கி.மு. 27 ல், ரோமானிய ஆட்சியாளரான ஆக்டேவியன், தனது அதிகாரங்களை ஒப்படைக்க செனட் முன் வந்தார். அவர் ஒரு உள்நாட்டுப் போரை வென்று, உலகின் அந்த பிராந்தியத்தின் ஒரே ஆட்சியாளராகி ஒரு பேரரசரைப் போல செயல்பட்டு வந்தார். ஆயினும், அப்படிப்பட்ட அதிகாரம் சந்தேகத்துக்குரியதாக பார்க்கப்பட்டதாக அவர் அறிந்திருந்தார். அதனால், ஆக்டேவியன் தனது அதிகாரங்களை செனட்டுக்கு முன்பாக ஒப்படைத்து, நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாக செயல்பட சாபதமெடுத்தார். அவர்களின் பதில் ? ரோமானிய செனட், ஆட்சியாளரை ஒரு குடிமைக் கிரீடத்தால் முடிசூட்டி, ரோமானிய மக்களின் சேவைக்காரன் என்று பெயரிட்டு கௌரவித்தது. அவருக்கு அகஸ்டஸ் – “மகா பெரியவர்” – என்ற பெயரும் வழங்கப்பட்டது.

இயேசு தன்னை வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்ததைக் குறித்து பவுல் எழுதுகிறார். அகஸ்டஸ் தனது அதிகாரங்களை ஒப்படைப்பதைப் போலவே செயல்பட்டார். ஆனால் அதை தனது சொந்த லாபத்திற்காக செய்துக் கொண்டிருந்தார். இயேசு “ மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரயபரியந்தமும் கீழ்படிந்தவராகித், தம்மைத் தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:8). ரோமானிய சிலுவையில் மரணம் என்பது அவமானம் மற்றும் அவமானத்தின் மோசமான வடிவமாகும்.

இன்று மக்கள் “ஊழியத் தலைமையை” ஒரு நல்லொழுக்கமாகப் புகழ்வதற்கு காரணம் இயேசுவே. தாழ்மை ஒரு கிரேக்க மற்றும் ரோமானிய நல்லொழுக்கம் அல்ல. இயேசு நமக்காக சிலுவையில்

மரித்ததால், அவரே உண்மையான ஊழியக்காரன். அவரே உண்மையான இரட்சகர்.

நம்மை இரட்சிக்கும்படியாக கிறிஸ்து ஒரு அடிமையானார். உண்மையிலேயே மிகப்பெரிய பரிசாகிய, இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவன், இவைகளை நாம் பெற்றுக்கொள்ளும்படியாக அவர் “தம்மைத் தாமே வெறுமையாக்கினார்”.