
தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்
பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். "ஏன் இப்படி செய்தாய்?" என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், "எனக்கு பசித்தது" என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.
ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், "அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்" (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, "புசித்துக் குடித்து" மற்றும் "தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்" (வ. 34).
நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை "நன்மைகளால்" (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். "என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.
நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, "நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்" (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.
அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், "எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்" (வ.7) எனலாம்.
ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை "விசாலத்திலே" (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.

கிறிஸ்துவில் தைரியம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், மேரி மெக்டோவல் சிகாகோவின் கொடூரமான பட்டிகளை அறியாமல் வாழ்ந்தார். அவரது வீடு இருபது மைல்களுக்கு அப்பால் இருந்தபோதிலும், பட்டிகளில் உள்ள தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யத் தூண்டிய கொடூரமான அவர்களின் நிலைமைகள் பற்றி அவளுக்குத் தெரியாது. அவர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி அறிந்தவுடன், மெக்டொவல் அவர்கள் மத்தியில் குடியேறினார். அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். ஒரு சிறிய கடையின் பின்புறத்தில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிப்பது உட்பட அவர்களின் தேவைகளை அவள் நிறைவேற்றினாள்.
தான் நேரடியாக பாதிக்கப்படாதபோதும், பிறர் நலனுக்காக துணிவது எஸ்தரும் செய்த காரியம். அவர் பெர்சியாவின் ராணி (எஸ்தர் 2:17) மேலும் பாரசீகம் முழுவதும் நாடுகடத்தப்பட்டிருந்த அவளுடைய இஸ்ரவேலர்களை காட்டிலும் பல சலுகைகளை பெற்றிருந்தார். இருப்பினும், எஸ்தர் பெர்சியாவில் உள்ள இஸ்ரவேலர்களின் நிலையை கருத்தில் கொண்டார் மற்றும் அவர்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்தார், "சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்" (4:16) என்றாள். அவள் மௌனமாக இருந்திருக்கலாம், ஏனென்றால் அவள் யூதர் என்று அவளுடைய ராஜாவாகிய அவளுடைய கணவனுக்குத் தெரியாது (2:10). ஆனால், உதவிக்காக தன் உறவினர்களின் வேண்டுகோளை புறக்கணியாமல், யூதர்களை அழிக்கும் தீய சதியை அம்பலப்படுத்த தைரியமாக பணியாற்றினாள்.
மேரி மெக்டோவல் அல்லது ராணி எஸ்தர் போல அசாத்தியமான காரியங்களுக்காக நம்மால் நிற்க முடியாமல் போகலாம், ஆனால் பிறரின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு உதவ தேவன் நமக்கு வழங்கியதை பயன்படுத்துங்கள்.

சிருஷ்டிகரை நினை
தனக்கு இறுதிநிலை புற்றுநோய் இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு நாவலை சமீபத்தில் படித்தேன். நிக்கோலாவின் கோபமடைந்த நண்பர்கள் அவளை யதார்த்தத்தை எதிர்கொள்ளும்படி வற்புறுத்தும்போது, அவளுடைய மறுப்புக்கான காரணம் வெளிப்படுகிறது. "நான் என் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன்," என அவர்களிடம் சொல்கிறாள். திறமையோடும் செல்வத்தோடும் பிறந்தாலும், “நான் என் வாழ்க்கையில் எதையும் செய்யவில்லை. நான் மெத்தனமாக இருந்தேன். நான் எதிலும் ஈடுபாடுகாட்டவில்லை” என்றவள், இப்போது உலகை விட்டு வெளியேறும் நிலை, அவள் அற்பமாக சாதித்துவிட்டதாக உணர்கிறாள், சிந்தித்து பார்க்கவே நிக்கோலாவுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
நான் அதே நேரத்தில் பிரசங்கியை படித்துக் கொண்டிருந்தேன், அதில் இதற்கு மாறுபாடு அப்பட்டமாக இருந்தது. "நீ போகிற பாதாளத்திலே" (9:10) என்ற கல்லறையின் யதார்த்தத்தைத் புறக்கணிக்கும்படி அதன் ஆசிரியர் நம்மை அறிவுறுத்தவில்லை. இதை எதிர்கொள்வது கடினமாக இருந்தாலும் (வ.2), நாம் இப்போது இருக்கும் ஒவ்வொரு கணத்திற்கும் மதிப்பளிக்க இது நம்மை வழிநடத்தும் (வ.4), இஷ்டப்பட்டு நம் உணவிலும், குடும்பத்திலும் மகிழ்விது (வ.7–9), விருப்பத்தோடு வேலை செய்வது (வ.10), சாகசங்கள் மற்றும் ஆபத்துகளை எதிர்கொள்வது (11:1,6), மற்றும் அனைத்தையும் செய்தாலும் தேவனுக்கு முன்பாக நாம் ஒருநாள் பதிலளிப்போம் (வ.9;12:13-14).
நிக்கோலாவின் நண்பர்கள், அவளது உண்மைத்தன்மையும், தாராள மனப்பான்மையும் அவளுடைய வாழ்க்கை வீணாகவில்லை என்பதை நிரூபிப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், "உன் சிருஷ்டிகரை நினை" (12:1) அவர் வழிகளில் நட, இன்று அவரளித்திடும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்து நேசித்து வாழுங்கள் என்ற பிரசங்கியின் அறிவுரையே நம் வாழ்நாளின் முடிவில் இத்தகைய நெருக்கடியிலிருந்து நம் அனைவரையும் காப்பாற்றும்.
