சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கிலப் படத்தில், தன்னை மேதை என்று கூறிக்கொள்ளும் ஒருவர், கேமராவிற்கு முன்பாக நின்று கொண்டு, “ திகில், ஊழல், அறியாமை, வறுமை” ஆகியவை வாழ்க்கையை தேவனற்றதாகவும், அபத்தமாகவும் மாற்றுகிறது என்று மார்த்தட்டி பேசுகின்றார். நவீன திரைப்பட வசனங்களில் இது ஒன்றும் புதியதல்லவெனினும், இதில் ஆர்வத்தைத் தருவது என்னவென்றால், இது எங்கே கொண்டு செல்கிறது என்பதே. இறுதியில் முன்னணி நடிகர் பார்வையாளர்களை நோக்கி, எது உங்களுக்கு சிறிதேனும் மகிழ்ச்சியைத் தருகின்றதோ அதைச் செய்யுமாறு வருந்திக் கேட்கின்றார். அவனைப் பொருத்தமட்டில், பாரம்பரிய அறநெறியையும் விட்டு விடும்படி கேட்கின்றான்.

ஆனால், “என்ன வேண்டுமானாலும் செய்” என்பது சரிப்படுமா? பழைய ஏற்பாட்டிலுள்ள பிரசங்கியை எழுதியவர், வாழ்க்கையில் திகிலின் மத்தியில் விரக்தியைச் சந்தித்த அவர், இவ்வகை காரியத்தை அநேக ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்திருக்கின்றார், உலக இன்பங்களின் வாயிலாக சந்தோஷத்தை தேடியிருக்கின்றார் (பிர.2:1,10). மிகச் சிறந்த கட்டுமான வேலைகள் (வ.4-6), செல்வம் (வ7-9), தத்துவங்களை ஆராய்தல் (வ12-16) என பல காரியங்களின் வாயிலாக தேடினார். அவருடைய தீர்வு என்ன? “எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது” (வ.17) என்கின்றார். இவை ஒன்றுமே மரணத்தையும், அழிவையும், அநியாயத்தையும் மேற்கொள்ளக் கூடியவையல்ல (5:13-17).

ஒரேயொரு காரியம் மட்டும் தான் பிரசங்கியை எழுதியோனை விரக்தியிலிருந்து மீட்டது. நம்முடைய வாழ்விலும், வேலையிலும் தேவன் பங்களிக்கும் போதுதான், நம்வாழ்வின் சோதனைகளின் மத்தியிலும் நிறைவைக் காணமுடியும். “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதும்………..தேவனுடைய கரத்திலிரு    ந்து வருகிறது” (2:24). வாழ்க்கை சில வேளைகளில் அர்த்தமற்றதாகத் தோன்றலாம், ஆனால், “உன் சிருஷ்டிகரை நினை” (12:1). வாழ்க்கையைக் கண்டுபிடிக்கும் படி உன் வாழ்நாளை வீணாக்காதே, “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக் கொள்” (வ.13).

தேவனை நம் வாழ்வின் மையமாக வைக்க வில்லையெனின், வாழ்வின் இன்பங்களும், துயரங்களும் ஏமாற்றத்தில் கொண்டு போய் விடும்.