எங்களுடைய மகனை நாங்கள் தத்தெடுப்பதற்கு முன்பு அவனுடைய ஆரம்பநாட்களை அவன் சிறுவர் விடுதியில் கழித்தான். அந்த விடுதியை விட்டு எங்களோடு அவனை கூட்டிவருவதற்கு முன், அவனுடைய பொருட்களையெல்லாம் எடுத்துவரும்படி கூறினோம். ஆனால் பொருட்கள் என்று அவனிடத்தில் எதுவுமில்லை. அவனுக்காய் நாங்கள் வாங்கிச் சென்றிருந்த புத்தாடையை மாற்றச்செய்தோம். அங்கிருந்த சில பிள்ளைகளுக்கும் ஆடைகள் வாங்கிச் சென்றிருந்தோம். அவனுடைய நிலைமையை நினைத்து நாங்கள் பரிதாபப்பட்டாலும் அவனுடைய சரீரப்பிரகாரமான தேவைகளையும் உணர்வு ரீதியான தேவைகளையும் தற்போது எங்களால் சந்திக்க முடிந்ததை எண்ணி மகிழ்ந்தோம். 

சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய குடும்பத்தின் தேவைக்காய் நன்கொடை சேகரித்த ஒரு நபரை நாங்கள் பார்த்தோம். என்னுடைய மகன் அவருக்கு தன்னுடைய பொம்மைகளையும், சில நாணயங்களையும் கொடுத்து உதவினான். அவனுடைய பொருட்களை அவன் தனக்கென்று கெட்டியாய் பிடித்து வைத்திருந்திருக்க முடியும். 

அவனுடைய அந்த தாராள குணத்திற்கான காரணமே ஆதித்திருச்சபையின் காரணமாயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு மத்தியில் குறைவுள்ளவர்கள் யாருமில்லை. “அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது” (அப்போஸ்தலர் 4:33-34). ஜனங்கள் தங்கள் ஆஸ்திகளை விற்று மற்றவர்களின் தேவைகளை சந்தித்துக்கொண்டனர். 

பொருளோ அல்லது புலப்படாத ஏதோ ஒரு தேவையோடிருக்கிறவர்களின் தேவையை நாம் உணர்ந்தால், தேவையுள்ளவர்களின் தேவையை முழுமனதுடன் சந்தித்த ஆதித்திருச்சபை விசுவாசிகளைப் போன்று நம்மையும் உதவசெய்வதற்கு தேவன் கிருபை செய்வார். அது நம்மை “ஒரே இருதயமும் ஒரே மனதும்” (வச. 32) கொண்ட கிருபையின் பாத்திரங்களாய் மாற்றுகிறது.