எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணம்

புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததும், பதினான்கு வயது நிரம்பிய    சந்தீப், ஒவ்வொரு மாலையும் பஸ்ஸிலிருந்து குதித்து, தன்னுடைய வீட்டினை அடையும் வரை நடனமாடிக் கொண்டேச் செல்வான். அவனுடைய தாயார் அதனை பதிவு செய்து, அதனை, பள்ளிக்கு பின் நடன நேரம், என்று நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார்.  அவன் நடனமாடுகின்றான் ஏனெனில், அவன் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்கின்றான், தன்னுடைய ஒவ்வொரு அசைவினாலும் “மற்றவர்களையும் மகிழ்ச்சியாக்குகின்றான்”. ஒரு நாள், குப்பை சேகரிக்கும் பணியிலிருந்த இரண்டு பேர், தங்களுடைய பரபரப்பான வேலையின் மத்தியிலும், இந்த இளைஞனோடு சுழன்று, அசைந்து, நடனமாடி மற்றவர்களையும் நடனமாட அழைத்தனர். இம்மூவரும் சேர்ந்து, ஒருவரையொருவர் தொற்றிக் கொள்ளும் உண்மையான மகிழ்ச்சியினைத் தெரிவித்தனர்.

நிலைத்திருக்கும், முழுமையான மகிழ்ச்சியைத் தரக்கூடியவர் தேவன் ஒருவரே என்பதை சங்கீதம் 149 விளக்குகின்றது. தேவனுடைய பிள்ளைகள் இணைந்து “கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்” (வ.1) என்று சங்கீதக்காரன் உற்சாகப் படுத்துகின்றார்.  

அவர் இஸ்ரவேல் ஜனங்களை “தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்”, “தங்கள் ராஜாவில் களிகூரவும் கடவர்கள்” (வ.2) என்று அழைக்கின்றார். அவர் நம்மை நடனத்தோடும், இசையோடும் தேவனை ஆராதிக்கும்படி அழைக்கின்றார் (வ.1-3). ஏனெனில், “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்;        சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்” (வ.4).

நாம் ஆராதிக்கும் நம்முடைய தந்தை, நம்மைப் படைத்தார், அவரே இந்த உலகத்தையும் காத்து வருபவர். அவர் நம்மில் மகிழ்ச்சியடைகின்றார், ஏனெனில் நாம் அவருடைய நேசப் பிள்ளைகள். அவரே நம்மை வடிவமைத்தவர், நம்மை          அறிந்திருக்கின்றார், அவரோடு உறவாடும்படி நம்மை அழைக்கின்றார்.  இது எத்தனை பெரிய கனம்! என்றும்        உயிரோடிருக்கின்ற, நமது அன்பின் தேவனே நம்முடைய மாறாத மகிழ்ச்சிக்குக் காரணர். நம்மைப் படைத்தவர், ஒவ்வொரு நாளையும் நமக்கு ஈவாகத் தந்து, நம்மோடு எப்பொழுதும் இருக்கின்றதற்காக நாம் மகிழ்ந்து களிகூருவோம்.

நிலவைப் படைத்தவர்

விண்வெளி வீரர்கள், தங்களின் விண்வெளிக்கலத்தின் ஈஹிள் என்ற பகுதியை நிலவின் அமைதி கடல் பகுதியில் இறக்கிய போது, நீல் ஆம்ஸ்ராங், “மனிதன் எடுத்து வைக்கும் ஒரு சிறிய எட்டு, மனிதகுலத்திற்கு ஓர் இராட்சத எட்டு ஆகும்” என்றார். அவர் தான், நிலவில் நடந்த முதல் மனிதன் ஆவார்.  இவரைத் தொடர்ந்து மற்ற விண்வெளி வீரர்கள் நிலவில் காலடிவைத்தனர், அவர்களில் அப்பொல்லோவின் கமாண்டர் ஜெனி செர்னன் என்பவரும் ஒருவர். “நான் அங்கேயிரு   ந்தேன், பூமியே நீ அங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றாய், நான் வியப்பில் மூழ்கின்றேன், ……இது ஏதோ ஒரு விபத்தில் ஏற்பட்டதாக இருக்க முடியாது, அது எத்தனை அழகாக இருக்கின்றது!” என்று செர்னன் கூறினார். மேலும், “ உன்னையும், என்னையும் காட்டிலும் பெரியவர் ஒருவர் இருக்க வேண்டும்” என்றார். ஆழமான வழிமண்டலத்திலிருந்து அவர்கள் கண்ட விசித்திரமான காட்சி, அவர்களைச் சிந்திக்க வைத்தது, பரந்து விரிந்த அண்டத்தின் அளவைப் பார்க்கும் போது, தாங்கள் எத்தனை சிறியவர்கள் என்பதை உணர்ந்தனர்.

இந்த பூமியையும் அதற்கும் மேலானவற்றையும் படைத்து, அவற்றைக் காத்து வருகின்ற தேவனுடைய மிகப் பெரிய தன்மையை வியந்து காண்கின்றார் எரேமியா தீர்க்க தரிசி. இவையெல்லாவற்றையும் படைத்தவர், தன்னுடைய ஜனங்களுக்கு அன்பையும், மன்னிப்பையும், நம்பிக்கையையும் வழங்கி, தன்னுடைய நெருக்கத்தை நமக்கு காண்பிக்கின்றார் (எரே.31:33-34). “சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும், சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவர்” (வ.35), நம்மைப் படைத்தவர், சர்வ வல்ல தேவன், தம்முடைய படைப்புகள் எல்லாவற்றையும் ஆளுகை செய்கின்றார், அவர் தன்னுடைய ஜனங்களை மீட்டுக் கொள்ள கிரியை செய்கின்றார் (வச. 36-37).

மேலே இருக்கின்ற வானங்களை அளக்கவும், கீழே இருக்கின்ற பூமியின் அஸ்திபாரங்களை ஆராயவும் நம்மால் ஒரு போதும் கூடாது. ஆனால் நாம் இந்த உலகத்தின் விரிந்த தன்மையை பார்த்து வியந்து, இவை எல்லாவற்றையும், நிலவையும் படைத்த தேவனை வியப்போடு பார்ப்போம்.

என்றுமுள்ள அன்பு

பல ஆண்டுகளுக்கு முன்னர், என்னுடைய நான்கு வயது மகன், ஓர் உலோகத்தகட்டில் பதிக்கப்பட்டிருந்த மரத்தாலான இருதயம் அமைப்பு,  ஒன்றினை எனக்குப் பரிசாகக்    கொடுத்தான். அதின் மத்தியில் “என்றும்” என்ற வார்த்தை எழுதப் பட்டிருந்தது. “நான் என்றும் உங்களை நேசிக்கிறேன், அம்மா” என்றான். நான் அவனை நன்றியோடு அணைத்துக் கொண்டேன். “நான் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்” என்றேன். அந்த விலையேறப் பெற்ற வெகுமதி, என்னுடைய மகன் என் மீது வைத்துள்ள முடிவில்லாத அன்பைக் காட்டியது. கடினமான நாட்களில் தேவன் அந்த இனிமையான பரிசின் மூலம் என்னைத் தேற்றி, ஊக்கப் படுத்தி, அவருடைய ஆழ்ந்த அன்பு எப்போதும் எனக்குண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றார்.

என்னுடைய மகனின் பரிசின் மூலம், வேதாகமம் முழுமையிலும் கூறப்பட்டுள்ள தேவனுடைய ஈவாகிய அவருடைய மாறாத அன்பு எனக்கு என்றுமுள்ளது என்றும், பரிசுத்த ஆவியானவர் அதை உறுதிபடுத்துகின்றார் என்பதை அவர் நினைவு படுத்துகின்றார், தேவனுடைய மாறாத நன்மைகள் என்றும் நமக்குள்ளது என்பதை நன்றியோடு போற்றிப் பாடுவோம். சங்கீதக்காரனைப் போன்று, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங். 136:1) என்று பாடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய நாமத்தை உயர்த்திப் பாடுவோம் (வச. 2-3). அவருடைய அளவற்ற அதிசயங்களையும், முடிவில்லாத ஞானத்தையும் தியானிப்போம் (வ.4-5). நம்மை என்றும் நேசிப்பவரை, வானங்களையும் பூமியையும் ஞானமாய் படைத்தவரை, எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவரைத் துதிப்போம் (வச. 6-9).

சங்கீதக்காரன் பாடுகின்றது போல, என்றுமுள்ள அவருடைய கிருபையும், அன்பும் இப்பொழுது நம் வாழ்விலும் அவருடைய பிள்ளைகள் மீதும் தொடர்ந்து பொழிகின்றது.. நாம் எத்தகைய பிரச்சனைகளைச் சந்தித்தாலும் நம்மைப் படைத்தவர் நம்மோடிருந்து, நம்மை பெலப் படுத்தி, நம்மை நிபந்தனையற்று முற்றிலும் நேசிக்கிறேன் என்கின்றார், தேவனே, வாழ்வை மாற்றும் உம்முடைய மாறாத அன்பினைக் குறித்து எங்களுக்கு அநேகம் முறை நினைவு படுத்துவதற்காக நன்றி கூறுகின்றேன்.

நாம் தேவனைத் துதிப்போம்!

எஸ்தரின் அலைபேசியின் அலாரம் ஒவ்வொரு நாள் மாலையிலும் 3:16 க்கு அடிக்கின்றது, அது அவளுடைய துதி இடைவெளி. தேவன் செய்த நன்மைகளுக்காக அவள் நன்றி கூறுகின்றாள். அவள் நாள் முழுவதும் தேவனோடு பேசிக் கொண்டே இருந்தாலும், இந்த இடைவெளியை அவள் விரும்புகின்றாள், ஏனெனில் தேவனோடு அவள் கொண்டுள்ள உறவைக் கொண்டாட இது உதவியாய் இருக்கின்றது.

அவளுடைய இந்த மகிழ்ச்சியான பக்தியினால் ஈர்க்கப்பட்ட நானும், ஒவ்வொரு நாளும், ஒரு திட்டமான நேரத்தை ஒதுக்கி, கிறிஸ்து நமக்காக சிலுவையில் நிறைவேற்றிய தியாகத்தை எண்ணி நன்றிகூறவும், இன்னமும் இரட்சிக்கப் படாதவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி திட்டமிட்டேன். கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அனுதினமும் அவரைத் துதிப்பதை விட்டு விட்டு, மற்றவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும் என்று அதிசயித்தேன்.

அவரை ஆராதிக்கும் ஓசையின் அழகிய அலைகள் நகர்ந்து, பூமியின் கடைமுனை மட்டும் செல்கின்றது என்பதாக சங்கீதம் 67 சொல்கின்றது. சங்கீதக்காரன் தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சுகின்றார், எல்லா ஜாதிகளுக்குள்ளும் அவருடைய மகத்துவமான நாமத்தை விளங்கப்பண்ணும்படி தெரிவிக்கின்றார் (வச. 1-2). அவர், “தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக” (வச. 3) என்று பாடுகின்றார். சர்வ வல்லவரின் அரசாட்சியையும், அவருடைய உண்மையான வழி நடத்துதலையும் அவர் கொண்டாடுகின்றார் (வச. 4). தேவனுடைய மிகப் பெரிய அன்பிற்கும், அளவற்ற ஆசிர்வாதங்களுக்கும் சாட்சியாக இருந்து, தேவனுடைய பிள்ளைகளை அவரைத் துதிக்கும்படி வழி நடத்துகின்றார் (வச. 5-6).

அவருக்கு அன்பான பிள்ளைகளின் மீது, தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராய் இருப்பது, நம்மையும் அவரை போற்றச் செய்கின்றது. நாம் அப்படிச் செய்யும் போது, மற்றவர்களும் அவர் மீது நம்பிக்கை வைக்கவும், அவருக்கு மரியாதை செலுத்தவும், அவரைப் பின்பற்றவும் அவரே தேவனென்று ஆராதிக்கவும் நம்மோடு சேர்ந்து கொள்வர்.

எல்லாவற்றையும் விட விலையேறப்பெற்றவர் தேவன்

கடந்த காலத்தில், இயேசுவின் விசுவாசிகளால் காயப்படுத்தப்பட்ட என்னுடைய தாயார், நான் என்னுடைய வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தபோது, கோபமுற்றார், “ஆகவே நீ இப்பொழுது என்னை நியாயம் தீர்ப்பாயோ? அது உன்னால் முடியாது” என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டார், ஓர் ஆண்டு முழுவதும் அவர் என்னிடம் பேசவே இல்லை. நான் மிகவும் வருந்தினேன், ஆனால் நான் தேவனோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொண்டேன், அது எல்லா உறவுகளைக் காட்டிலும் விலையேறப் பெற்றதாக இருந்தது. அவர் என்னுடைய அழைப்பை மறுக்கும் ஒவ்வொரு வேளையும் நான் தேவனிடம் ஜெபிப்பேன், நான் அவர்கள் மீது அன்பாயிருக்க எனக்கு உதவியருளும் என்று கேட்டேன்.

இறுதியில் நாங்கள் சமாதானமானோம். சில மாதங்களுக்குப் பின்னர் அவர், “நீ மாறிவிட்டாய், நான் உன்னிடமிருந்து இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றேன்” என்றார். சீக்கிரத்தில் அவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டார், எஞ்சிய நாட்களில் தேவனையும் பிறரையும் நேசித்து வாழ்ந்தார்.

இயேசுவிடம் ஓடிச் சென்று, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட ஒரு மனிதன், துக்கத்தோடே திரும்பிச் சென்றான், ஏனெனில் அவன் தன்னுடைய ஆஸ்தியை விட்டு விட மனதில்லாதிருந்தான் (மாற். 10:17-22), அதேப் போன்று நானும் அவரைப் பின்பற்றும்படி எல்லாவற்றையும் விட்டு விட முடியாமல் போராடிக் கொண்டிருந்தேன்.

தேவனை விட, நாம் அதிகமாக நேசிக்கும் மக்களையும் பொருட்களையும் நம்மால் எளிதில் விட்டு விட முடியாது (வ.23-25). ஆனால் நாம் இவ்வுலகில் விட்டு விடுபவைகளின் அல்லது இழப்பவைகளின் மதிப்பு இயேசுவோடு நாம் அநுபவிக்கப்போகும் நித்திய வாழ்வை விட நிச்சயமாக அதிகமில்லை. நம் மீது அன்புள்ள தேவன், எல்லா ஜனங்களையும் மீட்பதற்காக தன்னையே பலியாகத் தந்தார், அவர் நம்மை தம்முடைய சமாதானத்தினால் மூடிக்கொள்கின்றார், தம்முடைய விலையேறப் பெற்ற, மாறாத அன்பினால் நம்மைத் தாங்குகின்றார்.

மீண்டும்…. ஜெபிக்கும் நேரம்

என் வீட்டின் அருகில் காரை ஓட்டிச் சென்ற போது, எங்களுக்கருகில் வசிக்கும் மிரியாம், மற்றும் அவளுடைய சிறுபெண் குழந்தை எலிசபெத் ஆகியோருக்குக் கையசைத்தேன். கடந்த ஆண்டுகளில், எங்களுடைய சிறிய உரையாடல்கள்- “சில நிமிடங்கள்” என்பதையும் தாண்டி தொடர்ந்து கொண்டேயிருப்பதையும், ஒரு ஜெபக் கூடுகையையும் சமாளித்துக் கொள்ள எலிசபெத் பழகிக் கொண்டாள். நானும் அவளுடைய தாயாரும் பேசிக்கொண்டிருக்கும் போது, அவள், எங்கள் வீட்டின் முற்றத்திலுள்ள மரத்தில் ஏறி, கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்திருப்பாள், சற்று நேரத்தில் அந்தக் கிளையிலிருந்து குதித்து, எங்களிடம் ஓடி வருவாள். எங்களின் கரங்களைப் பற்றிக்கொண்டு, சிரித்துக் கொண்டே, “இது மீண்டும் ஜெபிக்கும் நேரம்” என்ற பாடலைப் பாடுவாள். நண்பர்களுக்கிடையே ஜெபம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொண்டதைப் போல, அந்தச் சிறு வயதிலேயே செயல் படுவாள்.

“கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (எபே. 6:10) என்று விசுவாசிகளை உற்சாகப் படுத்திய அப்போஸ்தலனாகிய பவுல், இடைவிடாத ஜெபத்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டுகின்றார். ஆவிக்குரிய வாழ்வில் தேவனோடு நடக்கும் போது, அவருடைய பிள்ளைகளுக்குத் தேவையான சர்வாயுதவர்க்கத்தைக் குறித்து விளக்குகின்றார். இவை பாதுகாப்பையும், பகுத்தறியும் ஞானத்தையும், அவருடைய உண்மையின் மீதுள்ள நம்பிக்கையையும் நமக்குத் தருமென குறிப்பிடுகின்றார் (வச. 11-17). நமக்கு வாழ்வு தரும் ஈவுகளைத் தரும் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்தால் மட்டுமே தேவன் தரும் பெலத்தில் நாம் வளரமுடியும் என அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்துகின்றார் (வச. 18-20).

நம்முடைய ஜெபங்களில் நாம் கதறினாலும் சரி, மனதுக்குள்ளே புலம்பினாலும் சரி, தேவன் அவற்றைக் கேட்கிறார், நம்மீது கரிசனை கொண்டுள்ளார். அவர் தம்முடைய வல்லமையினால், நம்மை பெலப்படுத்த ஆயத்தமாயிருக்கிறார் எனவே, அவர் நம்மை மீண்டும், மீண்டும், மீண்டும் ஜெபிக்க அழைக்கின்றார்.

இருவர் கூடியிருப்பது நல்லது

1997 ஆம் ஆண்டு, ஹவாயில் நடைபெற்ற அயர்ன் மன் டிரையத்லான் போட்டியில், (மிதிவண்டி ஓட்டுதல், நீந்துதல், ஓடுதல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு விளையாட்டு) இரண்டு பெண்கள், தங்கள் பாதங்களால் நிற்கக் கூட பெலனற்றவர்களாய், தடுமாறியபடியே எல்லைக் கோட்டை நெருங்கினர். மிகவும் சோர்வடைந்த இந்த ஓட்ட வீரர்கள், தங்களின் நிலையற்ற கால்களோடு, விடாமுயற்சியோடு ஓடிக்கொண்டிருந்தபோது, சியான் வெல்ச் தடுமாறி வென்டி இன்கிரஹாம் மீது மோதிக் கொண்டாள், அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். போராடி எழுந்திருந்த அவர்கள், இலக்கினை அடைய இன்னும் இருபது மீட்டர் தொலைவே இருந்த நிலையில், மீண்டும் முன்புறம் விழுந்தனர், வென்டி தவழ்ந்து செல்ல ஆரம்பித்த போது, பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பினர். அவளுடைய போட்டியாளரும் அவளைப் பின் தொடர, பார்வையாளர்கள் சத்தமாக அவர்களை உற்சாகப்படுத்தினர். வென்டி நான்காவதாக எல்லைக் கோட்டைத் தாண்டி, அவளுடைய ஆதரவாளர்களின் கரங்களில் வீழ்ந்தாள், அப்பொழுது அவள் தன்னோடு தடுமாறிய சகோதரிக்கு கரத்தை நீட்டினாள், சியான் முன்னோக்கி வந்து தன்னுடைய தளர்ந்த கரங்களை நீட்டி, வென்டியின் கரங்களைப் பற்றியவாறே எல்லைக் கோட்டைத் தொட்டாள், அவள் ஐந்தாவதாக ஓட்டத்தை முடித்தபோது, கூட்டத்தினர் ஆரவாரத்தோடு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இந்த ஜோடி, 140 மைல் தூரத்தை கடந்து முடித்தக் காட்சி அநேகரைக் கவர்ந்தது. வலுவிழந்தபோதும் விடாமுயற்சியோடு இருவர் இணைந்து போராடிய அந்தக் காட்சி என் மனதை விட்டு அகலவேயில்லை, பிரசங்கி 4:9-11ல் கூறப்பட்டுள்ள வாழ்விற்கு புத்துணர்ச்சியூட்டும் உண்மையை இது உறுதிப் படுத்துகின்றது.

நம்முடைய வாழ்விலும் நமக்கு ஒரு உதவியாளர் தேவை என்பதை நாம் ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை (வ.9). நம்முடைய தேவைகளை, எல்லாம் அறிந்த தேவனிடமிருந்து நாம் மறைத்துக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு வேளையில் நாம் அனைவருமே உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கீழேவிழ நேரலாம். நாம் எழுந்திருக்க முயற்சிக்கும் போது, நாம் தனியாக இல்லை என்பது நமக்கு ஆறுதலைத் தரும். நம்முடைய அன்புத்தந்தை நமக்கு உதவிசெய்கின்றார், நாம் மற்றவர்களுக்கும் உதவும் படி நம்மை பெலப்படுத்துகின்றார், அவர்களும், தாங்களும் தனியாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவர்.

வாழ்வு கடினமாகும் போது

உடல், மனம், உணர்வு அத்தனையிலும் சோர்வடைந்தவனாய் என்னுடைய சாய்வு நாற்காலியில் சுருண்டு கிடந்தேன். தேவனுடைய வழிநடத்துதலைத் தொடர்ந்து, எங்களுடைய குடும்பத்தோடு கலிபோர்னியாவிலிருந்து விஸ்கான்சின்னுக்கு குடிபெயர்ந்தோம். நாங்கள் அங்கு வந்து சேர்ந்த போது, எங்களுடைய கார் பழுதடைந்ததால், இரண்டு மாதங்கள் கார் இல்லாமல் கஷ்டப்பட்டோம். இதனிடையே, என்னுடைய கணவனுக்கு முதுகில் நடந்த அறுவைசிகிச்சைக்குப் பின்னர், அவரால் சிறிதளவே நடமாட முடிந்தது. எனக்குள்ள வலியும் அதிகமானதால், எங்களுடைய சாமான்களை அடுக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. எங்களுடைய பழைய வீட்டை விட்டு, இங்கு வந்த பின்பு அதிகமான பிரச்சனைகளை எதிர் நோக்கினோம். எங்களுடைய மூத்த நாயும் சுகவீனமானது. எங்களுடைய புதிய நாய் குட்டி, எங்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்த போதிலும், அதிக ரோமமுள்ள நாய்க் குட்டியை வளர்ப்பதிலும், எதிர்பார்த்ததைவிட அதிக வேலையினால் கஷ்டப்பட்டோம். எனக்குள் கசப்பு ஏற்பட்டது. என்னுடைய வாழ்வு கரடுமுரடான பாதை வழியே செல்லும்போது, எப்படி என்னுடைய நம்பிக்கை அசைக்கப்படாமல் இருக்க முடியும்?

நான் ஜெபிக்க அமர்ந்த போது, சங்கீதக்காரன், தன்னுடைய சூழ்நிலை எப்படியிருந்த போதிலும், தேவனைத் துதிப்பதை எனக்குக் காட்டினார். தாவீது பாதிக்கப்பட்ட போதெல்லாம், தன்னுடைய உணர்வுகளை தேவனிடம் ஊற்றுகிறார், அவருடைய சமுகத்தில் அடைக்கலம் தேடுகிறார் (சங். 16:1). தேவனே அவருடைய தேவைகளெல்லாவற்றையும் தருபவர், பாதுகாப்பவர் (வச. 5-6) என்கின்றார். அவருக்கு ஆலோசனைத் தந்த கர்த்தரைத் துதிக்கிறார் (வச. 7). “நான் அசைக்கப்படுவதில்லை” என்று உறுதியாகக் கூறுகின்றார், ஏனெனில் அவருடைய கண்கள் எப்பொழுதும் கர்த்தரையே நோக்கியிருக்கிறது (வச. 8). ஆகையால் அவருடைய இருதயம் பூரித்தது, தேவனுடைய சமுகத்தின் பரிபூரண ஆனந்தத்தைப் பெற்றுக்கொள்கிறார், அவருடைய மாம்சம் தேவனுடைய சமுகத்தில் நம்பிக்கையோடு தங்கியிருக்கும் (வச. 9-11).நாம் பெற்றுள்ள சமாதானம், தற்சமயம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததல்ல என்பதால் மகிழ்ச்சியடைவோம், நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனுக்கு நாம் நன்றிகூறுவோம், அவருடைய பிரசன்னம் நம்முடைய உறுதியான நம்பிக்கைக்கு வழிவகுக்கின்றது.

மிகப்பெரிய மர்மம்

இயேசுவின் பேரில் விசுவாசத்திற்குள் வருவதற்கு முன்பு, நான் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் அவர் யாரென்று அறிய போராடினேன்  தேவன் ஒருவரே பாவத்தை மன்னிக்கிறவர் என்று வேதாகமம் கூறுகின்றது. அப்படியிருக்க, எப்படி இயேசுவால் என்னுடைய பாவங்களை மன்னிக்க முடியும்? என்று நம்பத் தடுமாறினேன். ஜெ.ஐ.பாக்கர் எழுதிய “தேவனை அறிந்து கொள்ளல்” (Knowing God) என்ற புத்தகத்தைப் படித்த பின்பு தான், என்னுடைய போராட்டங்களில் நான் மட்டும் தனிமையாக இல்லை என்பதை நான் கண்டுபிடித்தேன். “நசரேயனாகிய இயேசு, மனிதனாகப் பிறந்த தேவன்………..அது உண்மை, ஆனால் அவர் மனிதனாக வாழ்ந்த போது, முழுவதும் தேவத்தன்மையில் தான் இருந்தார் என கூறும் தடுமாற்றமுள்ள கிறிஸ்தவர்களுக்கும்”, அவிசுவாசிகளுக்கும் அவர் எழுதுவது, இதுதான் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள தேவையான உண்மை.

அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவை “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்” என்று குறிப்பிடும் போது, அவர் இயேசுவை முற்றிலுமாக, பரிபூரணமான தேவன், படைப்பின் காரணர், பூமியிலும் வானத்திலுமுள்ள சகலத்தையும் தாங்குபவர், ஆனால் பூரண மனிதன் என்கின்றார்  கொலோ.1:15-17).  இந்த உண்மைதான், இயேசு கிறிஸ்துவின் சாவு மற்றும் உயிர்ப்பின் மூலம், அவர் நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்ததோடு, மனுக்குலம் முழுமையையும்  மீட்டார் என்பதைக் காட்டுகின்றது. அனைவரும், அனைத்து படைப்புகளும் மீண்டும் தேவனோடு ஒப்புரவாகும் படிச் செய்தார் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகின்றது (வ.20-22).

இந்த வியத்தகு அன்பின் செயல் வெளிப்பட்ட நாளில் இருந்து, தேவனாகிய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலும், குமாரனாகிய இயேசுவின் வாழ்வின் மூலமாகவும்  எழுதப்பட்ட வேதவார்த்தையின் மூலம், பிதாவாகிய தேவன் தம்மை வெளிப்படுத்தினார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவர் இம்மானுவேல்- 

தேவன் நம்மோடிருக்கிறார். அல்லேலூயா!