வகை  |  odb

சரியான சொற்கள்

கடந்த ஆண்டுகளில், பல எழுத்தாளர்கள், விசுவாசம் என்ற வார்த்தையின் "சொற்பொருளை" புதியதாகப் பார்க்கும்படி விசுவாசிகளை வலியுறுத்தியுள்ளனர். ஒரு எழுத்தாளர், இறையியல் ரீதியாக மேன்மையான விசுவாச வார்த்தைகள் கூட அதிகப்படியான பிரபல்யத்தாலும் மற்றும் அதிகப்படியான பயன்பாட்டாலும் அவற்றின் தாக்கத்தை இழக்க நேரிடும் என்று உதாரணமாக வலியுறுத்தினார், சுவிசேஷத்தின் ஆழத்தையும், தேவன் நமது தேவையாய் இருக்கிறார் என்பதன் தொடர்பை இழக்கிறோம். அது நிகழும்போது, ​​விசுவாசத்தின் மொழியை “தொடக்கத்திலிருந்து”  கற்க்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார், முதன்முறையாக நற்செய்தியைக் காணும் வரை நம் அனுமானங்களை விட்டுவிடலாம்.

"புதிதாக தேவனைப் பேச" கற்றுக்கொள்வதற்கான அழைப்பு, பவுலை நினைவூட்டுகிறது, அவர் தனது வாழ்க்கையை "எல்லா மக்களுக்கும் எல்லாவற்றையும்" அர்ப்பணித்தார். . . சுவிசேஷத்திற்காக ”(1 கொரிந்தியர் 9: 22–23). இயேசு செய்ததை எவ்வாறு எடுத்துரைக்கலாம் என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் ஒருபோதும் கருதவில்லை. அதற்கு பதிலாக, அவர் தொடர்ச்சியான ஜெபத்தை நம்பியிருந்தார், மேலும் சக விசுவாசிகளும் அவருக்காக ஜெபிக்கும்படியும் - நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள “சரியான வார்த்தைகளை” (எபேசியர் 6:19 ) கண்டுபிடிக்க உதவுமாறும் கெஞ்சினார்.

கிறிஸ்துவில் உள்ள ஒவ்வொரு விசுவாசியும் அவருடைய அன்பில் ஆழமாக வேரூன்ற ஒவ்வொரு நாளும் தாழ்மையும் ஏற்றுக்கொள்ளுதலும் தேவை என்பதட் அப்போஸ்தலர்கள் அறிந்திருந்தனர் (3: 16–17). ஒவ்வொரு நாளும் தேவனின்  அன்பில் நம் வேரூன்றுவதனால் மட்டுமே, அவருடைய கிருபையின் மீது சார்ந்திருப்பதைப் பற்றி அதிகம் அறிகிறோம், அவர் நமக்காகச் செய்ததைப் பற்றிய ஆச்சரியமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள சரியான சொற்களைக் கண்டுபிடிக்கிறோம்.

கனமான ஆனால் நம்பிக்கையான

பீனட்ஸ் என்ற துண்டு நகைச்சுவை தொடரில், மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம் லூசி ஐந்து சென்டுக்கு "மனநல உதவி" என்று விளம்பரம் செய்தார். லினஸ் அவளது அலுவலகத்திற்கு தனது வழியைக் கண்டுபிடித்தார் மற்றும் அவரது "ஆழ்ந்த மனச்சோர்வை" ஒப்புக் கொண்டார். அவரது நிலை குறித்து அவர் என்ன செய்ய முடியும் என்று அவர் அவளிடம் கேட்டபோது, ​​லூசியின் விரைவான பதில், “அந்த நிலையிலிருந்து வெளிவரும்படியாக ! தயவுசெய்து ஐந்து சென்டுகள்” என்றார்.

இத்தகைய இலகுவான பொழுதுபோக்கு அப்போதைய தருணத்திற்கு புன்னகையைத் தரும் அதே வேளையில், நிஜ வாழ்க்கையில் நம்மைப் பிடிக்கக்கூடிய சோகமும், இருளும் அவ்வளவு எளிதில் நிராகரிக்கப்படுவதில்லை. நம்பிக்கையற்ற தன்மையும் மற்றும் விரக்தியின் உணர்வுகளும்  உண்மையானவை, சில சமயங்களில் தொழில்முறை கவனம் தேவை.

உண்மையான வேதனையை நிவர்த்தி செய்ய லூசியின் ஆலோசனை உதவாது. இருப்பினும், 88-ஆம் சங்கீதத்தின் ஆசிரியர் அறிவுறுத்துதலையும் மற்றும் நம்பிக்கையூட்டும் கருத்துகளையும் வழங்குகிறார். ஒரு லாரி சுமை பிரச்சனைகள் அவரது வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. எனவே, கலங்கமில்லா நேர்மையுடன், அவர் தனது இருதயத்தை தேவனிடம்  ஊற்றினார். "என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளாத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது." (வச. 3). "என்னை பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்" (வச. 6). "இருள் என் நெருங்கிய நண்பனாதது" (வச. 18). சங்கீதக்காரனின் வலியைக் கொண்டு நாம் கேட்கிறோம், உணர்கிறோம், அடையாளம் காணலாம். ஆனாலும், அது அல்ல. அவரது புலம்பல் நம்பிக்கையுடன் உள்ளது. “ என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன். என் விண்ணப்பம் உமது சமூகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். ”(வச. 1-2; வி.வி 9, 13 ஐ காண்க). கனமான விஷயங்கள் வர கூடும் ஆலோசனை மற்றும் மருத்துவ பராமரிப்பு போன்ற நடைமுறை நடவடிக்கைகள் தேவைப்படலாம். ஆனால் தேவன் மீதான நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள்.

உங்களுக்கு யாரை தெரியும்?

2019 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சார்லி வாண்டர்மீர் தனது எண்பத்து நான்கு வயதில் இறந்தார். பல பந்தான்டுகளாக, அவர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சார்லி மாமா என்று அறியப்பட்டார், தேசிய வானொலி ஒளிபரப்பு சில்டரன்ஸ் பைபிள் ஹவர்-ன் தொகுப்பாளராக இருந்தார். சார்லி  மாமா நித்தியத்திற்கு எடுத்து கொள்ளபடுவதர்கு முந்தைய நாள் அவரது நல்ல நண்பரிடம் கூறினார் "என்ன தெரியும் என்பது அல்ல, யாரை தெரியும் என்பதே. நிச்சயமாக, நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தான் பேசுகிறேன்."

அவர் தனது வாழ்க்கையின் முடிவை எதிர்கொண்டபோதும், சார்லி மாமாவுக்கு இயேசுவைப் பற்றியும், மக்கள் அவரை இரட்சகராகப் பெற வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேச முடியவில்லை.

அப்போஸ்தலன் பவுல் இயேசுவை அறிவது அவருடைய மிக முக்கியமான பணியாகக் கருதினார்: “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், ...... அவருக்காக எல்லாவற்றையும் குப்பையுமாக எண்ணுகிறேன்”(பிலிப்பியர் 3: 8–11). இயேசுவை நாம் எப்படி அறிவோம்? "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயால் அறிக்கையிட்டு,தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (ரோமர் 10: 9).

இயேசுவைப் பற்றிய உண்மைகளை நாம் அறிந்திருக்கலாம், தேவாலயத்தைப் பற்றிய அனைத்தையும் நாம் அறிந்திருக்கலாம், வேதத்தை பற்றி கூட நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இயேசுவை இரட்சகராக அறிந்து கொள்வதற்கான ஒரே வழி, இரட்சிபு எனும் இலவச பரிசை ஏற்றுக்கொள்வதாகும். அவர்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவர்.

அக்கினியினால் தூண்டப்படுதல்

சோர்வுற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள், காலை உணவிற்காக ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட்டபோது, பணியாளர் இவர்கள் செய்திகளில் தோன்றினவர் என்று அடையாளம் கண்டு, அவர்கள் ஒரு கிடங்கின் தீயை எதிர்த்துப் ஒரு இரவு முழுவதும் போராடினார்கள்  என்பதை உணர்ந்தார். தனது பாராட்டுக்களைக் காட்ட , அவர் அவர்களின் ரசீதில் ஒரு குறிப்பை எழுதினார், “உங்கள் காலை உணவு இன்று என்னிடம் உள்ளது. நன்றி . . . மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காகவும், எல்லோரும் விட்டு ஓடும்  இடங்களுக்கு ஓடியதற்காகவும் . . . . நெருப்பால் தூண்டப்பட்டு, தைரியத்தால் இயக்கப்பட்டீர்கள், நீங்கள் எவ்வளவு சிறந்த ஒரு உதாரணம்." 

பழைய ஏற்பாட்டில், மூன்று இளைஞர்களின் செயல்களில் தைரியத்தின் ஒரு உதாரணத்தைக் காண்கிறோம்: சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ (தானியேல் 3). பாபிலோனிய ராஜாவின் சிலையை  வணங்குவதற்கான கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, இந்த இளைஞர்கள் தைரியமாக அதை  மறுத்ததன் மூலம் தேவன் மீதுள்ள அன்பைக் வெளிப்படுத்தினர். அவர்களின் தண்டனை அக்கினிச்சூளைக்குள் வீசப்பட வேண்டும் என்பதே. ஆனாலும் அந்த இளைஞர்கள் பின்வாங்கவில்லை: “நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை,…பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை. (வச. 17-18).     

தேவன் அவர்களை மீட்டார், அவர்களுடன் நெருப்பிலேயும் கூட உலாவினார் (வச. 25-27). இன்று நம்முடைய தீக்கனையான சோதனைகளிலும், தொல்லைகளிலும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்ற உறுதி நமக்கும் இருக்கிறது. அவரால் முடியும்.

இயேசுவின் பிரபலமாகாத யோசனைகள்

பதினைந்து ஆண்டுகளாக, மைக் பர்டன் தனது சிறிய நகரத்தில் நடத்திக்கொண்டிருந்த நினைவைவிட்டு நீங்காத கடையில் வெறுப்பு நிறைந்த கூட்டங்களை நடத்தினார். ஆனால் 2012-ல் அவரது ஈடுபாட்டை அவரது மனைவி கேள்வி கேட்கத் தொடங்கியபோது, ​​அவரது இதயம் மென்மையாக்கப்பட்டது. தனது இனவெறி கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை அவர் உணர்ந்தார், இனி ஒருபோதும் அப்படிப்பட்ட நபராக அவர் இருக்க விரும்பவில்லை. தங்கள் உறுப்பினர்களில் ஒருவரது குடியிருப்பில் அவர்கள் வாடகைக்கு வாழ்ந்துக் கொண்டிருந்தனர் அந்த குடியிருப்பில் இருந்த்து அவர்கள்  குடும்பத்தினரை உதைத்து போராளி குழு பதிலடி கொடுத்தது.

உதவிக்காக அவர் எங்கே போனார்? ஆச்சரியப்படும் விதமாக, எற்கெனவே சண்டையிட்ட ஒரு உள்ளூர் கருப்பின போதகரிடம் சென்றார். போதகரும் அவரது சபை மக்களும் மைக்கின் குடும்பத்திற்கு சில காலம் தங்கும் வசதி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். அவர் ஏன் உதவ ஒப்புக்கொண்டார் என்று கேட்டபோது, ​​பாஸ்டர் கென்னடி விளக்கினார், “இயேசு கிறிஸ்து மிகவும் பிரபலமற்ற சில காரியங்களைச் செய்தார். உதவி செய்ய வேண்டிய நேரம் வரும்போது, ​​நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்யுங்கள். ” பின்னர் மைக் ஒரு முறை கென்னடியின் தேவாலயத்தில் பேசினார் அப்போது தான் வெறுப்பை பரப்பினதர்காக கறுப்பின சமூகத்திடம் மன்னிப்பு கோரினார்.

மலைப்பிரசங்கத்தில் செல்வாக்கற்ற சில யோசனைகளை இயேசு கற்பித்தார்: “உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு . . . . உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைத் துன்பபடுத்துகிரவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (மத்தேயு 5:42, 44). தேவனின்  அழைப்பைப் பின்பற்றுவதற்கான தலைகீழ் வழி அது. இது பலவீனம் போல் தோன்றினாலும், அது உண்மையில் தேவனின்  பலத்தை கொண்டு செயல்படுவது.

நமக்கு கற்பித்தவரே அவர் எதிர்பார்க்கும் விதத்தில் இந்த தலைகீழான வாழ்க்கையை வாழ்வதற்கான பெலனை கொடுப்பவர்.