எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டிம் கஸ்டாப்சன்கட்டுரைகள்

உபவாசத்தின் உட்கருத்து

உபவாசத்தின் உட்கருத்து

அந்த வேளையில்

நான் அந்த ஆம்புலன்ஸ் வண்டியின் உள்ளேயிருக்க, அதன் கதவை மூடவிருந்தனர். வாகனத்தின் வெளியே என்னுடைய மகன் என் மனைவியிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். என்னுடைய நினைவு தளர்ந்த நிலையில், நான் அவனை பெயர் சொல்லி அழைத்தேன். அவன் அதனைப் புரிந்த கொண்டபோது, நான் மெதுவாக அவனிடம், “நான் அவளை மிகவும் நேசிப்பதாக உன் அம்மாவிடம் சொல்லு” என்றேன்.

நான் அதனை என்னுடைய பிரியாவிடை என்று எண்ணினேன். இந்த வார்த்தைகளை என்னுடைய கடைசி வார்த்தைகளெனவும் நினைத்தேன். அந்த வேளையில் அது ஒன்றே எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது.

இயேசுவும் தனது கடைசி இருண்ட நேரத்தைச் சகித்தபோது அவர் நம்மிடம் வெறுமனே நம்மை நேசிப்பதாக மட்டும் கூறவில்லை. அவர் தம் அன்பினைத் தெளிவாகக் காட்டினார். தன்னை இழிவுபடுத்தி, சிலுவையிலறைந்த சேவகர்களிடம் தமது அன்பைக் காட்டினார். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கின்றார்களே” என்றார் (லூக். 23:34) தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட மற்றொரு கள்ளனுக்கு அவர் “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்” (வச. 43) என்று நம்பிக்கையளித்தார் இறக்கும் தருவாயில் தன்னுடைய தாயைப் பார்த்து, “ஸ்திரீயே. அதோ, உன் மகன்” என்றார். தனக்கன்பான சீஷன் யோவானைப் பார்துது, “அதோ உன் தாய்” என்றார் (யோவா. 19:26-27) கடைசியாக இவ்வுலக வாழ்வை அவர் முடித்துக் கொண்ட போது, தந்தையிடம் தனக்குள்ள நம்பிக்கையை கடைசி அன்பின் செயலாக “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்றார் (லூக். 23:46).

இயேசு ஒரு நோக்கத்தோடு பிதாவுக்குச் கீழ்ப்படிந்து பிதாவினிடம் தான் வைத்துள்ள அன்பின் ஆழத்தைக் காட்டும்படியாகவும், நம்மீது அவர் வைத்துள்ள ஆழமான அன்பைக் காட்டவும் சிலுவையைச் சகித்தார். முடிவுவரை நம்மீது வைத்துள்ள உண்மையான அன்பினைக் காட்டினார்.

ஓர் அடையாளத்தைக் காட்டிலும் மேலானது

தன்னுடைய குழு ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த கடைசி நேரத்தில், ஐயோவா பல்கலைக்கழகத்தின் மிகச்சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஜோர்டன் பொகனன் தடையில்லா ஓர் பந்து எறிதலை வேண்டுமென்றே தவறவிட்டு, தன் பள்ளியின் 25 வருட ரெக்கார்டை முறியடிப்பதை விட்டுவிட்டான். ஏன்? 1993 ஆம் ஆண்டு ஐயோவாவின் கிறிஸ்ட்ரீட் குழுவில் முப்பத்துநான்கு தடையில்லா பந்து எறிவுகளை தொடர்ந்து போட்டான்.. பின்னர் அவன் ஒரு கார் விபத்தில் மரித்துப் போனான். போகனன் ஸ்டீரிட்டை கௌரவித்து மகிழ்ந்தானேயன்றி, தன்னுடைய பள்ளிப் பதிவை முறியடிக்க விரும்பவில்லை.

போகனன் தன்னுடைய சொந்த முன்னேற்றத்தைவிட, சில விழிப்புணர்வை ஏற்படுத்தும் காரியங்களுக்கு அதிக கவனம் செலுத்தினான். இதே போன்ற மதிப்பீடுகளை இளம் வீரரான தாவீதின் வாழ்விலும் காணலாம். ஒரு குகையில் தன்னுடைய தரமற்ற படைகளோடு ஒளிந்திருந்த தாவீது, தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமின் கிணற்று நீரைப் பருக ஏங்கினான். ஆனால், அந்தப் பகுதி பெலிஸ்தரின் கைவசமிருந்தது (2 சாமுவேல் 23:14-15).

தாவீதின் மூன்று யுத்த வீரர்கள் பெலிஸ்தரின் எல்லைக்குள் துணிந்து புகுந்து, அந்தக் கிணற்று நீரை மொண்டு தாவீதுக்குக் கொண்டு வந்தனர். ஆனால், தாவீதால் அந்த நீரைப் பருக முடியவில்லை. 'அவன் அதைக் குடிக்க மனதில்லாமல், அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப் போட்டான்" அவன், 'கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக" என்றான் (வச. 16-17).

தங்களுக்கு அகப்பட்டதையெல்லாம் கையகப்படுத்திக் கொள்வதையே பாராட்டும் இந்த உலகில் அன்பினாலும், தியாகத்தாலும் நிறைவேற்றப்படும் செயல்கள் எத்தனை வல்லமையுள்ளவை! அத்தகைய செயல்கள் ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவதைக் காட்டிலும் மேலானவை.

யுத்தம்

இராணுவ வாகனத்தோடு இணைக்கப்பட்ட பெரிய துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள், பூமியைப் பிளக்கும் ஓசையோடு அவனைச் சுற்றிலும் விழுந்தன. அந்த இளம் இராணுவ வீரன், உருக்கமாக ஜெபித்தான். ''கர்த்தாவே, நீர் என்னை இதிலிருந்து காப்பாற்றினால், நான் என்னுடைய தாயார் என்னிடம் விரும்பிக் கேட்டுக் கொண்ட வேதாகமப் பள்ளிக்குச் செல்வேன்" என்றான். தேவன் அவனுடைய ஜெபத்தை அங்கிகரித்தார். என்னுடைய தந்தை இரண்டாம் உலகப் போரில் தப்பித்து, மூடி வேதாகம நிறுவனத்திற்குச் சென்று, தன் வாழ்வை தேவ ஊழியத்திற்கென அர்ப்பணித்தார். மற்றொரு யுத்த வீரர் வேறுவகையான இக்கட்டைச் சந்தித்தார். அது அவனை தேவன் பக்கம் திருப்பியது. ஆனால், அவன் யுத்ததிற்குச் செல்வதைத் தவிர்த்த போது அவனுக்குப் பிரச்சனை ஆரம்பித்தது. தாவீது அரசனின் படைகள் அம்மோனியர்களுக்கெதிராக யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தபோது, தாவீது தன்னுடைய அரண்மனையில் இருந்தபோது, பிறனுடைய மனைவியைப் பார்த்தான். கேடான காரியங்களை நடப்பித்தான் (2 சாமு. 11). சங்கீதம் 39ல், தாவீது தான் செய்த பயங்கரமான பாவத்தினால் ஏற்பட்ட வேதனையிலிருந்து மீண்டுவருவதை வரிசையாக எழுதுகின்றார். 'என் இருதயம் எனக்குள்ளே அனல் கொண்டது. நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது" (வச. 3) என எழுதுகின்றார்.

தாவீதின் உடைந்த உள்ளம் அவனைச் சிந்திக்க வைத்தது. 'கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும் (வச. 4) எனக் கேட்கின்றார். அவர் தன்னுடைய நம்பிக்கையையிழந்து விடவில்லை. தன்னுடைய கவனத்தை வேறெங்கும் திருப்பவும் இல்லை. 'இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கின்றேன்? நீரே என் நம்பிக்கை" (வச. 7) என்று கூறி தேவனிடம் திரும்புகின்றான். தாவீதும் அவனுக்குள்ளே ஏற்பட்ட யுத்தத்தில் பிழைத்துக்கொள்வேன். பின்னர் தேவனுக்கு ஊழியம் செய்யும்படி திரும்புவேன்.

நம்மை ஜெப வாழ்விற்குள் கொண்டு வந்தது எந்தக் காரியமாயிருந்தாலும் சரி, நம்முடைய கவனம் ஜெபத்திற்கு நேராகத் திரும்பட்டும். தேவனே நம்முடைய நம்பிக்கையின் ஊற்று. நம்முடைய இருதயத்தை அவரிடம் பகிர்ந்துகொள்ள அவர் நம்மை அழைக்கின்றார்.

மனுஷரைப் பிரியப்படுத்தல்

ஒரு கல்லூரியின் ஒரு வகுப்பு, கலைசார்ந்த களப்பயணம் சென்ற போது, ஒரு மிகச் சிறந்த மாணவியை எங்களது பயிற்சியாளரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வகுப்பறையில் அவள் எப்பொழுதும் ஆறு அங்குல உயரமுள்ள செருப்புகளையே தன்னுடைய நீண்ட கால் சட்டைக்குள் அணிந்திருப்பாள். ஆனால், நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் பூட்ஸ்சுகள் அவளை ஐந்து அடிக்கும் குறைவான உயரத்தில் காட்டியது. “என்னுடைய உயரமான செருப்புகள் நான் எப்படித் தோன்ற விரும்புகிறேனோ அப்படிக் காட்டின. ஆனால், என்னுடைய பூட்ஸ்சுகள் என்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகின்றன" எனக் கூறி சிரித்தாள்.

நம்முடைய புறத்தோற்றம் நம்முடைய உண்மை நிலைமையை வெளிக்காட்டுவதில்லை. நம்முடைய இருதயமே நம்மை யாரெனக் காட்டும். வெளித் தோற்றத்தில் மிகச் சிறப்பாகக் காட்சி தரும் மதப்பற்றுடைய பரிசேயர்களுக்கும், வேதபாரகருக்கும் இயேசு ஆழமான வார்த்தைகளைக் கொடுக்கின்றார். அவர்கள் இயேசுவிடம், தங்களுடைய பாரம்பரியத்தின்படி அவருடைய சீடர்கள் போஜனம் பண்ணுமுன் ஏன் கை கழுவுவதில்லையெனக் கேட்கின்றார்கள் (மத். 15:1-2). இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் பாரம்பரியத்தினால் தேவனுடைய கட்டளையை மீறி நடக்கின்றீர்கள்? (வச. 3) எனக் கேட்கின்றார். அவர்கள் தங்களுடைய தகப்பனையும், தாயையும் பாதுகாப்பதற்குப்பதிலாக தங்களுக்குச் சாதகமாக ஒரு சட்டத்தை உருவாக்கிவைத்துக் கொண்டு, தங்களுடைய செல்வத்தை காத்துக் கொள்கின்றனர் (வச. 4-6). இவ்வாறு தங்கள் பெற்றோரை கனம் பண்ணாமல் ஐந்தாவது கட்டளையை மீறுகின்றனர் (யாத். 20:12) என இயேசு சுட்டிக் காட்டுகின்றார்.

தேவனுடைய தெளிவான கட்டளைகளிலிருந்து மீறுவதற்கு ஒரு வழிமுறையாக வெளிப்புற தோற்றத்தைக் கொள்வோமாயின். கட்டளையைத் தந்தவரை மீறுகிறவர்களாகிறோம். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும்" (மத். 15:19). தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நீதியின்படி, தேவனே ஒரு தூய இருதயத்தைத் தர முடியும்.

ஏதோ ஒருநாளல்ல!

“ஒவ்வொரு நாளும் கிறிஸ்மஸ்” என்ற புத்தகத்தில் வில்லியம் டீன் ஹோவெல்ஸ் என்பவர் தன்னிடம் வாழ்த்துப் பெறுகின்ற ஒரு சிறு பெண்ணைப் பற்றி சொல்லுகின்றார். ஒரு நீண்ட கொடுமையான ஆண்டின் “ஒவ்வொரு நாளும் கிறிஸ்மஸ்” கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்குப் பின் மூன்றாவது நாளே யூல்மரத்தடிகளில் அனல்மூட்டி அநுபவித்த மகிழ்ச்சி மெலியத் துவங்கிவிட்டது. மிட்டாய்களை யாரும் விரும்பவில்லை. வான்கோழிகள் மிகவும் அரிதானவையாகிவிட்டது. அவற்றின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. பரிசுப் பொருட்கள் எங்கும் குவிந்துகிடப்பதால் அதனை யாரும் நன்றியோடு ஏற்பதில்லை. ஜனங்கள் கோபத்துடன் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிகின்றனர்.

நல்லவேளை, ஹோவெல்ஸின் கதை வெறும் கற்பனையில் தோன்றிய கதை. வேதாகமம் ழுழுவதிலும் தாம் கிறிஸ்துவைப் பற்றி பார்க்கின்றபோதும், கிறிஸ்மஸின் நோக்கம் ஒரு நம்பமுடியாத ஆசீர்வாதம், அது நம்மைச் சோர்வடையச் செய்வதேயில்லை.

இயேசுகிறிஸ்து பிதாவினிடத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, அப்போஸ்தலனாகிய பேதுரு எருசலேம் தேவாலயத்திலுள்ள ஒரு கூட்டத்தினரிடம், “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்” (அப். 3:22, உபா. 18:18) என்று மோசே முன்னறிவித்தார் எனவும் தேவன் ஆபிரகாமிடம், “உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வசம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என வாக்களித்தார், இவையெல்லாம் இயேசுவையே குறிப்பிடுகின்றன எனவும் எடுத்துரைத்தார் (அப். 3:25, ஆதி. 22:18) மேலும் பேதுரு, “சாமுவேல் முதற்கொண்டு எத்தனை பேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ அத்தனை பேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். அதாவது மேசியாவின் வருகையைக் குறித்து முன்னறிவித்தார்கள் (அப். 3:24) எனவும் கூறினார்.

நாமும் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் முடிந்த பின்னரும் அந்த மகிழ்ச்சியை அந்த வருடம் முழுவதும் காத்துக் கொள்வோம். கிறிஸ்துவை நாம் வேதாகமம் முழுவதிலும் காண்கிறதால் ஏதோ ஒரு நாளைப் போன்றல்லாமல் கிறிஸ்மஸ் எத்தனை முக்கியமானது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

கிறிஸ்மஸ்ஸைக் குறித்தக் கேள்விகள்

நாள் காட்டியில் டிசம்பர் மாதத்திற்குத் திருப்புவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே, கிறிஸ்மஸ் மகிழ்ச்சி எங்கள் வடக்கு பட்டணத்தில் வெளிப்படத் துவங்கி விடும். ஒரு மருத்துவ அலுவலகத்திலுள்ள மரங்களும், செடிகளும் வண்ண விளக்குகளாலும், மின் விளக்குகளின் சரங்களாலும் வெவ்வேறு வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டன. இரவு நேரத்தில் அந்தப் பகுதியின் ஒளிமயம் அனைவரையும் பிரமிக்கச் செய்வதாயிருந்தது. மற்றொரு வர்த்தக நிறுவனம் தங்கள் கட்டடங்களை ஆடம்பரமாகப் பொதியப் பெற்ற கிறிஸ்மஸ்  பரிசுபோல அலங்கரித்துள்ளது. எங்கு திரும்பினாலும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. கிறிஸ்மஸ்கால விற்பனைகளும் துவங்கியிருந்தன.

சிலர் இத்தகைய ஆடம்பர வெளிப்படுத்துதலை விரும்புகின்றனர். வேறுசிலர் இதனை அதிருப்பியோடு பார்க்கின்றனர். ஆனால், மற்றவர்கள் கிறிஸ்மஸை எப்படிப் பார்க்கின்றனர். என்பது கேள்வியல்ல. நாம் ஒவ்வொருவரும் இந்த கொண்டாட்டத்தை எப்படி கருதுகிறோம் என்பதே நமது சிந்தனை.

இயேசுவின் பிறப்பிற்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இயேசு தன்னடைய சீடர்களிடம், “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார் (மத். 16:13). அதற்கு அவர்கள், சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்க தரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறதார்கள் என்று பதிலளித்தனர். அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று தனிப்பட்ட கருத்தைக் கேட்கின்றார் (வச. 15). அதற்குக் பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான் (வச. 16).

இந்த ஆண்டும் அநேகர் இந்தக் குழந்தையாரென்ற உண்மையைத் தெரிந்து கொள்ளாமலே கிறிஸ்மஸைக் கொண்டாடலாம். நாம் மற்றவர்களோடு உரையாடும் போது அவர்களிடம் அக்கேள்வியைக் கேட்பதன் மூலம் அவர்களும் இயெசுவைத் தெரிந்துகொள்ள உதவுவோம். கிறிஸ்மஸ் என்பது மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஒரு குழந்தையைப் பற்றி மகிழ்ச்சிதரும் கதையா? அல்லது நம்மைப் படைத்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளைப் பார்க்கும்படி நம்மில் ஒருவராக வந்துள்ளரா?

தவறான பக்கத்தில்?

கானா தேசத்தில், டெக்கிமான் என்ற இடத்திற்குச் செல்ல போடப்படிருந்த பாலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. டானோ ஆற்றின் மறு கரையில் உள்ள நியூ க்ரோபோ பகுதி வேறு சாலை வசதி இல்லாமல் துண்டிக்கப்பட்டது. போதகர் சாமுவேல் அப்பையாவின் ஆலயத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. ஏனென்றால் அவரது சபையின் அனேக அங்கத்தினர்கள் நியூ க்ரோபோவில் – ஆற்றின் “மறுபக்கம்” வசித்தார்கள்.

இந்தப் பிரச்சனையின் நடுவில், ஆலயத்தின்கீழ் இயங்கும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இன்னும் பல ஆதரவற்ற குழந்தைகளை சேர்க்க போதகர் சாமுவேல் முயன்று கொண்டிருந்தார். எனவே அவர் ஜெபித்தார். அவரது ஆலயம் ஆற்றின் மறு பக்கத்தில் உள்ள நியூ க்ரோபோவில் திறந்தவெளிக் கூட்டங்களை ஏற்பாடு செய்தது. சிறிது காலத்திலேயே அவர்கள் புது விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ஒரு புதிய சபை ஆரம்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு நியூ க்ரோபோவில் இடம் ஒதுக்கப்பட்டது. பிரச்சனையினூடே தேவன் தம்முடைய மீட்புப் பணியை ஒருங்கிணைத்தார்.

சுதந்தரத்தின் “மறுபக்கத்தில்” பவுல் இருந்தபோது, (சிறையிலடைக்கப்பட்ட போது) தன்னுடைய நிலையைக் குறித்து அவர் புலம்பவில்லை. பிலிப்புவில் உள்ள சபைக்கு, “சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்று” என்று கடிதம் எழுதினார் (பிலிப்பியர் 1:12). அவரது கட்டுகள் “அரமனையெங்கும் உள்ளவர்கள்” கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ள உதவியதாகக் கூறுகிறார் (வச. 13). அதனால் இயேசுவைக் குறித்த நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள மற்றவர்களும் துணிவு பெற்றார்கள்
(வச. 14).

தடங்கல்கள் வந்தபோதும், போதகர் சாமுவேலும், பவுல் அப்போஸ்தலரும், தங்கள் பிரச்சனைகளினூடே பணிசெய்ய புது வழியை தேவன் காட்டியதை உணர்ந்தார்கள். நாம் இன்று எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலைகளில் தேவன் எப்படி இடைபடுகிறார்?