சமூக உரிமை ஆர்வலர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 1968-ல் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சிகாகோவில் உள்ள தனது கல்லூரி ஓய்வறையின் கூரைக்கு ஏறினதை பற்றி “சுவர்களை உடைத்தல்” என்ற தன்னுடைய புத்தகத்தில், கிளென் கேஹ்ரேய்ன் எழுதுகிறார். “துப்பாக்கிச் சூட்டின் சத்தம் பெரிய கட்டிடங்களில் இருந்து முன்னும் பின்னுமாக எதிரொலித்தது, விரைவில் எனது கூரையிலிருந்து ஒரு பரந்த, இன்னும் கொடூரமான காட்சியை பார்த்தேன். . . . இரண்டு வருடங்களுக்குள் விஸ்கான்சின்-ன் சோளக்காட்டுக்குள் இருந்து சிக்காகோவின் உள் நகரத்தின் போர் மண்டலத்திற்கு நான் எப்படி வந்தேன்?”. இயேசுவின் மீதும் தனது பின்னணியிலிருந்து வேறுபட்ட மற்ற மக்களின் மீதான அன்பினால் கட்டாயப்படுத்தப்பட்ட க்ளென், சிகாகோவின் மேற்குப் பகுதியில் வசித்து, அங்கு 2011-ல் தான் இறக்கும் வரை உணவு, உடை, தங்குமிடம் மற்றும் பிற சேவைகளை மக்களுக்கு வழங்கும் ஒரு ஊழியத்தை நடத்தி வந்தார்.

தங்களைவிட வேறுபட்டவர்களைத் தழுவிக்கொள்ள வேண்டிய அவசியத்தை ஈடுசெய்த இயேசுவின் விசுவாசிகளின் முயற்சிகளை க்ளெனின் வாழ்க்கை பிரதிபலிக்கிறது. வழித்தப்பிபோன மனிதகுலத்தை மீட்கும் திட்டத்தில் யூதர்கள் மட்டுமல்லாமல் புறஜாதியினரும் சேர்த்துக்கொள்ள பட்டிருக்கிறார்கள் என்பது பவுலின் போதனையிலும் எடுத்துக்காட்டிலிருந்தும் ரோம விசுவாசிகள் கண்டார்கள் ( ரோமர் 15:8-12). மற்றவர்களை ஏற்றுக்கொள்ளும் அவருடைய எடுத்துக்காட்டை பின்பற்ற விசுவாசிகள் அழைக்கப்படுகிறார்கள் (வச 7); “ஏகசிந்தையோடும் ஒரே குரலோடும்” (வச 6) தேவனை மகிமைப்படுத்த அழைக்கப்பட்டவர்கள் மத்தியில் பாரபட்சத்திற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், தடைகளைத் தாண்டி சுவர்களை உடைக்கவும், அனைவரையும் அன்புடன் அரவணைக்கவும் தேவன் உங்களுக்கு உதவும்படி கேளுங்கள். ஏற்றுக்கொள்ளும் மரபை நமக்குப் பின் விட்டுச்செல்ல முயற்சிப்போம்.