
விவேகமான ஆலோசனையைக் கேட்பது
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு அரசியல்வாதியைப் பிரியப்படுத்த விரும்புவதாகக் கண்டார். எனவே அவர் சில யூனியன் ராணுவ படைவகுப்புகளை மாற்றுவதற்கான கட்டளையை வெளியிட்டார். போர் குழுவின் செயலாளர் எட்வின் ஸ்டாண்டன் இந்த உத்தரவைப் பெற்றபோது, அதை நிறைவேற்ற அவர் மறுத்துவிட்டார். ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று அவர் கூறினார். ஸ்டாண்டன் கூறியதை லிங்கனிடம் கூறினார்கள், அவர் பதிலளித்தார்: “நான் ஒரு முட்டாள் என்று ஸ்டாண்டன் சொன்னால், நான் அப்படியாக தான் இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் எப்போதும் சரியானவர்; நான் என்னை சரிசெய்துக் கொள்கிறேன்.” இரண்டு பேரும் பேசினப்போது, ஜனாதிபதி தனது முடிவு ஒரு மோசமான தவறு என்பதை விரைவாக உணர்ந்தார். தயக்கமின்றி அவர் அதைத் திரும்பப் பெற்றார். ஸ்டாண்டன் லிங்கனை ஒரு முட்டாள் என்று அழைத்தபோதிலும், ஸ்டாண்டன் அவருடன் உடன்படாதபோது ஜனாதிபதி தனது தவறான முடிவை பிடித்துக்கொண்டு இல்லாதபடி, அதற்கு பதிலாக, லிங்கன் ஆலோசனையைக் கேட்டு, அதைக் கருத்தில்கொண்டு, மனதை மாற்றிக்கொண்டதின் மூலம் புத்திசாலி என நிரூபித்தார்.
ஞானமான ஆலோசனையைக் கேட்காத ஒருவரை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? (1 இராஜாக்கள் 12:1-11 ஐ காண்க.) இது எரிச்சலூட்டுகிறதல்லவா? அல்லது, இன்னும் தனிப்பட்ட முறையில், நீங்கள் எப்போதாவது ஆலோசனையைக் கேட்க மறுத்திருக்கிறீர்களா? நீதிமொழிகள் 12:15 கூறுவது போல், “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்கு செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்கு செவிக்கொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.” மக்கள் எப்போதுமே சரியாக இருப்பார்கள் என்று கூறமுடியாது, அது நமக்கும் அது பொருந்தும்! எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் மட்டுமே விதிவிலக்கு என்று முட்டாள்கள் கருதுகிறார்கள். அதற்கு பதிலாக, நாம் ஆரம்பத்தில் உடன்படவில்லை என்றாலும், தெய்வீக ஞானத்தைக் கடைபிடிப்போம்; மற்றவர்களின் ஞானமான ஆலோசனையைக் கேட்போம். சில சமயங்களில் தேவன் நம்முடைய நன்மைக்காகவே அவ்வாறு செயல்படுகிறார் (வச. 2).

நமக்கு மேல் பாடுவது
ஒரு இளம் தந்தை தனது ஆண் குழந்தையை கைகளில் பிடித்து, அவனிடம் பாடி, இனிமையான தாளத்தில் ஆட்டினார். குழந்தைக்கு காது கேட்கும் திறன் இல்லாதிருந்தது, எனவே அந்த பாடலின் மெட்டையோ அல்லது சொற்களையோ அதனால் கேட்க முடியவில்லை. ஆயினும் தந்தை அழகான, கனிவான அன்பில் தனது மகனை நோக்கி தொடர்ந்து பாடினார். அவரது முயற்சிகளுக்கு பலனாக அவரது பிள்ளையிடமிருந்து ஒரு மகிழ்ச்சியான புன்னகை பதிலாகக் கிடைத்தது.
தந்தை-மகன் பரிமாற்றத்தின் பிம்பங்களுக்கும் செப்பனியாவின் வார்த்தைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பழைய ஏற்பாட்டின் இந்த தீர்க்கதரிசி, தேவன் உன்பேரில் கெம்பீரமாய் களிகூருவார் என்று கூறுகிறார் (செப்பனியா 3:17). தேவன் தம்முடைய அன்புக்குரிய மக்களுக்கு அவர்களின் ஆக்கினைகளை அகற்றி, சத்துருக்களை விலக்குவது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறார் (வச.15). இனி அவர்கள் பயப்பட தேவையில்லை, அதற்கு பதிலாக மகிழ்ந்து களிகூரலாம் என்று செப்பனியா கூறுகிறார்.
இயேசு கிறிஸ்துவின் தியாகத்தினால் மீட்கப்பட்ட தேவ பிள்ளைகளாகிய நாம் சில சமயங்களில் தேவன் நமக்காய் பாடும் தெய்வீக அன்பிற்கு செவிகொடுக்க விரும்புவதும் முயற்சிப்பதும் இல்லை. அவர் நம்மீது அதிக அன்பு கொண்டிருப்பது அந்த இளம் தந்தையைப் போன்றது. அவருடைய மகனால் கேட்க முடியாத போதிலும் அவனிடம் அன்பாகப் பாடினார். அவர் நமது தண்டனையை சுமந்து கொண்டார். நாம் மகிழ்ச்சியடைய மேலும் காரணத்தைத் தருகிறார். அவருடைய குரலில் சந்தோஷம் சத்தமாக ஒலிப்பதைக் கேட்க நாம் இன்னும் அருகில் நெருக்கமாக சென்று கேட்க முயற்சி செய்யலாம். பிதாவே, உங்கள் அன்பான மெட்டுக்களை கேட்க மற்றும் உங்கள் கைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதை அனுபவிக்க எங்களுக்கு உதவும்.

இயற்கையை கவனித்தல்
நானும் என் நண்பரும் எனக்கு பிடித்த நடைபயிற்சி இடத்தை சமீபத்தில் பார்வையிட்டோம். காற்று வீசும் மலையில் ஏறி, காட்டுப்பூக்களின் தோட்டத்தை கடந்து, உயரமான பைன் மரக் காடுகளுக்குள் சென்று, பின்னர் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி, அங்கே ஒரு கணம் நின்றோம். மேகங்கள் எங்களுக்கு மேலே மென்மையாக மிதந்தன. அருகில் ஒரு சிறு ஊற்று ஓடியது. பறவைகள் பாடும் ஒலி மட்டுமே அங்கு ஒலித்தது. அதையெல்லாம் உள்ளார அனுபவித்துக்கொண்டு, நானும் என் நண்பனும் பதினைந்து நிமிடங்கள் அமைதியாக அங்கே நின்றோம்.
அன்றைய நாளின் இந்த அனுபவம் எங்களுக்கு ஆழ்ந்த சிகிச்சையை போல் இருந்தது. ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி, இயற்கையைப் பற்றி நிதானித்து சிந்திப்பவர்கள் அதிக அளவு மகிழ்ச்சியையும், குறைந்த அளவிலான பதட்டத்தையும், பூமியைப் பாதுகாப்பதற்கான அதிக விருப்பத்தையும் தெரிவிக்கிறார்கள். காட்டின் வழியாக நடந்து செல்வது மட்டும் போதாது; நீங்கள் மேகங்களைப் பார்க்க வேண்டும்; பறவைகளின் ஓசையைக் கேட்கவேண்டும். இயற்கையில் வசிப்பது மட்டுமல்ல; அதை உற்று கவனிப்பதும் மிகவும் அவசியம்.
இயற்கையின் நன்மைகளுக்கு ஆன்மீக காரணம் இருக்க முடியுமா? படைப்பு தேவனின் வல்லமையும் அவரது தன்மையையும் வெளிப்படுத்துகிறது என்று பவுல் கூறுகிறார் (ரோமர் 1:20). தேவன் யோபுவிடம் அவரது பிரசன்னத்தை உணர சமுத்திரத்தையும், வானத்தையும், நட்சத்திரங்களையும் பார்க்கும்படி சொன்னார் (யோபு 38-39). “ஆகாயத்து பட்சிகளை” மற்றும் “காட்டுப் புஷ்பங்களை” பற்றி சிந்தித்துப் பார்ப்பது தேவனின் பாதுகாப்பை வெளிப்படுத்துவதோடு பதட்டத்தையும் குறைக்கும் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 6:25-30). வேதத்தில், இயற்கையை உற்று நோக்குவது ஒரு ஆவிக்குரிய நடைமுறையாய் காண்பிக்கப்பட்டுள்ளது.
இயற்கையானது நம்மை ஏன் மிகவும் நேர்மறையாக பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு காரணம் என்னவென்றால், இயற்கையை கவனிப்பதன் மூலம், அதைப் படைத்த தேவனை பற்றியும் அவர் நம்மை கண்ணோக்குகிறார் என்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.

அவருக்கு சொந்தமானவர்கள்
அவளும் அவளது கணவரும் தங்கள் குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டைப் பெற்றபோது ஷெபா மகிழ்ச்சியுடன் அழுதாள், தத்தெடுப்பு சட்டப்பூர்வமாகக்கப்பட்டது என்பதை என்னி. இப்போதிருந்து மீனா எப்போதுமே அவர்களின் மகளாக இருப்பாள், என்டென்றும் அவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பாள். ஷெபா சட்ட செயல்முறையை யோசித்தபோது , நாம் இயேசுவின் குடும்பத்தின் அங்கமாகும் போது நடக்கும் "உண்மை பரிமாற்றத்தையும்" அவள் எண்ணினாள்: "இனி நாம் பாவம் மற்றும் முறிவின் பிறப்புரிமையால் இழுக்கப்படாமல்" மாறாக, அவள் தொடர்ந்தாள், தேவனுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்படும்போது தேவனுடைய ராஜ்யத்தின் பூரனத்தில் சட்டப்பூர்வமாக நுழைகிறோம்.
அப்போஸ்தலன் பவுலின் நாட்களில், ஒரு ரோமானிய குடும்பம் ஒரு மகனைத் தத்தெடுத்தால், அவருடைய சட்டபூர்வமான நிலை முற்றிலும் மாறும். அவனது பழைய வாழ்க்கையிலிருந்த எந்தவொரு கடன்களும் ரத்து செய்யப்படும், மேலும் அவன் தனது புதிய குடும்பத்தின் அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் பெறுவான். இந்த புதிய அந்தஸ்து அவர்களுக்கும் பொருந்தும் என்பதை இயேசுவின் விசுவாசிக்கிற ரோமானிய விசுவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்பினார் . இனி ஒருபோதும் அவர்கள் பாவத்திற்கும் கண்டனத்திற்கும் கட்டுப்பட்டவர்களல்ல, ஆனால் இப்போது அவர்கள் “ஆவியின் படி” வாகிறார்கள் (ரோமர் 8: 4). மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் (வச. 14-15). அவர்கள் பரலோகத்தின் குடிமக்களாக மாறியபோது அவர்களின் சட்ட நிலை மாறியது.
இரட்சிப்பின் பரிசை நாம் பெற்றிருந்தால், நாமும் தேவனின் பிள்ளைகள், அவருடைய ராஜ்யத்தின் வாரிசுகள், கிறிஸ்துவோடு ஐக்கியப்படுகிறோம். பரிசாகிய இயேசு தன்னை தான் பலியாக கொடுத்ததின் மூலம் நம் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாம் இனி பயத்திலோ அல்லது கண்டனத்திலோ வாழத் தேவையில்லை.
