வகை  |  odb

உறுதியான மறுப்பு

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது. ஜெர்மானிய  நாசிப்படைகள், ப்ரான்ஸ் ஜகார்ஸ்டேட்டரை இழுத்துக் கொண்டுவந்து அடிப்படை இராணுவப் பயிற்சி கொடுத்தனர். பயிற்சியின்போது அடால்ஃப் ஹிட்லருக்கு உண்மையாயிருக்கும்படிக்கான உறுதிமொழி எடுக்க விரும்பாமல் தவிர்த்தான். எனவே அவனை அவனுடைய பண்ணைக்குத் திருப்பி அனுப்பினர். ஆனால் சிலநாட்களில் யுத்தத்திற்கு வரும்படி அவனுக்கு அழைப்பு வந்தது. ஜெர்மானிய நாசியினரின் கொள்கையையும் யூத இனப்படுகொலையையும் ஏற்கமறுத்த ஜகார்ஸ்டேட்டர், தேவனுக்கு உண்மையாயிருக்க தீர்மானித்து, நாசி படையோடு சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட மறுத்தான். அவனுடைய மனைவி மற்றும் மூன்று மகள்களும் நிர்க்கதியாய் விடப்பட்டு, ஜகார்ஸ்டேட்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

மரணத்தின் பிடியில் நிறுத்தப்பட்டு ஆண்டாண்டுகாலமாய் கிறிஸ்துவை மறுதலிக்கும்படிக்கு கட்டாயப்படுத்தப்பட்ட பல உண்மைக் கிறிஸ்தவர்கள் அதை செய்யாமல் உறுதியாய் நின்றனர். அதில் ஒன்றுதான் தானியேலின் சம்பவம். “எந்த மனுஷனாகிலும்... ராஜாவாகிய உம்மைத் தவிர எந்த தேவனையானாலும்” சேவித்தால் அவனை சிங்கக் கெபியில் போடவேண்டும் என்றும் கட்டளை அதிகாரப்பூர்வமாய் வெளியிடப்பட்டபோதும், தானியேல் கர்த்தருக்கு உண்மையாயிருந்தான். “தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (வச. 10). தீர்க்கதரிசி தேவனிடத்தில் முழங்காற்படியிட்டு, என்ன வந்தாலும் சரியென்று தேவனை மட்டும் சார்ந்துகொண்டான். 

சிலவேளைகளில் நம்முடைய தேர்ந்தெடுப்பு தெளிவாயிருக்கும். நம்மைச் சுற்றிலுமிருக்கிற மக்கள் இதைச் செய்யுங்கள் என்று நம்மை தூண்டினாலும், நம்முடைய பேரும் புகழும், சுகவாழ்வும் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும், நாம் தேவனுக்கு கீழ்ப்படிவதிலிருந்து பின்வாங்காமல் இருப்போம். அது விலையுயர்ந்த ஆசீர்வாதங்களாயிருந்தாலும் நம்முடைய மறுப்பைத் தெரியப்படுத்துவோம்.

தேவனுடைய மீட்பின் வழி

ஆங்கில இசையின் புகழ்பெற்ற “சிறந்த நாடகக் கலைஞன்” என்ற பாடலானது, அதின் முக்கிய கதாபாத்திரத்தினால், தன் குடும்பத்தையும் சிநேகிதர்களையும் காயப்படுத்தியதைக் குறித்து சுயஉணர்வு அடைந்து பாடப்படுகிறது. அந்த பாடல் தன் சொந்த வீட்டிற்கு திரும்புவதின் மகிழ்ச்சியையும், தன்னிடத்தில் உள்ளதே போதுமானது என்ற நிறைவையும் கண்டறிவதாக அமைந்துள்ளது. 

ஓசியா புத்தகமும் அதேபோன்று தான் முடிகிறது. அதில் தன்னிடமாய் திரும்புபவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் தருவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். புத்தகத்தின் பெரும்பான்மை, தேவனுக்கும் அவருடைய ஜனத்திற்குமான உறவை துரோகம் செய்யும் ஒரு மனைவியோடு ஒப்பிட்டு, தேவனை நேசிக்கவும் அவருக்காய் வாழவும் தவறின இஸ்ரவேலின் தோல்வியை முன்வைக்கிறது. 

14ஆம் அதிகாரத்தில் தேவனை ஏமாற்றியதை எண்ணி இருதயம் உடைக்கப்பட்டவர்களாய் அவரிடத்தில் திரும்புபவர்களுக்கு, தேவனுடைய அளவில்லாத அன்பு, கிருபை மற்றும் மீட்பு ஆகியவைகள் இலவசம் என்னும் நம்பிக்கையின் செய்தி முன்வைக்கப்படுகிறது (வச. 1-3). “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்” என்றும் “அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்” என்றும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 4). தேவனுடைய கிருபை பனியைப்போல் பொழிந்து, லீலிப் புஷ்பத்தைப்போலவும் தானிய விளைச்சலைப்போலவும் செழிக்கப்பண்ணி, சீர்படுத்தமுடியாத உறவை மீண்டும் புதுப்பித்து திருப்பதியாக்குகிறது (வச. 5-7). 

நாம் யாரையாவது காயப்படுத்தினதுண்டானால், அல்லது நம்முடைய வாழ்வில் தேவனுடைய இரக்கத்தை நமக்குச் சாதகமாய் பயன்படுத்திக்கொண்டாலோ, நமக்கு அளிக்கப்பட்ட நல்ல வரங்களை காலாகாலத்திற்கும் பாழாக்குகிறோம். ஆனால் தாழ்மையோடு அவரிடத்திற்குத் திரும்பினால், அவருடைய அன்பு எப்போதும் நம்மை அரவணைத்து, நம்முடைய வாழ்க்கையை சீரமைப்பதை நாம் பார்க்கமுடியும்.

பாரபட்சமும் மன்னிப்பும்

அநீதியை எதிர்க்கும்படியான பிரசங்கத்தைக் கேட்டவுடன் ஒரு சபை விசுவாசி போதகரிடம் வந்து, கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டார். ஏனென்றால், தங்கள் திருச்சபைக்கு கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் போதகராக வருவதை விரும்பாததினால், தான் பாரபட்சத்துடன் செயல்பட்டதாகவும், அதினால் அந்த போதகருக்கு தான் ஓட்டுப்போடாததையும் எண்ணி மனம் வருந்தினார். “அதற்காக என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். இந்த பாரபட்சம் மற்றும் ஜாதி வெறி போன்ற குப்பைகள் என் பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கக்கூடாது. நான் உங்களுக்கு ஓட்டுப் போடாமல் தவறு செய்துவிட்டேன்” என்று வருந்தினார். கண்ணீருடனான அவருடைய பாவ அறிக்கை, போதகரின் கண்ணீரோடு கூடிய மன்னிப்பை வாங்கித் தந்தது. தொடர்ந்த வாரத்தில், மனந்திரும்பிய இந்த விசுவாசியின் சாட்சியைக் கேட்டு திருச்சபை மகிழ்ச்சியடைந்தது. 

இயேசுவின் சீஷரும் ஆதித்திருச்சபையின் மூத்த தலைவருமான பேதுருவும் புறஜாதி மக்களைக் குறித்த தன்னுடைய பாரபட்ச சிந்தையை மாற்றவேண்டியிருந்தது. தீட்டாய் கருதப்பட்ட புறஜாதி மக்களுடன் உட்கார்ந்து புசிப்பதும் குடிப்பதும், சமுதாய மற்றும் மார்க்க ரீதியாய் அனுமதிக்கப்படவில்லை. பேதுருவும், “அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” (அப்போஸ்தலர் 10:28) என்று சொல்லுகிறார். அந்த நம்பிக்கையை மாற்றி, “எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும்” (வச. 28) சொல்லாதபடிக்கு மனமாற்றப்பட்ட பேதுருவுக்கு தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அதை வெளிப்படுத்தியிருக்கவேண்டும் (வச. 9-23). 

வேதாகமத்தின் போதனைகள், ஆவியானவரின் உணர்த்துதல் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்டு தேவன் தொடர்ச்சியாக நம் உள்ளத்தில் கிரியை செய்து, மற்றவர்களைக் குறித்த நம் பாரபட்ச சிந்தையை மாற்றுகிறார். “தேவன் பாரபட்சமில்லாதவர்” என்பதை நமக்கு உணர்த்துகிறார் (வச. 34). 

வாழ்க்கையின் புயல்களை திசைதிருப்புதல்

ஜான் கென்னடி ஜூனியர் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் மகன்), 1999 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி, சிறிய விமானத்தில் பறக்கும்போது, விபத்து நேரிட்டு, விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. விபத்திற்கு காரணம், பாதை சரியாய் தெரியவில்லை என்ற வழக்கமான குறைபாடுதான் என்று கண்டறிப்பட்டது. அதாவது, விமானத்தைத் தரையிறக்கும்போது, பாதை தெளிவாய் தெரியாத பட்சத்தில் கருவிகளை நம்புவதை விட்டுவிட்டு, விமானத்தை திசைதிருப்பி தரையிறக்க முயற்சிப்பார்கள். 

வாழ்க்கையின் காரியங்கள் நம்மை அடிக்கடி மேற்கொள்ளும்போது, நாம் திசைதிருப்பப்பட்டதாக உணருகிறோம். புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுதல், நேசிக்கிறவர்களின் மரணம், வேலை இழப்பு, நண்பனின் துரோகம் போன்ற வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்வுகள் நம்மை தோற்கடிக்கவும் குழப்பவும் செய்கிறது. 

இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் கடந்துசெல்லும்போது சங்கீதம் 43ஐ ஜெபமாக ஏறெடுக்கலாம். இந்த சங்கீதத்தில், சங்கீதக்காரன் தீமையினாலும் அநீதியினாலும் சூழப்பட்டவராய் தோல்வியின் பாதையில் தொலைந்துபோனவராய் உணருகிறார். விரக்தியில் சங்கீதக்காரன் தேவனுடைய வழிநடத்துதலைச் சார்ந்து, தான் அதிகம் விரும்பும் தேவனுடைய சமுகத்திற்கு பத்திரமாய் தன்னை திசைதிருப்பும்படி விண்ணப்பிக்கிறான் (வச. 3-4). தேவ சமுகத்தில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் புதுப்பிக்கப்படுவதை சங்கீதக்காரன் அறிந்திருக்கிறான். 

வழிநடத்துதலுக்கு சங்கீதக்காரனுக்கு தேவைப்பட்ட கருவிகள் யாவை? சத்தியத்தின் வெளிச்சமும், பரிசுத்த ஆவியின் மூலம் உறுதியளிக்கப்பட்ட தேவனுடைய சமுகமுமே. 

நீங்கள் திசைமாறி தொலைந்துபோனவர்களாய் உணரும்போது, தேவன் தன்னுடைய ஆவியின் மூலமாகவும் சமுகத்தின் மூலமாகவும் உங்களை வழிநடத்தி, உங்களை தேற்றவும் உங்கள் பாதைக்கு வெளிச்சத்தைக் காட்டவும் முடியும்.