விண்வெளி வீரர்கள், தங்களின் விண்வெளிக்கலத்தின் ஈஹிள் என்ற பகுதியை நிலவின் அமைதி கடல் பகுதியில் இறக்கிய போது, நீல் ஆம்ஸ்ராங், “மனிதன் எடுத்து வைக்கும் ஒரு சிறிய எட்டு, மனிதகுலத்திற்கு ஓர் இராட்சத எட்டு ஆகும்” என்றார். அவர் தான், நிலவில் நடந்த முதல் மனிதன் ஆவார்.  இவரைத் தொடர்ந்து மற்ற விண்வெளி வீரர்கள் நிலவில் காலடிவைத்தனர், அவர்களில் அப்பொல்லோவின் கமாண்டர் ஜெனி செர்னன் என்பவரும் ஒருவர். “நான் அங்கேயிரு   ந்தேன், பூமியே நீ அங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றாய், நான் வியப்பில் மூழ்கின்றேன், ……இது ஏதோ ஒரு விபத்தில் ஏற்பட்டதாக இருக்க முடியாது, அது எத்தனை அழகாக இருக்கின்றது!” என்று செர்னன் கூறினார். மேலும், “ உன்னையும், என்னையும் காட்டிலும் பெரியவர் ஒருவர் இருக்க வேண்டும்” என்றார். ஆழமான வழிமண்டலத்திலிருந்து அவர்கள் கண்ட விசித்திரமான காட்சி, அவர்களைச் சிந்திக்க வைத்தது, பரந்து விரிந்த அண்டத்தின் அளவைப் பார்க்கும் போது, தாங்கள் எத்தனை சிறியவர்கள் என்பதை உணர்ந்தனர்.

இந்த பூமியையும் அதற்கும் மேலானவற்றையும் படைத்து, அவற்றைக் காத்து வருகின்ற தேவனுடைய மிகப் பெரிய தன்மையை வியந்து காண்கின்றார் எரேமியா தீர்க்க தரிசி. இவையெல்லாவற்றையும் படைத்தவர், தன்னுடைய ஜனங்களுக்கு அன்பையும், மன்னிப்பையும், நம்பிக்கையையும் வழங்கி, தன்னுடைய நெருக்கத்தை நமக்கு காண்பிக்கின்றார் (எரே.31:33-34). “சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும், சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவர்” (வ.35), நம்மைப் படைத்தவர், சர்வ வல்ல தேவன், தம்முடைய படைப்புகள் எல்லாவற்றையும் ஆளுகை செய்கின்றார், அவர் தன்னுடைய ஜனங்களை மீட்டுக் கொள்ள கிரியை செய்கின்றார் (வச. 36-37).

மேலே இருக்கின்ற வானங்களை அளக்கவும், கீழே இருக்கின்ற பூமியின் அஸ்திபாரங்களை ஆராயவும் நம்மால் ஒரு போதும் கூடாது. ஆனால் நாம் இந்த உலகத்தின் விரிந்த தன்மையை பார்த்து வியந்து, இவை எல்லாவற்றையும், நிலவையும் படைத்த தேவனை வியப்போடு பார்ப்போம்.