான நார்வேயிலுள்ள ருஷ்ஷீகானில், ஓர் ஆண்டில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இயற்கையான சூரிய ஒளி கிடைக்காது. நகரத்திற்கு ஒளிதர அந்த நகர மக்கள், மலைகளின் மேல் பெரிய கண்ணாடிகளை நிறுத்தி, சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்து, அந்நகர மையத்தில் ஒளி விழச் செய்தார்கள். அந்த மிகப்பெரிய கண்ணாடிகள், சூரியன் உதிப்பதிலிருந்து அஸ்தமிக்கும் வரை சுழன்று கொண்டே இருப்பதால், அந் நகரத்திற்கு சூரிய ஒளி தொடர்ந்து கிடைத்தது.

அந்தக் காட்சியைப் போலவே கிறிஸ்தவ வாழ்க்கையும் இருக்க வேண்டுமென்று…

அவருடைய கரங்களுக்குள் பாதுகாவலுடன் இருத்தல்

எனது மகளுக்கு அறுவை சிகிச்சை முடிந்தபின், அவள் மீண்டும் சுய நினைவு அடைவதற்காக வைக்கப்பட்டிருந்த அறையில் அவளோடு கூட அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் கண்களை மெதுவாகத் திறந்த பொழுது, அவளது உடல் நலம் இல்லாததை உணர்ந்து அழ ஆரம்பித்தாள். அவளுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக, அவளது கரத்தை மெதுவாக தட்டிக்கொடுத்தேன். ஆனால் அவள் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள். பின்பு ஒரு செவிலியரின் உதவியுடன் அவளை படுக்கையிலிருந்து மெதுவாக என் மடிக்கு மாற்றினேன். நாளடைவில் அவள் முழுமையாக சுகம் பெற்றுவிடுவாள் என்று அவளுக்கு நினைப்பூட்டினேன்.…