
வரம்பற்றவர்
நான் அங்கே, பேரங்காடியில், (Shopping Mall) உணவு சாப்பிடும் இடத்தில், உட்கார்ந்திருக்கிறேன். என் உடல் பதட்டமாகவும் என் வயிறு, வேலைகளின் காலக்கெடுவினால் தத்தளித்துக்கொண்டிருந்தது. நான் என் உணவை எடுத்து, சாப்பிட ஆரம்பித்தபோது, என்னைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த வேலைகளைக் குறித்து பதற்றமடைந்துக்கொண்டிருந்தனர். நாம் அனைவருக்கும் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது, நேரம், ஆற்றல் மற்றும் திறன் இவற்றில் கட்டுப்பாடு, என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
நான், செய்ய வேண்டிய வேலைகள் என்ற புதிய பட்டியலை எழுதி முக்கியமான வேலைகளை முதலில் செய்ய நினைக்கிறேன். ஆனால் அதை எழுத பேனாவைத் திறக்கும்போது வேறொரு எண்ணம் என் மனதில் தோன்றுகிறது: தாங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கும், முடிவில்லாத மற்றும் எல்லையில்லாதவர்களைப் பற்றி நினைக்கிறேன். தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடுக்குகிறவர் நம் ஆண்டவர் (ஏசாயா 40:12) என்று ஏசாயா கூறுகிறார். அவர் நட்சத்திரங்களை பெயர்சொல்லி அழைத்து அவைகளின் பாதைகளை வழிநடத்துகிறவர் (வச. 26), அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார் (வச. 23), தீவுகளை ஒரு அணுவைப் போலவும், தேசங்களை கடலின் ஒரு துளியைப் போலவும் கருதுகிறார் (வச. 15). அவர் கேட்கிறார் “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?” (வச. 25). “கர்த்தராகிய அநாதி தேவன், இளைப்படைவதுமில்லை, சோர்ந்து போவதுமில்லை” என்று ஏசாயா பதிலளிக்கிறார்” (வச. 28).
மனஅழுத்தமும், சிரமமும் நமக்கு ஒருபோதும் நல்லதல்ல; ஆனால் இந்த நாளிலே அவைகள் ஒரு வல்லமையான செய்தியை அளிக்கிறது. வரம்பில்லாத ஆண்டவர் என்னைப் போலல்ல; அவர் விரும்புவதை செய்து முடிக்கிறார். நான் என் உணவை முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை இடைநிறுத்துகிறேன். அவரை அமைதியோடு தொழுதுகொள்ளுகிறேன்.

நன்றாக ஓய்வெடுங்கள்
கடிகாரம் அதிகாலை 1.55 மணிக்கு ஒலித்தது. பின்னிரவு உரையாடலின் சுமையினால் எனக்குத் தூக்கம் வரவில்லை. சிக்கலாயிருந்த என்னுடைய படுக்கை விரிப்பை பிரித்துக்கொண்டு அமைதியாக படுத்துக்கொண்டேன். தூங்குவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கூகிளில் தேடினேன். ஆனால் மாறாக சிறுதூக்கம் தூங்காதீர்கள், காப்பி குடிக்க வேண்டாம், பகல் வேளைகளில் நாள் தாமதமாக வேலை செய்ய வேண்டாம் என்று என்ன செய்யக் கூடாது என்பதையே பார்த்தேன். இன்னும் வாசிக்கும்போது, என்னுடைய டேப்லட் கணிணியில் படிக்க தாமதமாக திரை நேரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்ற ஆலோசனை சொல்லப்பட்டிருந்தது. அச்சச்சோ! உரை அனுப்புவது ஒரு நல்ல யோசனையாக இருக்கவில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டுமானால், செய்யக்கூடாதவைகளின் பட்டியல்களே இருக்கின்றன.
பழைய ஏற்பாட்டில், ஓய்வைத் தழுவிக்கொள்ள, ஓய்வுநாளில் என்னென்ன செய்யக்கூடாது என்ற கட்டளைகளை தேவன் கொடுத்திருந்தார். ஆனால் இயேசு ஒரு புதிய வழியைக் காண்பித்தார். விதிமுறைகளை வலியுறுத்துவதற்கு பதிலாக, சீஷர்களை உறவுக்குள்ளாக அழைத்தார். “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” மத்தேயு 11:28. இதற்கு முந்தைய வசனத்தில், நமக்கு அவர் வெளிப்படுத்தின, தேவனோடு, அவர் வைத்திருந்த உறவை சுட்டிக்காட்டினார். பிதாவிடமிருந்து இயேசு அனுபவித்த உதவிகளை நம்மாலும் அனுபவிக்க முடியும்.
நம்முடைய தூக்கத்துக்கு இடையூறு உண்டாக்கும் சில பொழுதுபோக்குகளை நாம் தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்போது, கிறிஸ்துவுக்குள் ஓய்வெடுப்பது கட்டளையை விட அதிகமாக உறவோடு தொடர்புடையது. நான் வாசிப்பதை நிறுத்திவிட்டு என்னுடைய கனத்த இருதயத்தை, இயேசுவின் அழைப்பிதழான “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே…” என்ற தலையணையின் மேல் வைத்துவிட்டேன்.

நாம் உணருகிறோம் என்று தேவன் அறிவார்
சிம்ரா, தன்னுடைய மகன் அடிமைத்தனத்தோடு போராடுவதைக் கண்டு மிகவும் துக்கமடைந்தாள். “நான் மோசமாக உணர்கிறேன், நான் ஜெபிக்கும்போது என் அழுகையை நிறுத்த முடியாததால் எனக்கு விசுவாசம் இல்லையென்று தேவன் நினைக்கிறாரா?” “தேவன் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், உண்மையான உணர்ச்சிகளை தேவன் கையாளமுடியும் என்று எனக்குத் தெரியும். நாம் நினைக்கிறது அவருக்குத் தெரியாது என்பது போல அல்ல” என்று நான் கூறினேன். நான் சிம்ராவுடன் சேர்ந்து அவளுடைய மகனின் விடுதலைக்காக கண்ணீரோடு மன்றாடி ஜெபித்தோம்.
தங்கள் போராட்டங்களில் தேவனோடு மல்லுகட்டும் அநேகருடைய எடுத்துக்காட்டுகள் வேதத்தில் உள்ளது. தேவனுடைய நிலையான மற்றும் வல்லமையான பிரசன்னத்தின் சமாதானத்துக்காக தன்னுடைய ஆழ்ந்த ஏக்கத்தை சங்கீதம் 42ஐ எழுதியவர் வெளிப்படுத்துகிறார். அவர் சகித்துக்கொண்ட துயரத்தினால் ஏற்பட்ட கண்ணீரையும் மனச்சோர்வையும் ஒப்புக்கொள்ளுகிறார். தேவனுடைய உண்மைத் தன்மையை நினைக்கும்போது அவர் உள்ளத்தில் இருக்கும் குழப்பம், நம்பிக்கையின் துதியாக வெளியே ஊற்றப்படுகிறது. தன்னுடைய “ஆத்துமாவை” உற்சாகப்படுத்த சங்கீதக்காரன் “தேவனை நோக்கி காத்திரு. என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்” (வச. 11) என்று எழுதுகிறார். தேவனைப் பற்றி அவர் அறிந்துக்கொண்டது உண்மைக்கும், மறுக்கமுடியாத அவருடைய உணர்ச்சிகளின் யதார்தத்திற்கும் இடையில் முன்னும் பின்னுமாக இழுக்கப்படுகிறார்.
தேவன் நம்மை அவருடைய சாயலாகவும், உணர்ச்சிகளுடனும் வடிவமைத்திருக்கிறார். மற்றவர்களுக்காக நாம் சிந்தும் கண்ணீர் - நமக்கு விசுவாமில்லாததால் அல்ல; மாறாக, ஆழ்ந்த அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நமக்கு உணர்ச்சிகள் இருக்கிறது என்று தேவன் அறிந்திருப்பதால், நாம் மூல காயங்களுடனும், பழைய தழும்புகளுடனும் அவரை அணுகலாம். ஓவ்வொரு ஜெபமும், அமைதியானதாக இருந்தாலும், கண்ணீருடனாயிருந்தாலும், நம்பிக்கையோடு கூச்சலிட்டாலும், அவர் நம்மைக் கேட்டு, விசாரிக்கிறவர் என்ற வாக்குத்தத்தத்தை, நம்பிக்கையோடு வெளிப்படுத்துகிறது.

எதுவாக இருந்தாலும்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையில், என் குடும்பத்தினர் பார்க்கும் தேசியச் செய்தியில், ஒரு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பு நிறைவு செய்யப்படுகிறது. “புனித வெள்ளி” அன்று,கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு, முற்றிலும் குணமடைந்த பிறகு, தன்னுடைய பிளாஸ்மாவை தன்னைப்போல இந்த நோய்க் கிருமிக்கு எதிராக போராடுபவர்களுக்கு தானம் கொடுக்க முடிவெடுத்த ஒரு நிருபரை மையமாகக் கொண்டு, நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. ஆனால், எதிர்பொருள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நடுவர் குழு இன்னும் தீர்மானிக்கவில்லை. பலர் உதவியற்றவர்களாக உணர்ந்தபோது, பிளாஸ்மாவை (ஊசி வழியாக) தானம் செய்வதில் இருந்த உபாதைகளை அறிந்தபோதும், அவள் அதை “சாத்தியமான ஊதியத்தை செலுத்த ஒரு சிறிய விலை” என்று உணர்ந்தாள்.
அந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பிற்குப் பிறகு, நானும் என் குடும்பத்தினரும் ஊக்குவிக்கப்பட்டதாக உணர்ந்தோம் - சொல்லப்போனால் நம்பிக்கையினால் நிறைந்திருந்தோம். பிலிப்பியர் 4:8ல் பவுல் குறிப்பிட்டிருக்கிற “எவைகளோ” வின் வல்லமை இது தான். “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ”, (வச. 8). பவுலின் மனதில் பிளாஸ்மா தானத்தைப் பற்றி எண்ணம் இருந்ததா? நிச்சமாக இல்லை. ஆனால் தேவையோடு இருக்கும் ஒருவருக்காக தியாகச் செயல்கள் என்பது அவரது மனதில் இருந்ததா – வேறுவிதமாகக் கூறினால், கிறிஸ்துவைப் போல நடத்தை? சந்தேகமே இல்லை – பதில் ஆம் தான்.
ஆனால் அந்த நம்பிக்கையூட்டும் செய்தி ஒளிபரப்பப்பட்டிருக்காவிட்டால் அது முழு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. நம்மைச் சுற்றி நடக்கும் “எவைகளையோ” நாம் பார்ப்பதும், கவனிப்பதும், தேவனுடைய நன்மைகளுக்கு சாட்சிகளாவதும், சுவிசேஷத்தை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதும் நமக்கு சிறப்புரிமையாகும்.
