வகை  |  odb

தேவனுக்குக் கரிசனை இல்லையா?

குடிபோதையில் வாகனத்தை ஓட்டினவன் காயமின்றித் தப்பித்துக்கொள்கிறான், ஆனால் அதே சமயம் அவனால் விபத்துக்குள்ளான, குடிபோதையில்லாத மனிதன் பயங்கரமாக காயப்படுகிறான். ஏன்? தீமை செய்கிறவர்கள் செழித்தோங்குகிறார்கள். நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் ஏன்? உங்களது வாழ்க்கையில் ஏற்படுகிற நிகழ்ச்சிகளைக் குறித்து அநேகமுறை நீங்கள் மனக்குழப்பமடைந்து “தேவன் என்னைக் குறித்து கரிசனைப்படுகிறாரா?” என்று கதறியுள்ளீர்கள்.

அநீதியும், கொடுமையும் கட்டுக்கு மிஞ்சி செல்லும் சூழ்நிலைகளை யூதாவில் கண்டபொழுது ஆபகூக் என்ற தீர்க்கன் இதே கேள்வியைக் கேட்டு மனதில் போராடினான். (ஆபகூக் 1:1-4) அவனது குழப்பமான நிலையில் தேவன் எப்பொழுதும் இந்த நிலையை…

கைவிடப்பட்டதாக உணர்தல்

C.S. லூயிஸ், ஸ்குரு டேப் கடிதங்கள் என்ற அவரது புத்தகத்தில் ஒரு மூத்த பிசாசும், ஒரு இளைய பிசாசும் ஒரு கிறிஸ்துவனை விசுவாசத்திலிருந்து விழவைக்க எந்தமுறையில் சோதிக்கலாம் என்று பேசிக்கொண்ட கற்பனை உரையாடலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அந்த இரு பிசாசுகளும் அந்த விசுவாசிக்கு தேவன்மேல் இருந்த விசுவாசத்தை அழித்துவிட விரும்பின. “ஏமாற்றப்பட்டு விடாதே. இந்த அண்டசராசரத்தில் தேவனைப் பற்றிய அனைத்து அடையாளங்களும் மறைந்து விட்டதுபோல் காணப்பட்டாலும், தேவன் அவனை ஏன் கைவிட்டுவிட்டார் என்ற கேள்வியை தனக்குள்ளே கேட்டுக்கொண்டாலும், தேவனுக்கு கீழ்ப்படிகிறவனாக அவன் இருந்தால் நாம்…

தேவனின் திசை காட்டும் கருவி

வட கரோலினாவிலிருந்து 300 மைல் தொலைவிலிருந்து 27 கடல் பயணிகளை சிறிய திசை காட்டும் கருவிகள் காப்பாற்றின. ஓய்வு பெற்ற வால்டிமார் செமினோவ் என்ற கடல் வியாபாரி அச்சமயத்தில் இளநிலைப் பொறியாளராக ss அல்கோ கைடு என்ற கப்பலில் பயணம் செய்தபொழுது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நீர் மூழ்கிக் கப்பலொன்று அவர் பயணம் செய்த கப்பலை நோக்கிச் சுட்டது அந்தக் கப்பல் சுடப்பட்டு தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்க ஆரம்பித்தது. செமினோவும் உடன்பயணிகளும் திசை காட்டும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த உயிர்காக்கும் படகுகளை கடலில் இறக்கினார்கள்.…

சொல்லும் செயலும்

எனது கல்லூரியில் எழுதும் பயிற்சி வகுப்பிலிருந்த ஒரு மாணவனிடமிருந்து வந்த மின்னஞ்சல் அவசரத் தன்மையை வெளிப்படுத்தினது. கல்லூரியின் இறுதிப்பருவத்திலிருந்த அவனுக்கு, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள சற்று உயர்ந்த மதிப்பெண்கள் தேவை என்பதை உணர்ந்தான். அதற்கு அவன் என்ன செய்ய இயலும், செய்ய வேண்டிய பாடசம்பந்தமான சில வேலைகளை அவன் செய்யத் தவறி இருந்தான். ஆகவே அவனுடைய மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்து விடுபட்ட வேலையை முடிக்கக் கூறினேன். “நன்றி அதனை உடனே செய்கிறேன்” என்று மாறுத்தரம் கூறினான்.

இரண்டு நாட்கள்…

இவ்விதமாய் அன்புகூர்ந்த தேவன்

முதல் உலகப்போர் ஆரம்பத்தின் நூறாம் ஆண்டு நினைவு நாள் பிரிட்டனில் 2014 ஜூலை 28ல் நினைவு கூரப்பட்டது. பிரிட்டனில் அநேக ஊடகங்களில் அநேக விவாதங்கள் குறுந்திரைப் படங்கள் மூலம் 4 ஆண்டுகள் நடந்த போரைப் பற்றி நினைவுபடுத்தின. உண்மையாகவே லண்டனில் இருந்த ஒரு பல்பொருள் அங்காடி பற்றி திரு. செல்ஃப்ரிட்ஜ் என்ற ஒளிப்பட நிகழ்ச்சி 1914ல் நடந்த ஒரு நிகழ்ச்சியை விளக்கிற்று. அதில் தரைப்படையில் சேருவதற்கென்று இளம் வாலிபர்கள் தன்னார்வத்துடன் வரிசையில் நிற்பது காண்பிக்கப்பட்டது. தங்களையே தியாகம் செய்த அந்த வாலிபர்களை எண்ணின பொழுது…

இரண்டு கரடிகள்

சில ஆண்டுகளுக்கு முன்பாக நானும் என் மனைவி கரோலினும் வாஷிங்டனிலுள்ள ரெய்னீர் என்ற மலையின் பக்கவாட்டில் கூடாரம் போட்டு சிலநாட்கள் தங்கியிருந்தோம். ஒருநாள் மாலையில் எங்களது கூடாரத்திற்கு திரும்பி வருகையில் புல்வெளியின் மத்தியில் இரண்டு ஆண் கரடிகள் ஒன்றுக்கொன்று காதுகளை பிடித்து இழுத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தன. நாங்கள் சற்றுநேரம் நின்று அதைக் கவனித்தோம்.

“அந்தப் பெண் கரடி எங்கே?” என்று நான் கேட்டேன்.

“ஓ, இருபது நிமிடங்களுக்கு முன்பே அது சென்றுவிட்;டது” என்று அவர் அசட்டையாக பதில் கூறினார். ஆகவே அப்பொழுது நடந்த…

தோட்டத்தில்

எனது முன்னோர்கள் மிக்சிகனில் முன்னோடிகளாகக் குடியேறினவர்களாவார்கள். அவர்களது குடும்பங்களைப் போஷிக்க நிலத்தை சுத்தப்படுத்தி, பண்படுத்தி தானியங்களைப் பயிரிட்டு தோட்டங்களை ஏற்படுத்தினார்கள். வேளாண்மை செய்யும் தொழில் அவர்களிடமிருந்து பல தலைமுறைக்கு கடத்தப்பட்டது. எனது தகப்பனார் மிக்சிகனிலுள்ள ஒரு பண்ணையில் வளர்ந்தார். அவர் தோட்டத் தொழிலை அதிகம் நேசித்தார். அதனால் எனக்குத் தோட்டத் தொழிலும், தோட்டத்திலிருந்த சத்துள்ள மண்ணின் வாசனையும் மிகவும் பிடித்தமாக இருந்தது. அழகிய பூக்களையும் வாசனை மிகுந்த ரோஜாச் செடிகளையும் வளர்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஓய்வு நேரப் பணியாகும். களைகள் மட்டும் இல்லாமல்…

என்னைத் தாங்கிப் பிடித்தல்

எனது பெற்றோரோடு சேர்ந்து குடும்பமாக சாலை வழியாக பயணம் செய்வதை நான் நிறுத்தினபொழுது, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வசித்து வந்த எனது தாத்தா, பாட்டியை சென்று பார்ப்பது மிகவும் அபூர்வமாகிவிட்டது. ஆகவே ஒருமுறை அவர்கள் வசித்து வந்த விஸ்கான்சிஸினிலுள்ள லேண்டு ஆஃப் லேக்ஸ் (Land of Lakes) என்ற சிற்றூருக்கு ஒரு விமானம் மூலம் சென்று நீண்ட வார விடுமுறை நாட்களை கழிக்க தீர்மானம் பண்ணினேன். நான் திரும்பி எனது ஊருக்குச் செல்ல விமான நிலையத்திற்கு சென்றபொழுது, விமானப் பயணம் செய்திராத எனது பாட்டி…

சுகந்தவாசனையும் ஒரு கடிதமும்

ஒவ்வொரு முறையும் ஒரு ரோஜாச் செடி அல்லது ஒரு பூங்கொத்தின் அருகில் செல்லும் பொழுதெல்லாம் ஒரு பூவை இழுத்து அதன் இனிய வாசனையை முகர்ந்துப் பார்ப்பதை என்னால் தவிர்க்க இயலாது. அப்பூக்களின் இனிய வாசனை என் இருதயத்தில் இனிய உணர்வுகளைத் தூண்டும்.

அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு கொரிந்து பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு, பவுல் அப்போஸ்தலன் கடிதம் எழுதினபொழுது, நாம் கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்களானதால் “எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”
(2 கொரி 2:14) என்று எழுதியுள்ளார். அவருடைய…