ஞானத்தினால் ஆச்சரியம்
'நான் அதிகமாக முதிர்வடையும்போது மிகவும் ஞானமுள்ளவளாகிறேன். சில சமயங்களில் நான் என் மகனிடத்தில் பேசும்பொழுது, உம்முடைய வார்த்தைகளே என் வாயிலிருந்து வருகிறது", என என் மகள் கூறினாள்.
என் மகளின் கள்ளங்கபடமற்ற இந்த பேச்சு என்னை சிரிக்க வைத்தது. இதேபோல என் பிள்ளைகளை வளர்க்கும்போதும், என் பெற்றோர்கள் என்னிடத்தில் உபயோகித்த வார்த்தைகளையே நானும் உபயோகித்தேன். நான் ஒரு தகப்பனாக மாறினபொழுது, என் பெற்றோர்களின் ஞானத்தைக்குறித்த எனது கருத்துக்கள் மாறியது. ஒரு சமயத்தில் 'முட்டாள்தனமானது", என்று நான் ஒதுக்கித் தள்ளினவைகள் எல்லாம் நான் நினைப்பதற்கும் மேலான ஞானமுள்ளது என்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன். இவைகளை நான் முதலில் அறிந்து கொள்ள முடியவில்லை.
வேதாகமம், 'தேவனுடைய பைத்தியமானது உலகில் மிகப்பெரிய ஞானமாயிருக்கிறது", என போதிக்கிறது (1 கொரி. 1:25)." தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று (வச. 21).
நம்மை ஆச்சரியப்பட வைக்கும் வழிகளை தேவன் நமக்காக எப்பொழுதும் வைத்திருக்கிறார். ஒரு வெற்றியுள்ள ராஜா இந்த உலகத்திற்கு வருவதற்கு பதிலாக, தேவனுடைய குமாரன் ஒரு பாடுகளுள்ள வேலையாளாக வந்து, தன்னை மிகவும் தாழ்மையான சிலுவைமரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அவர் மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் இவை நடந்தன.
தேவனுடைய ஞானத்தில், தாழ்மையானது பெருமைக்கும் மேல் மதிப்பிடப்படுகிறது. அன்பானது தகுதியில்லாத இரக்கம் மற்றும் கனிவிற்க்கு மேலாக மதிப்பிடப்படுகிறது. சிலுவையின் மூலமாக, நம்முடைய ஜெயிக்க முடியாத மேசியா, நம்மை மீட்கும்படி பிரதானமான பலியாக மாறினார் (எபி. 7:25).
இதனால், இரட்சிக்கப்படுகிறவர்கள் அவருக்குள்ளாக தங்கள் விசுவாசத்தை வைக்கக்கூடும்.

நீங்கள் ஓய்வெடுக்கவேண்டும்!
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளியிடம் மருத்துவர், 'நீங்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்கவேண்டும்", என அறிவுறுத்துகிறார். 'ஓய்வு?" நான் ஓய்வாகத்தான் இருக்கிறேன் என்று குழப்பத்தோடு பதிலளித்தார் வில்மர். அதே குழப்பத்தோடு, அவர் மிகவும் ஏளனமாக, 'நான் இதைவிட ஓய்வாக இருக்க வேண்டுமெனில், அது என்னுடைய மரணத்தின்போது தான்", என்று கூறினார்.
இதை இணைத்துப் பார்க்க முடியுமா? டாக்டரின் பலவிதமான ஆலோசனைகள் வில்பருக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், வில்பரின் பதில்கள் நியாயமானதாகத் தோன்றுகிறது. ஆனால், இந்தக் காட்சியானது நகைப்பிற்குரியதாகிறது. ஏனெனில், நாம் குழப்பமடையும்போது எவ்வாறு உணர்கிறோம்- நாம் சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையையே பயமுறுத்தக்கூடியதாக அமைகிறது.
நாம் பயங்கரமான சூழ்நிலையில் இருக்கும்போது, நமக்கு ஓய்வு தேவை என்ற ஆலோசனை நமக்கு ஏளனமாகப்படுகிறது. என் வாழ்வின் பயமுறுத்தும் பல சூழ்நிலைகள் என்னை இறுக்கும்போது, மரணக்கட்டுகள் (சங். 116:3) என்னைச் சுற்றிக் கடினமாக பிடித்து இழுக்கும்போது, என்னுடைய ஒவ்வொரு சித்தமும் அதற்கு எதிராகப் போராடவேண்டும் என்று நினைக்குமேயொழிய ஓய்வாக இருக்கவேண்டும் என்று நினைக்காது.
'அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்." (சங். 116:4). அப்பொழுது ஆச்சரியமாக ஏதோ ஒன்று எனக்கு நேரிடுகிறது. எனக்குள்ளாக இறுக்கப்பட்டிருக்கிற அந்த முடிச்சு இளகுகிறது (வச. 7). என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒரு சமாதானம் எனக்குள்ளாக விரைவாக ஊடுருவி வருகிறது. என்னைச் சுற்றியுள்ள ஆவியானவரின் பிரசன்னமானது என்னை ஆறுதல் படுத்தும்போது, நான் சுவிசேஷத்தின் இதயமான சத்தியத்தை நான் ஓரளவு புரிந்து கொள்கிறேன். அதாவது, நம்முடைய ஆண்டவரின் பலத்த புயத்திற்குள் நம்மை அர்ப்பணிக்கும் போது, நாம் சிறந்த முறையில் போராடமுடியும் என்ற சத்தியத்தைப் புரிந்து கொள்ளுகிறோம் (1 பேது. 5:6,7).

வேலையாளியின் இருதயம்
சமையல் வேலை, நிகழ்வுகளைத் திட்டமிடுதல், உணவு ஆலோசகர் மற்றும் செவிலி போன்ற பொறுப்புகளை நிறைவேற்றுகிறவள் தான் நவீனத் தாயார். 2016ல் ஏற்பட்ட கணக்கெடுப்பின்படி ஒரு சராசரித் தாயாரானவள் ஒரு வாரத்தில் 59-96 மணிநேரங்கள் குழந்தைக்கான வேலைகளில் ஈடுபடுகின்றாள் என்று கூறப்படுகின்றது. தாய்மார்கள் அதிகக்களைப்படைவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு தாய் என்கின்ற போது, அவள் குழந்தைக்காக அதிகநேரம் செலவழிக்கின்றாள் என்பதேயாகும். ஏனெனில், இவ்வுலகினை அறிந்து கொள்ள குழந்தைக்கு அதிக உதவி தேவைப்படுகின்றது.
என்னுடைய நாட்கள் நீண்டதாக நான் உணரும் போது மற்றவர்கள் மீதான அக்கறையே நான் நாட வேண்டிய முக்கியமான ஒன்று என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். பணியாளர்களை இயேசுவானவர் உயர்த்திக்காட்டும் பொழுது அதைக்குறித்த நம்பிக்கை எனக்குள் ஆழமாக உண்டாகிறது.
மாற்கு சுவிசேஷத்தில் சீடர்களுக்கு மத்தியில் பரலோக இராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று ஒரு வாக்குவாதம் உண்டாகிறது. இயேசுவானவர் அமைதியாக உட்கார்ந்து அவர்களுக்கு, 'எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்" (மாற். 9:35) என்று கூறுகிறார். பிறகு ஒரு சிறு பிள்ளையைக் கையில் எடுத்து, மற்றவர்களுக்கு, குறிப்பாக நம்மில் மிகவும் உதவியற்றவர்களுக்கு சேவை செய்வதைக்குறித்த உதாரணத்தைக் கற்பித்தார். (வச. 36,37).
கிறிஸ்துவின் பதிலானது, பரலோக இராஜ்ஜியத்தில் எது பெரியது என்பதை நமக்குத் தெளிவாக விளக்கிக்காட்டுகிறது.மற்றவர்களுக்கு மனமார்ந்த உதவிகளைச் செய்வதே அவருடைய தரமாக இருக்கிறது. ஊழியம் செய்வதைத் தெரிந்து கொண்டவர்கள்மேல், அவருடைய வல்லமையளிக்கும் பிரசன்னம் எப்பொழுதும் இருக்கும் (வச. 37). உங்கள் குடும்பத்திலோ அல்லது சமுதாயத்திலோ நீங்கள் ஊழியம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதிக உற்சாகத்தோடு அதைச் செய்யுங்கள். ஏனெனில், நீங்கள் ஊழியம் செய்யும் நேரத்தையும், முயற்சிகளையும் இயேசுவானவர் அதிகமாக கனப்படுத்த விரும்புகிறார்.

தீர்வுகளுக்கும் மேலான
என்னுடைய பேரப்பிள்ளைகளில் ஒருத்தி தன்னுடைய முயல் பொம்மையை எங்களுடைய நெருப்புமூட்டும் இடத்திற்கு அருகிலுள்ள கண்ணாடிக்குப் பக்கத்திலே கொண்டு போனாள். அதனால் அந்த பொம்மையின் மேலுள்ள லினென் துணியானது மிகவும் சுருங்கிப் போய் அந்த முயல் பொம்மை களையிழந்தது. கண்ணாடியும் பாதிக்கப்பட்டது. இறுதியாக, நெருப்புப் பகுதியை சீர்செய்ய வல்லுநர் ஒருவரின் ஆலோசனையின்படி, அந்தக் கண்ணாடியை புதிதானது போல் துடைத்துவிட்டோம். அதற்குப் பிறகு பஞ்சு நிரப்பப்பட்ட பொம்மைகளை அதற்கு அருகில் கொண்டு செல்வதைத் தவிர்த்துவிட்டோம்.
வேதாகமும் பல சமயங்களில் தீர்வுகளைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. வாழ்க்கையை எவ்வாறு எளிதாக வாழலாம் என்று கற்றுக்கொடுக்கிறது. இது உண்மையாக இருந்த போதிலும் கிறிஸ்துவை கனம் பண்ணும் வாழ்க்கையை எவ்விதம் வாழலாம் என்பதைக்குறித்து அதிகமாக போதிக்கிறது. அது மாத்திரம் இப்புத்தகத்தின் நோக்கமல்ல. மனிதனின் மிகப்பெரிய தேவையான பாவத்திலிருந்தும், தேவனிடமிருந்து நம்மைப் பரிக்கும் நித்திய ஆக்கினையிலிருந்தும் காப்பாற்றப்படுகிற மிகப்பெரிய ஒரு தீர்வினை போதிக்கிறது.
இரட்சிப்பின் வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்ட ஆதியாகமம் 3:15 முதல் புதிய நம்பிக்கையான புதிய வானம், புதிய பூமி (வெளி. 21:1-2) வரையிலும், தேவன், நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கவும், அவரோடு கூட உள்ள ஐக்கியத்தை சந்தோஷத்தோடே அனுபவிக்கவும் ஒரு நித்தியமான தேவதிட்டத்தை வைத்திருக்கிறார் என வேதாகமம் போதிக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும், ஒவ்வொரு ஆலோசனையிலும் நாம் எவ்விதம் வாழவேண்டும் என்பதை வேதாகமம் இயேசுவிற்கு நேராக நம்மை வழிநடத்துகிறது. அவரே நம்முடைய மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்கமுடியும்.
தேவனுடைய புத்தகத்தைத் திறக்கும்போதே, நாம் இயேசுவைக் குறித்தும், அவர் கொடுக்கின்ற பாதுகாப்பைக் குறித்தும், நாம் அவருடைய பிள்ளைகளாக எவ்வாறு வாழலாம் என்பதைக்குறித்தும் அறிந்து கொள்ளுகிறோம். எல்லாவற்றிற்கும் அவர் மிகப்பெரிய தீர்வினைக் கொடுக்கிறார்.

வாழ்க்கை மாறுகிறது
ஸ்டீபன் கிழக்கு லண்டனின் மோசமான பகுதியில் வளர்ந்து தன்னுடைய 10ஆவது வயதிலே குற்றவாளியானான். அவன், 'எல்லாரும் போதைப்பொருள் விற்று, ஏமாற்றுகிறவர்களாயிருந்து, கொள்ளையடித்து வாழ்பவர்களோடு சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை" எனக் கூறினான். ஆனால், அவன் இருபது வயதாகும் போது, அவன் கண்ட ஒரு கனவு அவன் வாழ்வையே மாற்றியது. 'ஸ்டீபன், நீ கொலை செய்தமைக்காக சிறைக்கு செல்லவிருக்கிறாய்", என்று தேவன் என்னிடம் கூறக்கேட்டேன். இந்த விளக்கமான கனவானது அவனுக்கு ஒரு எச்சரிப்பாக மாறி, அவனை தேவனுக்கு நேராகத் திருப்பி ஆண்டவரை ஏற்றுக்கொள்ள வைத்தது. பரிசுத்த ஆவியானவர் அவன் வாழ்வை மாற்றினார்.
ஸ்டீபன் ஒரு நிறுவனத்தை நிறுவி அதன்மூலம் விளையாட்டுப்போட்டிகளின் வாயிலாக, உள் பட்டணத்து பிள்ளைகளுக்கு ஒழுக்கம், மரியாதை மற்றும் சுத்தமான வாழ்க்கை போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தான். அந்தப் பிள்ளைகளோடு ஜெபித்து அவர்களைப் பயிற்றுவிப்பதின் மூலம் தேவனுடைய நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவந்தான். 'வழிதப்பிப்போன கனவுகளைத் திரும்பிக்கட்டுதல்" என அதற்குப் பெயரிட்டான்.
தேவனை நாடி நம்முடைய பழையவைகளை மறந்து வாழ்வோமானால்-நாமும் ஸ்டீபனைப்போல் ஆவோம். புதிய வழியான வாழ்க்கையைத் தழுவிக்கொள்ள பவுல் எபேசியருக்குக் கொடுத்த அறிவுரையின்படி நாமும் வாழலாம். நம்முடைய பழைய சுயமானது, 'ஏமாற்றுகின்ற இச்சைகளினால் பாதிக்கப்படும் பொழுது," நாம் தினந்தோறும் 'புதிய மனுஷனை தரித்துக் கொள்ளலாம்". அது தேவனுக்கு ஏற்ற அவரைப் போலாகும் சுபாவமாக மாறும் (எபே. 4:22,24). அவருடைய பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசையோடு, அவரைப் போல நம்மையும் மாற்றுவதற்கு, இந்த தொடர்ச்சியான சுத்திகரிப்பினைத் தழுவிக்கொள்ளலாம்.
ஸ்டீபன், 'என் வாழ்க்கையை மாற்றின விசுவாசமானது, ஒரு முக்கியமான அஸ்திபாரமாக எனக்கு அமைந்தது", என்று கூறுகிறார். இது உங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு உண்மையாகும்?