குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்
மரியாள் சுமந்துக்கொண்டிருக்கும் குழந்தையின் வரவை எதிர்நோக்கியிருக்கும்போது யோசேப்பிடம் இது ஒரு தேவைப்படாத உரையாடலாயிருந்தது: 'யோசேப்பு, நாம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?" பிரசவத்திற்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்களைப் போல அல்லாமல், இந்தக் குழந்தையை அவர்கள் என்னவென்று அழைப்பார்கள் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.
மரியாளையும் யோசேப்பையும் சந்தித்த தேவதூதர்கள் குழந்தையின் பெயர் இயேசு என்பதை அவ்விருவருக்கும் அறிவித்தனர் (மத். 1:20-21, லூக். 1:30-31). யோசேப்புக்குத் தோன்றின தூதன் இயேசு என்ற பெயருக்கு 'அவர் தம்முடைய ஜனங்களை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அர்த்தம்" எனக் கூறினார்.
அவர் இம்மானுவேல் என்றும் அழைக்கப்படுவார் (ஏசா. 7:14), அதற்கு 'தேவன் நம்மோடிருக்கிறார்" என்று அர்த்தம். ஏனென்றால் மனித உருவில் தேவன் - துணிகளில் சுற்றப்பட்டிருக்கும் தெய்வம். 'ஆலோசனைக் கர்த்தா",; 'வல்லமையுள்ள தேவன்", 'நித்தியப் பிதா" (9:6) என்னும் அனேக பெயர்களையும் ஏசாயா தீர்க்கதரிசி சூட்டியுள்ளார். ஏனென்றால் அவர் அவை அனைத்திற்கும் உரியவர்.
புதிய குழந்தைக்கு பெயரிடுவது எப்போதுமே உற்சாகமாக இருக்கும். ஆனால் 'மேசியா என்று அழைக்கப்படும் இயேசு" (மத். 1:16) போன்ற வல்லமையுள்ள, ஆச்சரியமான, உலகத்தையே மாற்றக் கூடிய பெயர் வேறு எந்த குழந்தைக்கும் இருந்ததில்லை. 'நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக்" கூப்பிடுவது நமக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. அவராலேயன்றி வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை (அப். 4:12).
இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் அவரைத் துதித்து, அவர் நமக்கு எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

பசுமையைத் தேடுங்கள்
கடுமையாக குரல் கொடுக்கும் கேப்டன் மற்றொரு தாமதத்தை அறிவித்தார். ஏற்கனவே இரண்டு மணி நேரம் அசையாமல் அமர்ந்திருந்த விமானத்தில், நெரிசலான என் ஜன்னல் இருக்கையில் விரக்தியுடன் துடித்தேன். நீண்ட வேலை வாரத்திற்குப் பிறகு வீட்டில் கிடைக்கும் ஆறுதலுக்கும் ஓய்வுக்கும் நான் ஏங்கினேன். இன்னும் எவ்வளவு காலம்? மழைத்துளி மூடிய ஜன்னலுக்கு வெளியே நான் பார்த்தப்போது, ஓடுபாதைகள் சந்தித்த சிமென்ட் இடைவெளியில் பச்சைப் புல் ஒரு தனிமையான முக்கோணமாக வளர்வதை நான் கவனித்தேன். அத்தனை கான்கிரீட்டுக்கும் நடுவில் ஒரு விசித்திரமான காட்சி.
அனுபவம் மிக்க மேய்ப்பரான தாவீது தன் ஆடுகளுக்கு பசுமையான மேய்ச்சலை கட்டும் தேவையை நன்கு அறிந்திருந்தார். சங்கீதம் 23ல், தான் இஸ்ரவேலின் ராஜாவாக இருக்கும்போது சோர்வுற்ற நேரங்களில் அவரை முன்னோக்கிக் கொண்டுச் செல்லும் ஒரு முக்கியமான பாடத்தை அவர் எழுதினார். 'கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து ... நீதியின் பாதைகளில் நடத்துகிறார்" (வச. 1-3).
ஒரு விமான நிலையத்தின் தார்ச் சாலையின் கான்கிரீட் காட்டில், எனது இலக்கிலிருந்து தாமதமாகி, ஆறுதலும் ஓய்வும் இல்லததை உணர்ந்தப்போது, என்னுடைய நல்ல மேய்ப்யரான தேவன், ஒரு பச்சையான ஒட்டுக்கு நேராய் என் கண்களைத் திருப்பினார். அவருடனான உறவில், அவர் கொடுக்கும் ஓய்வை, நான் எங்கிருந்தாலும், அதை கவனித்து நுழைந்தால் அதைப் கண்டுக்கொள்ள முடியும்.
பசுமையானதைத் தேடுங்கள் - பாடம் பல ஆண்டுகளாக நிடித்தது. அது அங்கு இருக்கிறது. தேவன் நம் வாழ்க்கையில் இருக்கும்போது நாம் குறைவுபடுவதில்லை. அவர் நம்மைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து நம்முடைய ஆத்துமாவைத் தேற்றுகிறார்.

நீங்கள் யாரை அணிந்துக்கொண்டிருக்கிறீர்கள்
அர்ஜென்டினாவின் பெண்கள் கூடைப்பந்து அணியினர் தவறான சீருடைகளை அணிந்துக்கொண்டு போட்டிக்கு வந்தனர். அவர்களின் அடர்நீல நிற ஜெர்சிகள் கொலம்பியாவின் அடர் நீல நிற ஜெர்சிகளுக்கு மிகவும் ஒத்திருந்தன. அதுமல்லாமல் அவர்கள் வருகை தந்த அணியாயிருந்ததினால் அவர்கள் வெள்ளை நிற ஜெர்சியை அணிந்திருக்க வேண்டும். மாற்று சீருடைகளை பெற்றுக்கொள்ளவும் மற்றும் அதனை மாற்றிக்கொள்ளவும் நேரமில்லாததால் அவர்கள் விளையாட்டை இழக்க நேரிட்டது. எதிர்காலத்தில் அர்ஜென்டினா நிச்சயம் அவர்கள் அணிந்திருப்பதை இருமுறை சரிபார்க்கும்.
சகரியா தீர்க்கதரிசியின் காலத்தில், தேவன் அவருக்கு ஒரு தரிசனத்தைக் காட்டினார். அதில் பிரதான ஆசாரியனான யோசுவா அழுக்கு உடைகளைத் தரித்துக்கொண்டு தேவனுக்கு முன்பாக வந்தார். சாத்தான் பரிகாசம் செய்து சுட்டிக்காட்டினான். அவர் தகுதியற்றவர்! விளையாட்டு முடிந்தது! ஆனால் உடையை மாற்றிக்கொள்ள நேரமிருந்தது. தேவன் சாத்தானைக் கடிந்துக்கொண்டார். யோசுவாவின் அழுக்கு வஸ்திரங்களை அகற்றும்டபடி தம்முடைய தூதருக்கு கட்டளையிட்டார். தேவன் யோசுவாவை நோக்கி 'பார். நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து உனக்கு சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்" என்றார் (சக. 3:3).
ஆதாமின் பாவத்தின் துர்நாற்றத்தை அணிந்துக்கொண்டு இவ்வுலகத்தில் வந்தோம். நம்முடைய சொந்த பாவத்தையும் இதோடு அடுக்கிக்கொண்டோம். நாம் நம்முடைய அழுக்கு வஸ்திரத்தோடு இருந்தால் நம்முடைய வாழ்க்கை விளையாட்டை இழந்து விடுவோம். நம்முடைய பாவத்தால் நாம் வெறுப்படைந்து தேவனிடம் திரும்பினால் அவர் நம்மை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலும் தம்மை மற்றும் தம்முடைய நீதியினால் நம்மை அணிவிப்பார். நாம் யாரை அணிந்துக் கொண்டிருக்கிடிறோம் என்று சரிபார்க்க வேண்டிய நேரம் இது. 'தி சாலிட் ராக்" என்ற ஆங்கிலப் பாடலின் இறுதி சரணம் நாம் எவ்வாறு வென்றோம் என்று விளக்குகிறது. 'அவர் எக்காள சத்தத்தோடு வரும்போது... ஓ! நான் அவரிடத்தில் காணப்படுவேன், ஃ அவருடைய நீதியின் ஆடை மட்டுமே அணிந்து, ஃ குற்றமில்லாமல் சிங்காசனத்திற்கு முன் நிற்பேன்".

சிலுவையின் மொழி
'சொல்வதினால் மட்டும் அவர்கள் யார் என்பதை ஒருவர் அறிந்துக்கொள்ளுவதில்லை. அவைகள் காட்டப்படவேண்டும்" என்று பாஸ்டர் டிம் கெல்லர் கூறுகிறார். இது செயல்கள் சொற்களைவிட சத்தமாக பேசுகின்றன என்ற பழமொழியின் ஒரு பயன்பாடு. தங்கள் துணைகள் தங்களை கவனிப்பதும், தங்களிடம் அன்பு செலுத்துவதின் மூலமே பாராட்டப்படுகின்றனர் என்று வாழ்க்கைத்துணைகள் காண்பிக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அன்பாக கவனிப்பதன் மூலம் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று காண்பிக்கின்றனர். பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்களை அவர்களுடைய வளர்ச்சியில் முதலீடு செய்வதன் மூலம் திறனைக் காட்டுகிறார்கள். மற்றும் அது அப்படியே நீடிக்கிறது. அதே போல வேறுபட்ட செயலானது மக்களுக்கு வலிமிகுந்த இருண்ட செய்திகளை கொடுக்கும்.
ஊலகத்தில் உள்ள அனைத்து செயல்-அடிப்படையிலான செய்திகளிலும் மிக முக்கியமானது ஒன்று உள்ளது. தேவனின் பார்வையில் நாம் யார் என்றுக் காட்ட விரும்பும்போது சிலுவையில் அவர் செய்த செயல்களைத் தவிர வேறு எதையும் பார்க்கவேண்டியதில்லை. ரோமர் 5:8ல் பவுல் இவ்வாறாக கூறுகிறார், 'நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்". நாம் யாரென்று சிலுவை நமக்கு காண்பிக்கிறது : தேன் தம்முடைய ஒரே பேரான குமாரனைத் தந்தருளி இவ்வளவாய் நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார் (யோவா. 3:16).
உடைந்துப்போன மக்களின் உடைந்த கலாச்சாரத்தின் கலப்பு செய்திகளுக்கும், குழப்பமான செயல்களுக்கும் எதிராக தேவனுடைய இதயத்தின் செய்தி மிகத் தெளிவாக இருக்கிறது. நீங்கள் யார்? உங்களை மீட்டெடுக்க தன்னுடைய குமாரனையே கொடுத்து, தேவனால் அதிகமாக நேசிக்கப்பட்வர்கள் நீங்களே. அவர் உங்களுக்காக செலுத்திய விலைக்கிரயத்தை கருத்தில் கொள்ளுங்கள், அற்புதமான உண்மை என்னவென்றால், அவரைப் பொறுத்தவரை, நீங்கள் எப்போதும் மதிப்புக்குரியவர்கள்.

கொஞ்சம் பின்னால் விடுங்கள்
ஐம்பது பைசா, ஒன்று அல்லது இரண்டு ரூபாய், எப்போதாவது ஐந்து அல்லது பத்து ரூபாய். அதுதான் அவரது படுக்கைக்கு அருகில் நீங்கள் காண்பீர்கள். அவர் ஒவ்வொரு மாலையும் தன்னுடைய பாக்கெட்டை காலி செய்து உள்ளிருப்பவைகளை அங்கே விட்டுவிடுவார், ஏனென்றால் அவருக்குத் தெரியும் அவர்கள் அங்கேள வருவார்கள் என்று அவர்கள் என்றால் அவருடைய பேரக்குழைந்தகள். பல வருடங்களாக குழந்தைகள் வந்தவுடன் அவருடைய படுக்கைக்கு அருகில் செல்வதை கற்றுக்கொண்டிருந்தனர். அவர் அந்தச் சில்லறைக் காசுகளை வங்கியிலோ அல்லது சேமிப்பு கணக்கிலோ சேமித்து வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவைகளைத் தன் வீட்டிலுள்ள விலைமதிப்பற்ற சிறியவர்களுக்காக அதை விட்டுச் செல்வதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.
இதேப்போன்ற மனநிலைத்தான் லேவியராகமம் 23ல் நிலத்திலிருந்து அறுவடையைக் கொண்டுவரும்போதும் இருந்தது. தேவன், மோசேவின் மூலமாக, மக்களுக்கு மிகவும் எதிர்மறையான ஒன்றைச் சொன்னார் 'வயலின் ஓரத்திலுள்ளதை முற்றிலுமாக அறுக்காமலும் சிந்திக்கிடக்கிற கதிர்களை முற்றிலும் பொறுக்காமலும் இருங்கள்" (வச. 22). முக்கியமாக 'அவைகளை விட்டுவிடவேண்டும்". இந்த கட்டளை, தேவன் முதலிடத்தில் அறுவடைக்குப் பின்னால் இருந்தார் என்பதையும் எளியவர்களுக்கும், பரதேசிகளுக்கும் உணவளிக்க தம்முடைய ஜனங்களைப் பயன்படுத்தினார் என்றும் மக்கள் நினைவுகூர்ந்தனர்.
இப்படிப்பட்ட ஒரு சிந்தனை நிச்சயமாக நம் உலகின் விதிமுறை அல்ல. ஆனால் இப்படிப்பட்ட மனநிலைத் தான் தேவனின் நன்றியுள்ள பிள்ளைகளின் தன்மையாகும். அவர் உதாரத்துவமுள்ள இருதயத்தில் மகிழ்கிறார். பெரும்பாலாக அது உங்கள் அல்லது என் மூலமாய் வருகிறது.