வகை  |  odb

கடக்க முடியாத தடை எதுவுமில்லை

ஆசிரியராகிய நான் எனது மாணவர்களை கள பயணதிற்காக ஒரு தடை பயிற்சிக்காக ஏற்பாடு செய்திருந்தேன். அங்குள்ள பல விளையாட்டுகளில் ஒன்றாக சுவர் ஏறுவதும் இருந்தது. அணைத்து மாணவர்களும் அதிலே பங்குபெறும்படியாக உற்சாகத்துடன் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு  ஏறினார்கள். அந்த எட்டு அடி சுவரை ஏறி சென்ற ஒவ்வொரு மாணவர்களும் பின் வரும் மாணவர்களை பின்னிட்டு பார்க்காதபடிக்கு அந்த கயிற்றின்மேல் முழு நம்பிக்கை வைத்து ஏற ஊக்குவித்தார்கள். ஆனால் அதிலே ஒரு மாணவிக்கு மட்டும் அந்த கயிற்றின்மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் மேலும் நமிக்கையில்லாமல் இருந்தது. "என்னாலே இதை செய்யமுடியாது என்று" நம்பிக்கையில்லாமல் பயத்துடன் கூறினாள். ஆனால் மற்ற மாணவர்கள் அவளை உற்சாகப்படுத்தி ஊக்குவித்ததினால் அவள் அந்த கையிற்றின்மேல் நம்பிக்கை வைத்து வெற்றிகரமாய் ஏறினாள்.

நாம் கடக்க முடியாது என்று நாம் நினைக்கும் பிரச்சினைகள் நமக்கு முன் வரும் போது, அதின் கூடவே சந்தேகங்களை ஏற்படுத்தும் பயமும் பாதுகாப்பற்ற சிந்தனைகளும் வரும். ஆனால் இவைகளின் நடுவே நம்மை திடப்படுத்தும் தேவனுடைய மகிமையும், நன்மையையும், சத்தியமும் பலமான காப்புகவசமாக விசுவாசத்தில் அடங்கும். இந்த நம்பிக்கையின் உறுதி நம் பழைய ஏற்பாட்டின் முன்னோர்களுக்கு தைரியத்தை உண்டாக்கியது. இப்பேர்ப்பட்ட நம்பிக்கை நாம் சிறிய நுணுக்கமான காரியங்கள் மேல் கவனம் செலுத்தாமல் தேவனுடைய நித்திய திட்டத்தைப்பற்றி சிந்திக்க கற்பிக்கிறது (எபி 11:1-13, 39). வரும் காலங்களில் நாம் பிரச்சனைகளை சந்திக்கும் விதத்தை மாற்றிக்கொண்டு, நமக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட மேலான நித்திய கண்ணோட்டத்தில் காண்போம்

(வச. 13-16). அடிக்கடி நாம் இதைப் போன்ற சூழ்நிலைகளை தனியாக சந்திக்கும்போது முழு நம்பிக்கையோடு ஆர்வத்துடன் அவரை தேடுவோம்.

வாழ்வின் கடினமான பாதைகளையும், செங்குத்தான படிகளை கடக்கும்போது தேவன் நம்மை விடுவிப்பார் என்கிற நம்பிக்கை நமக்கு அற்றுப்போகலாம். ஆனால் அவரோ எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்கிற நிச்சயத்தோடு, விசுவாசமாகிய பலத்த கயிற்றை  பிடித்துக்கொள்வோம். கடக்க முடியாதென்று நினைத்த பிரெச்சனைகளை கடக்கலாம்.

நெருப்பின் மத்தியில்

ஸ்பெயினில் ஒருமுறை ஏற்பட்ட காட்டுத்தீயானது ஐம்பதாயிரம் ஏக்கர் சுற்றுப்புறத்திலுள்ள மரங்களை பட்சித்து போட்டது. எனினும் அவைகளின் நடுவே நின்றுகொண்டிருந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட சைப்ரஸ் மரமோ தனது பிரகாசிப்பிக்கும் பச்சை நிறத்துடன் அழியாமல் நின்றுகொண்டிருந்தது. தண்ணீரை தனக்குள் தக்கவைத்துக்கொள்ளும் திறன் அந்த மரத்திற்கு இருந்ததால் அப்பேற்பட்ட தீயையும் தாங்கமுடிந்தது.

இதைபோல் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனை அரசாண்ட காலத்தில், ராஜாவின் கோபத்தினால்  மூன்று நண்பர்கள் நெருப்புக்குள் போடப்பட்டும் உயிர் பிழைத்தார்கள். ராஜா உருவாக்கின சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்க மறுத்து அவரை பார்த்து "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்"(வச . 17) என்று கூறினார்கள். இதைக்  கேட்ட ராஜா மிகவும் கோபத்துடன் அந்த அக்கினிச்சூளையின் சூட்டை ஏழு மடங்கு அதிகப்படுத்தக் கட்டளையிட்டார். 

ராஜாவினுடைய கட்டளையின்படி அந்த மூன்று நண்பர்களையும் அக்கினியில் போட சென்ற காவலாளிகள் அந்தநெருப்பின் அனலில் கொல்லப்பட்டார்கள். அவ்வளவாக நெருப்பின் அனல் அதிகரிக்கப்பட்டது. ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவோ நெருப்புக்குள்ளாக கட்டவிழ்க்கப்பட்டு எந்த பாதிப்புமில்லாமல் நடந்துகொண்டிருப்பதை அங்குள்ள அனைவரும் பார்த்தார்கள். அவர்களோடு நாலாவதாக ஒருவர் இருப்பதையும் கண்டார்கள். அவர் தேவபுத்திரனின் சாயலை உடையவராய் இருப்பதுபோல் கண்டார்கள் (வச. 25). இன்று பல வேதவல்லுநர்கள் அது இயேசுவின் முன் அவதாரம் என்று நம்புகிறார்கள்.  

இதைபோல் அச்சுறுத்தல்களும்  சோதனைகளும் நமக்கு வரும்போது இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். நம்மை அழுத்தமூட்டும் சூழ்நிலைகள் நமக்கு நேரிட்டால் நாம் பயப்படவேண்டாம். தேவன் நம்மை எப்போது, எப்படி காப்பர் என்று நமக்கு தெரியவில்லை என்றாலும், அவர் நம் கூடவே எப்போதும் இருக்கிறார் என்பது நிச்சயம். நாம் கடந்துவரும் எல்லா நெருப்புகளிலும் அவரில் விசுவாசமாய் இருக்க நமக்கு அவர் பெலன் தருவார்.

தேவன் பேசும்போது

வேதாகமத்தை மொழிபெயர்பவர் லில்லி . ஒரு முறை தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு தனது தேசத்திற்கு திரும்பியபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தினார்கள். தனது கைபேசியில் உள்ள புதிய ஏற்பாட்டின் ஆடியோ பதிவை கண்டதால் அதையும் பறிமுதல் செய்து அடுத்த இரண்டு மணிநேரமாக கேள்விமேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த ஆடியோவை சோதனை செய்யும்படியாக அதை கேட்கத் தொடங்கினார்கள், அப்பொழுது பதிவில் மத்தேயு 7:1-2 வாசிக்க கேட்டார்கள் " நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்." இந்த வார்த்தைகளை தனது சொந்த மொழியில் கேட்டபோது அங்குள்ள அதிகாரிகளில் ஒருவருக்கு வியர்க்கத் தொடங்கியது. இறுதியில் லில்லி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அந்த அதிகாரி தன் மனதில் என்ன நினைத்தார்  என்று நமக்கு தெரியாது. ஆனால் ஒன்றை நாம் அறிவோம், அவர் (தேவன்) வாயிலிருந்து புறப்படும் வசனம் அவர் விரும்பியதை நிச்சயமாக நிறைவேற்றுகிறது (ஏசா. 55:11). ஏசாயா இந்த நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை தேவ மக்களுக்கு அவர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கும்போது வாக்குத்தத்தமாக உரைத்தார். அவர்களுக்கு நம்பிக்கை தரும் படி அவர் வாயிலிருந்து புறப்படும் எந்த வார்த்தையும் முளைக்கச்செய்கிற  உறைந்த மழையைப்போல் - அவர் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருக்கிறது.

தேவன் மேல்  உள்ள நம்பிக்கையை மேம்படுத்தும்படி இந்த வசனங்களை வாசிக்கலாம். லில்லியுடைய சூழ்நிலையைப்போல் நாமும் கடந்து செய்வோமானால், கிரியை செய்கிற தேவன் நமக்கு உண்டென்று நிச்சயித்து அவர்மேல் நம்பிக்கை வைப்போம். 

நீண்ட தூர பயணம்

பெஞ்சமின் தன்னுடைய   சக ஊழியர்கள் ஒவ்வொருவராக பதவி உயர்வு அடைந்ததை பார்க்கும்போது தன்னை அறியாமல் பொறாமை அடைவதை உணர்ந்தார். சில சமயங்களில் அவர் நண்பர்களே அவரிடம் வந்து "நீ தான் அந்த உயர்வை பெற்றிருக்க வேண்டும், நீ தான் அதற்க்கு தகுதியானவன், ஏன் இன்னும் உனக்கு கிடைக்கவில்லை" என்று கேட்பதுண்டு. பெஞ்சமினோ தன் வேலைக்குறித்த கவலைகளை தேவனிடம் விட்டுவிட்டு, "தேவன் சித்தம் இதுவானால் அவர் எனக்கு தந்த வேலையை தொடர்ந்து செய்வேன்" என்று முடிவெடுத்தான்.  

பல வருடத்திற்கு பிறகு பெஞ்சமினுக்கு பதவி முன்னேற்றம் கிடைத்தது. அவருக்கு பல வருடம் அனுபவம் இருந்ததால் அவரது புதிய பொறுப்புகளை நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்ள முடிந்தது. அவர் கூட வேலை செய்பவர்களிடம் தனது மரியாதையை காப்பாற்றவும் முடிந்தது. இதற்கிடையில் குறைந்த வருட அனுபவத்துடன் பதவி உயர்வை பெற்றவர்கள் அவர்களின் பொறுப்புகளை தக்கவைத்துக்கொள்ள மிகவும் பிரயாசப்பட்டார்கள். பெஞ்சமினோ, தேவன் தன்னை  இந்த பதவிக்கு ஆயத்தம்பண்ணும்படி தேவன் அவனை இஸ்ரவேல் மக்களை போல் நீண்ட தூர பயணித்தில் எடுத்து சென்றார் என்று புரிந்து கொண்டார்.

தேவன் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து நடத்தி சென்றபோது (யாத். 13:17-18) அவர் நீண்ட தூர பிரயாணத்தை தெரிந்துகொண்டார். ஏனெனில் கானானுக்கு செல்லும் குறுக்குவழி அபாயம் நிறைந்ததாக காணப்பட்டது. வரப்போகும் போராட்டத்திற்கு அந்த நீண்ட தூர பிரயாணமே அவர்களின் சரீரத்தையும், மனதையும் அவர்களின் ஆவியையும் பலப்படுத்தினது.

எப்போதும் குறுக்கு வழிகள் சிறந்தது அல்ல. சில சமயங்களில் தேவன் நம் வாழ்வின் வேலையிலோ, நாம் எடுக்கும் முயற்சிகளிலோ நீண்ட தூர பயணத்தை எடுக்கும்படி வழி செய்வார். ஏனெனில் அதுவே நம் முன் இருக்கும் பாதைக்கு நம்மை தகுதி படுத்துகிறது. நாம் நினைக்கும் காரியங்கள் உடனடியாக நிறைவேறவில்லை என்றால், நம்மை பொறுப்பெடுத்து வழி நடத்தும் தேவன் மேல் நம்பிக்கை வைப்போம்.

வீட்டிற்கு திரும்புவோம்

ராணுவ வீரரான வால்டர் டிக்சன் தன் திருமணம் முடிந்து ஐந்து நாளில் போருக்கு திரும்ப சென்றுவிட்டார். சில மாதங்களில் தன் மனைவியின் கடிதங்கள் நிறைந்த அவரது மேலுறையை போர்க்களத்தில் கண்டுபிடித்தார்கள். இதனிமித்தமாக ராணுவ அதிகாரிகள் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரின் மனைவியிடம் தகவல் தெரிவித்தார்கள். ஆனால் இரண்டரை வருடங்களாக அவர் போர்கைதியாக சிறைபிடிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நிமிடமும் தப்பிப்பதைகுறித்து சிந்தித்துகொண்டிருப்பார். ஐந்து முறை தப்பிக்க முயற்சி செய்த போதும் மறுபடியும் பிடிக்கப்பட்டார். இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் வீடு திரும்பும்போது அனைவருடைய அதிர்ச்சியை நினைத்து பாருங்கள்.

சிறைபிடிக்கப்பட்டு, வீட்டிலிருந்து தூரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதின் கஷ்டம் தேவ பிள்ளைகளுக்கு தெரியும். அவர்கள் தேவனுக்கு எதிர்த்து நின்றது நிமித்தம் நாடுகடத்தப்பட்டார்கள். அனுதினமும் காலையில் எழுந்து வீடுதிரும்ப வேண்டும் என்று ஏங்கினார்கள், ஆனால் அவர்கள் தப்பிப்போகும்படி அவர்களுக்கு ஒரு வழியும் கிடைக்கவில்லை. ஆனால் தேவனோ அவர்களை மறக்கவில்லை என்று அவர்களுக்கு வாக்குத்தத்தம் கூறினார் "அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்"(சகரியா 10: 6). அவர்களின் வீடாமுயற்சியினால் அல்ல, கர்த்தரே  அவருடைய இரகத்தினால் அவர்களுடைய தேவையை சந்தித்தார் "நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்.....தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள்" (வச. 8,9).

சில சமயங்களில் நம் பாவத்தினாலேயோ அல்லது கடினமான சூழ்நிலைகளில் நாம் தேவனிடமிருந்து மிகவும் தூரம் சென்றது போல் தோன்றினாலும் அவர் நம்மை மறப்பதில்லை என்பது நிச்சயம். நம் வாஞ்சைகளை அவர் அறிவார், அதை அறிந்து நம்மை அழைப்பார். அதற்கு நாம் செவிகொடுப்போமானால் அவர் இருக்கும் இடமாகிய நம் வீட்டிற்க்கு திரும்புவோம்.