வேண்டுமென்றே செய்யப்படும் தயவு
தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா? 2 சாமுவேல் 9:3.
ஒரு இளம் தாய் தன் குழந்தைகளுடன்…
எதிர்பாராத தயவு
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; எபேசியர் 2:10
என் தோழி அவளது மளிகைப் பொருட்களுக்கானத் தொகையைச் செலுத்துவதற்காகக் காத்திருந்தாள். அவளுக்கு முன்னால்…

விசுவாசம் கேள்வியினால் வரும்
பாஸ்டர் பாப், அவரது குரலைப் பாதிக்கும் வகையிலான ஒரு பெலவீனத்தால் பாதிக்கப்பட்டபோது, பதினைந்து ஆண்டுகள் அவர் நெருக்கடியிலும் மனச்சோர்விலும் வாழ நேரிட்டது. பேச முடியாத ஒரு போதகரால் என்ன செய்ய முடியும் என்று அவர் சோர்ந்துபோனார். இந்தக் கேள்வியுடன் அவர் போராடினார். தனது ஏக்கத்தையும் குழப்பத்தையும் தேவனிடம் விண்ணப்பித்தார். “கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவது ஒன்று மட்டுமே எனக்கு தெரியும்” என்று அவர் ஜெபித்தார். அவர் வேதத்தைப் படிக்க நேரம் செலவழித்தபோது, தேவன் மீது அவருக்கு இருந்த அன்பு அதிகரித்தது. அவர், “வேதத்தை உள்வாங்குவதற்கும் அதில் மூழ்கியிருப்பதற்கும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஏனென்றால், விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தைக் கேட்பதினால் வரும்” என்று அறிக்கையிடுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கமுடிகிறது. பவுல், யூதர்கள் அனைவரும் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படவேண்டும் என்று விரும்பினார் (ரோமர் 10:9). அவர்கள் எப்படி நம்புவார்கள்? தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் ஏற்படும் விசுவாசத்தினாலும், கிறிஸ்துவைக் குறித்த வார்த்தையினாலுமே அது சாத்தியமாகும் (வச. 17).
பாஸ்டர் பாப், வேதத்தை வாசிக்கும்வேளையில் கிறிஸ்துவின் செய்தியை பெற்றுக்கொள்ளவும் விசுவாசிக்கவும் முயற்சிக்கிறார். அவரால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பேசக்கூடும். அவ்வாறு பேசும்போதும் அதிக வேதனையை அவர் உணருவார். ஆனால் அவர் வேதத்தில் மூழ்கியிருப்பதின் மூலம் தேவனிடமிருந்து சமாதானத்தையும் திருப்தியையும் தொடர்ந்து காண்கிறார். ஆகவே, நம்முடைய போராட்டங்களில் இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவார் என்று நாம் நம்பலாம். நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், அவருடைய செய்தியைக் கேட்கும்போது அவர் நம்முடைய விசுவாசத்தை அதிகரிக்கச் செய்வார்.

படிப்படியாக
தோளோடு தோள் சேர்த்து நின்று, மூன்று பேர் கொண்ட ஒரு டஜன் அணியினர் நான்கு-கால் பந்தயத்திற்குத் தயாராயினர். இருபுறத்திலும் இருந்த இரண்டு நபர்களும் நடுவில் இருந்த நபரின் காலோடு, ஒரு வண்ணமயமான கயிற்றினால் பிணைக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டது. விசில் அடித்ததும் ஒவ்வொரு அணிகளும் இலக்கை நோக்கி முன்னேறின. அவர்களில் பெரும்பாலானோர் கீழே விழுந்து மீண்டும் எழும்பி நிற்க போராடினர். ஒரு சில குழுக்கள் நடந்துசெல்வதற்கு பதிலாக குதித்து செல்ல முயற்சித்தனர். சிலர் ஆட்டத்தை இடையிலேயே நிறுத்திக்கொண்டனர். ஆனால் அதில் ஒரு குழு மட்டும் தங்கள் ஓட்டத்தை துவக்கமாமல் தாமதம் செய்தது. ஒரு திட்டத்தை தீட்டியது. போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் தெளிவாய் தொடர்புகொண்டனர். அவர்களும் அவ்வப்போது இடற நேரிட்டது, ஆனாலும் மீண்டெழுந்து ஒவ்வொரு அணியையும் முந்தினர். அவர்கள் ஒருவரோடொருவர் ஒத்துழைக்க எடுத்த தீர்மானம், வெற்றி இலக்கை அடைய அவர்களுக்கு உதவியது.
கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்த சமுதாயத்தில் வாழும் வாழ்க்கையில் இந்த நான்கு-கால் பந்தயத்தைப் போலவே சலிப்படைய நேரிடுகிறது. நம்மிலிருந்து முரண்படும் கருத்துக்களை உடையவர்களோடு ஓடும்போது அடிக்கடி தடுமாறுகிறோம்.
பேதுரு, ஜெபம், விருந்தோம்பல், மற்றும் நமக்கு முன்பாக இருக்கும் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வதைக் குறித்து பேசுகிறார். அவர், “நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல,” (வச. 10) “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” (1 பேதுரு 4:8) என்று வலியுறுத்துகிறார். நாம் தேவனிடத்தில் தொடர்புகொள்வதற்கும் ஒத்துழைப்பதற்குமான உதவி கேட்கும்போது, வேற்றுமையிலும் ஒற்றுமையை கொண்டாடக்கூடிய ஓட்டத்தை நாம் நேர்த்தியாய் ஓட முடியும்.

மெய்யான மார்க்கம்
எனது இரண்டாம் ஆண்டு கல்லூரியின் கோடை விடுமுறைக்கு பிறகு, என்னுடைய ஒரு வகுப்புத் தோழர் எதிர்பாராத விதமாக இறந்துபோனார். நான் அவரை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன், அவர் நன்றாக இருந்தார். நானும் என்னுடைய வகுப்பு தோழர்களும், வாழ்நாள் முழுவதும் நாம் சகோதர சகோதரிகளாய் இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.
எனது வகுப்புத் தோழனின் மரணம் பற்றி எனக்கு அதிகம் ஞாபகம் இருப்பது என்னவென்றால், அப்போஸ்தலர் யாக்கோபு, “சுத்தமான பக்தி” (யாக்கோபு 1:27) என்று அழைப்பதற்கு ஏற்ற ஒரு வாழ்க்கையை என் நண்பர்கள் தெரிந்தெடுத்தார்கள். இறந்துபோன அந்த தோழனின் சகோதரிக்கு நாங்கள் சகோதரர்களாய் இருப்போம் என்று தீர்மானித்தோம். அவளுடைய சகோதரன் மரித்து பல ஆண்டுகள் ஆனபோதிலும் நாங்கள் சகோதரனுடைய ஸ்தானத்தில் அவளுடைய திருமணம் மற்றும் வளைகாப்பு ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்றோம். அவளுக்கு எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அப்போது அழைப்பு விடுப்பதற்காக எங்களில் ஒருவர் அவளுக்கு ஒரு செல்போனையும் பரிசளித்தார்.
யாக்கோபின் கூற்றுப்படி, திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதே சுத்தமான பக்தியாகும் (வச. 27). என்னுடைய சிநேகதனின் சகோதரி யாருமில்லாத திக்கற்றவள் இல்லையெனினும், அவளுடைய சகோதரன் இனி இல்லை. அவளுடைய புதிய சகோதரர்கள் அந்த இடத்தை நிரப்பினர்.
இயேசுவில் சுத்தமான மற்றும் மெய்யான வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்கள், தேவையிலுள்ளவர்களை பராமரித்து (2:14-17), “(திருவசனத்தின்படி) செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்ற ஆலோசனைக்கு செவிகொடுப்போம். அவர் நமக்கு உதவும்போது,உலகின் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும்போது, அவர்மீது நமக்குள்ள நம்பிக்கையானது தேவையில் உள்ளவர்களை பராமரிக்க நம்மைத் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே தேவன் அங்கீகரிக்கும் சுத்தமான பக்தி.
