கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தல்
என் நண்பன் என்னிடம் “நான் ஒரு செயலர்” என்று கூறினான். இதையே மக்களிடம் கூறினால், அவர்கள் என்னை சற்று பரிதாபமாகப் பார்ப்பார்கள். ஆனால் நான் எதற்கு செயலராக இருக்கிறேன் என்று அறிந்து கொண்டால், என்னை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்” என்று கூறினான். வேறுவிதத்தில் கூறப்போனால் ஐசுவரியவான்கள் அல்லது பிரபலமிக்க மக்களைச் சார்ந்துள்ள பணிகளல்லாது, வேறு விதமான பணிகளைச் சமுதாயம் தரக்குறைவாகவே தீர்மானிக்கிறது.
எந்தவிதமான பணியாக இருந்தாலும், எப்படிப்பட்ட உலகப்பிரகாரமான எஜமானாக இருந்தாலும், தேவனுடைய பிள்ளைகள் நாம் இயேசுவுக்கே ஊழியம் செய்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். எபேசியர்…
மனித இனம் (ஓட்டம்)
அலார்ம் கடிகாரம் ஒலித்து நின்றது. இது மிகவும் சீக்கிரமாகத் தோன்றியது. முழுமையான ஓர் நாள் இன்னும் உங்களுக்கு முன் இருக்கிறது. வேலை செய்ய வேண்டும், நிர்ணயம் செய்யப்பட்ட காரியங்களை அதன் பிரகாரம் செய்து முடிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய மக்களை கவனிக்க வேண்டும். இதே போன்று அநேக காரியங்கள். ஆம் நீங்கள் தனிமையில் இல்லை. நம்மில் அநேகர் எதைச்செய்ய வேண்டும் என்று தெரியாது ஓர் காரியத்திலிருந்து மற்றோர் காரியத்தைச் செய்ய அங்கும் இங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருப்போம். அதனால்தான் நாம் ஓட்டப்பந்தயம் ஓடும் மனிதர் என்று…
தூரமான இடம்
டிஸ்டான் டா குன்ஹா என்ற தீவு தனிமைக்கு சிறந்து விளங்கும் ஓர் எடுத்துக்காட்டு உலகிலேயே மக்கள் வசிக்கும் மிக தூரமான தீவாகும். 288 மக்கள் அதைத் தங்கள் குடியிருப்பாகக் கொண்டிருப்பதற்கு நன்றி. இத்தீவு தென் அட்லாண்டின் சமுத்திரத்தில், தென் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு 1750 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. யாரையேனும் சந்திக்க வேண்டுமென்றால், விமானப்போக்குவரத்து வசதியில்லாததால் ஏழு நாட்கள் படகில் பிரயாணம் செய்ய வேண்டும்.
இயேசுவும், அவருடைய சீஷர்களும் ஆயிரத்திற்கும் அதிகமாக, பசியில் வாடிய மக்களை அற்புதமாய் போஷித்தது அப்படிப்பட்ட ஓர் தூரமான இடத்தில்தான். இயேசு…
அன்பு செலுத்தக் கற்றுக் கொள்ளுதல்
அன்பு, “உலகம் சுழல்வதை விட” அதிகம் செய்கிறது என்று ஓர் பழைய பாடல் சொல்கிறது. அன்பு நம்மை அதிகமாய் குறைபட்டுக் கொள்ளச் செய்யும். “பிறர் நம்மை பாராட்டாமல் இருக்கும் பொழுது நாம் ஏன் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும்? அன்பு செலுத்திவிட்டு பின் நான் ஏன் என்னையே புண்படுத்திக் கொள்ள வேண்டும்?” ஆனால் பவுல் அப்போஸ்தன் மிகவும் தெளிவான, எளிதான அன்பை விடாது தொடர்ந்து செயல்படுத்துவதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார்.” இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது, இவைகளில் அன்பே பெரியது” (1 கொரி.…
ஹூ-ஆ!
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத்தில் உள்ள படைகள் தங்கள் சம்மதத்தை தெரிவிக்க அடித்தொண்டையிலிருந்து உரத்த சத்தமாய் “ஹூ” என்று பதிலுரைப்பார்கள். அதன் உண்மையான அர்த்தம் வரலாற்றில் மறைந்து விட்டது. ஆனால் இவ்வார்த்தை (HUA) என்ற ஓர் சொற்றொடரின் முதல் எழுத்திலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை என்று சிலர் கூறுகிறார்கள். (HUA; H-Heard கேட்டேன்
U-understood விளங்கிக் கொண்டேன் and A Acknowledged ஏற்றுக் கொண்டேன்) கேட்டேன், விளங்கிக்கொண்டேன், ஏற்றுக்கொள்கிறேன் என்பது அதன் அர்த்தம். நான் முதல் முதலாக அடிப்படை பயிற்சியின் பொழுது இந்த வார்த்தையைக் கேட்டிருக்கிறேன்.…
அப்பா, பிதாவே
தந்தையர் தினத்தன்று அனுப்பப்படும் வாழ்த்து அட்டையில் இந்த விநோதமான ஒரு படம் இருந்தது. ஓர் தந்தை ஓர் கையால் புல்வெட்டும் இயந்திரத்தால் வெட்டிக்கொண்டு சென்றபொழுது, மறு கையால் சிறுபிள்ளைகளை வைத்துச் செல்லும் தள்ளுவண்டியை பின்னால் இழுத்துக் கொண்டு சென்றார். தள்ளுவண்டியில் அவருடைய மூன்று வயது மகள் அமர்ந்து கொண்டு தங்களுடைய தோட்டத்தை இயந்திர சத்தத்திற்கிடையில் மகிழ்ச்சியுடன் வலம் வந்தாள். இதுபாதுகாப்பற்ற ஓர் செயலாக இருந்தாலும், ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய முடியாது என்று யார் சொல்லக்கூடும்?
உங்களுக்கு ஓர் நல்ல தகப்பன் இருந்தால்,…
தோல்வியா அல்லது வெற்றியா?
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18ம் நாள் வாட்டாலூ யுத்தம் நினைவுகூரப்படும் நாள். அன்றைய வாட்டர்லூ இன்றைய பெல்ஜியம். 1815ம் ஆண்டு அன்றைய நாளில் நெப்போலியனின் பிரெஞ்சுப்படை, வெல்லிங்டன் பிரபு நடத்திச் சென்ற பன்னாட்டுப் படையினரால் தோற்கடிக்கப்பட்டது. “உங்களை விட பலமுள்ளவர்களால் நீங்கள் தோற்கடிக்கப்படும் பொழுதோ அல்லது உங்களால் எதிர்கொள்ள முடியாத மிகக் கஷ்டமான பிரச்சனையை நீங்கள் சந்திக்கும்பொழுதோ” அவற்றைக் குறிக்க “உங்கள் வாட்டர்லூவை சந்திக்க” என்ற சொற்றொடர் அப்பொழுதிலிருந்து பழக்கத்திற்கு வந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலைகள் நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்படும்பொழுது, இறுதியாக தோல்வி என்பது…
நெடுநேர தொடர் வாசிப்பு
கி.மு. 444 ஆண்டு ஏழாம் மாதத்தின் முதல் நாளில் சூரியன் உதித்தபோது, எஸ்றா மோசேயின் நியாயப்பிரமாணத்தை வாசிக்க ஆரம்பித்தான். (வேதத்தில் நாம் காணும் முதல் ஐந்து புத்தகங்கள்) எருசலேமில் மக்கள் முன்னால் எஸ்றா ஓர் மேடையில் நின்றுகொண்டு, அடுத்த ஆறுமணி நேரங்களுக்கு தொடர்ந்து வாசித்தான்.
தண்ணீர் வாசல் எனப்படும் நகரத்தின் வாசல் முகப்பில், ஆண்களும், பெண்களும், சிறுவரும் எக்காளப் பண்டிகையைக் கொண்டாட கூடிவந்திருந்தார்கள். அவர்களுக்கு தேவன் நியமித்த பண்டிகைகளில் இதுவும் ஒன்று. அவர்கள் கவனித்துக் கேட்டதன் விளைவாக நான்குவிதமான பின் விளைவுகள் அவர்களில் காணப்பட்டன.…
சில இணைப்புகள் தேவை
எங்கள் வீட்டில் “சில இணைப்புகள் தேவை” என்ற வார்த்தைகள் (எனக்கு) மிகவும் மனச் சோர்வையும் என் குடும்பத்தினருக்கு பெரும் வேடிக்கையாகவும் இருந்தது. எனக்கும், என் மனைவிக்கும் திருமணமான புதிதில், வீட்டில் சில பொருட்களைப் பழுது பார்ப்பேன், அது பேராபத்தை விளைவிக்கும். எங்கள் வீட்டு ஷவரின் கைப்பிடி சரியாக இயங்கவில்லை. நான் பழுதுபார்த்தேன். கைப்பிடி சரியானது. ஆனால் தண்ணீர் ஷவரில் வராமல் சுவர்களுக்கிடையில் ஓடினது. எங்களுக்குப் பிள்ளைகள் பிறந்தபின்பும் என் மனைவி செரிலிடம்,“இந்த சாதாரண விளையாட்டு சாமான்களை சரிசெய்ய “எனக்கு எந்தவித ஆலோசனையும் தேவை இல்லை”…