சத்தியத்தில் நங்கூரமிட்டது
என் குடும்பம் கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான, அற்புதமாக கடினமான அரைசாந்து பூசப்பட்ட சுவர்கள் உட்பட நிறைய பண்புக்கூறுகளைக் கொண்ட வீட்டில் வசிக்கிறது. இந்த சுவர்களில், ஒரு படத்தைத் தொங்கவிட, நான் ஒரு மர ஆதரவுக்குள் ஆணியைத் துளைக்க வேண்டும் அல்லது ஆதரவுக்காக ஒரு அரைசாந்து நங்கூரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடு கட்டுபவர் எனக்கு எச்சரித்தார். இல்லையெனில், ஒரு அசிங்கமான துளையை ஏற்படுத்தி, படம் தரையில் விழக்கூடிய அபாயத்தை நான் கொண்டிருக்கிறேன்.
ஏசாயா தீர்க்கதரிசி எலியாக்கிம் என்ற சிறிய வேதாகம கதாபாத்திரத்தை விவரிக்க ஒரு சுவரில் உறுதியாக அறையப்பட்ட ஆணியின் உருவத்தை பயன்படுத்தினார். ஊழல் அதிகாரியான செப்னாவைப் (ஏசாயா 22: 15–19) போலவும், தங்களைத் தாங்களே பலப்படுத்திக்கொள்ளப் பார்த்த இஸ்ரவேல் மக்களை போலவுமல்லாமல் (வச. 8–11) - எலியாக்கிம் தேவன்மீது நம்பிக்கை வைத்திருந்தார். எசேக்கியா ராஜாவுக்கு அரண்மனை நிர்வாகியாக எலியாக்கிமின் பதவி உயர்வு குறித்து தீர்க்கதரிசனம் கூறி, எலியாக்கிம் ஒரு “உறுதியான இடத்தில் ஆணியாக கடாவப்படுவார்” என்று ஏசாயா தீர்க்கதரிசனமாக எழுதினார் (வச. 23). தேவனின் சத்தியத்திலும் கிருபையிலும் பாதுகாப்பாக நங்கூரமிட்டிருப்பது எலியாக்கிம் தனது குடும்பத்திற்கும் அவரது மக்களுக்கும் ஒரு ஆதரவாக இருக்க அனுமதிக்கும் (வச. 22-24).
ஆயினும், ஏசாயா இந்த தீர்க்கதரிசனத்தை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு எந்தவொரு நபரும் உயர் நிலையான பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை ஒரு தெளிவான நினைவூட்டலுடன் முடித்தார் - நாம் அனைவரும் தோல்வியடைகிறோம் (வச. 25). நம்முடைய வாழ்க்கையில் முற்றிலும் நம்பகமான நங்கூரம் இயேசு மட்டுமே (சங்கீதம் 62: 5–6; மத்தேயு 7:24). நாம் மற்றவர்களைக் கவனித்து, அவர்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, ஒருபோதும் தோல்வியடையாத நங்கூரமான அவரிடமும் அவர்களை சுட்டிக்காட்டுவோம்.
இதுதான் இயேசு!
பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி திறமைக்கான போட்டியான America’s Got Talent நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், ஐந்து வயது சிறுமி ஒருவர் மிகவும் உற்சாகத்துடன் பாடினார். நடுவர்களில் ஒருவர் ஒரு 1930 ல் இருந்த பிரபல குழந்தை பாடகர் மற்றும் நடனக் கலைஞருடன் இந்த குழந்தையை ஒப்பிட்டார். ஷெர்லி டெம்பல் உங்களுக்குள் எங்கேயோ வாழ்கிறார் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கு அவளுடைய எதிர்பாராத பதில்: “ஷெர்லி டெம்பல் அல்ல. இயேசு!”
அந்த சிறுமியின் ஆழ்ந்த புரிதலைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில், அவளுடைய சந்தோஷம் அவளுக்குள் வாழ்ந்த இயேசுவிடமிருந்து வந்தது. அவரை விசுவாசிக்கிற அனைவருமே தேவனோடு நித்திய ஜீவனுக்கான வாக்குத்தத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் இயேசு தம்முடைய ஆவியினூடாக அவர்களில் வாழ்கிறார் என்பதையும் வேதவசனங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. எங்கள் இருதயங்கள் இயேசுவின் வாசஸ்தலமாகின்றன (கொலோசெயர் 1:27; எபேசியர் 3:17).
நம்முடைய இருதயங்களிலுள்ள இயேசுவின் பிரசன்னம் நன்றியுணர்வுக்கான எண்ணற்ற காரணங்களால் நம்மை நிரப்புகிறது (கொலோசெயர் 2: 6-7). நோக்கம் மற்றும் ஆற்றலுடன் வாழும் திறனை அவர் கொண்டுவருகிறார் (1:28-29). கொண்டாட்டம் மற்றும் போராட்ட காலங்கள் இரண்டிலும், எல்லா சூழ்நிலைகளின் மத்தியிலும் அவர் நம் இதயங்களில் மகிழ்ச்சியை வளர்க்கிறார் (பிலிப்பியர் 4:12-13). நாம் அனைத்தையும் பார்க்க முடியாவிட்டாலும் கூட தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடப்பிக்கிறார் என்ற நம்பிக்கையை கிறிஸ்துவின் ஆவி நம் இருதயங்களுக்கு அளிக்கிறது (ரோமர் 8:28). நம்மைச் சுற்றியுள்ள குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் அதன் மத்தியில் ஆவியானவர் சமாதானத்தைத் தருகிறார் (கொலோசெயர் 3:15).
நம்முடைய இருதயங்களில் வாழும் இயேசுவிடமிருந்து வரும் நம்பிக்கையுடன் அவருடைய பிரசன்னத்தை பிரகாசிக்க நம்மால் அனுமதிக்க முடியும் இதனால் மற்றவர்களால் கவனிக்காமல் இருக்க முடியாது.
ஒருபோதும் தனியாக இல்லை
"இது வீடற்ற தன்மை, பசி அல்லது நோயைக் காட்டிலும் மிகவும் துன்பகரமானதாக இருக்கலாம்" என்று தி எகனாமிஸ்ட்டின் 1843 இதழில் மேகி ஃபெர்குசன் எழுதினார். அவளுடைய பொருள்? தனிமை. ஒருவரின் சமூக அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், தனிமையின் அதிகரித்துவரும் விகிதங்களை ஃபெர்குசன் விவரித்தார், தனிமையாக இருப்பதைப் போன்றவற்றின் இதயத்தை பறிக்கிற எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்துகிறார்.
தனிமையின் காயம் நமக்கு புதிதல்ல. உண்மையில், தனிமைப்படுத்தலின் வலி பண்டைய பிரசங்கி புத்தகத்தின் பக்கங்களை எதிரொலிக்கிறது. சாலமன் ராஜாவை போல், எந்தவொரு அர்த்தமுள்ள உறவுகளும் இல்லாததைக் கண்டவர்களின் துக்கங்களை புத்தகம் பிடிக்கிறது (4: 7–8). குறிப்பிடத்தக்க செல்வத்தைப் பெற முடியும் என்றும், அதிலிருந்து எந்த மதிப்பையும் அனுபவிக்க முடியாது என்றும் அப்புத்தகத்தின் ஆக்கியோன் புலம்பினார், ஏனெனில் அதைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை.
ஆனால் ஆக்கியோன் தோழமையின் அழகையும் அங்கீகரித்தார், நீங்கள் சொந்தமாக அடையக்கூடியதை விட அதிகமாக சாதிக்க நண்பர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள் என்று எழுதுகிறார் (வச. 9). தேவைப்படும் நேரத்தில் தோழர்கள் உதவுகிறார்கள் (வச. 10), கூட்டாளர்கள் ஆறுதல் தருகிறார்கள் (வச. 11); மற்றும் கடினமான சூழ்நிலைகளில் நண்பர்கள் பாதுகாப்பை வழங்க முடியும் (வச. 12).
தனிமை என்பது ஒரு குறிப்பிடத்தக்க போராட்டம்-நட்பு மற்றும் சமூகத்தின் நன்மைகளை வழங்கவும் பெறவும் தேவன் நம்மைப் படைத்தார். நீங்கள் தனியாக உணர்கிறீர்கள் என்றால், மற்றவர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்க தேவன் உங்களுக்கு உதவ பிரார்த்தனை செய்யுங்கள். இதற்கிடையில், இயேசுவின் ஆவி எப்போதும் நம்முடன் இருப்பதால் விசுவாசி ஒருபோதும் உண்மையிலேயே தனியாக இல்லை என்ற யதார்த்தத்தில் ஊக்கத்தைக் காணுங்கள் (மத்தேயு 28:20).
வல்லமையான ஓடை
வாஷிங்டன் டி சி நகரில் உள்ள ஆபிரிக்க-அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் அடிமைத்தனத்தையும் அதன் பின்விளைவுகளையும் கண்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கும்போது அங்குள்ள ஒரு அமைதியான அறையில் ஒளி வரக்கூடிய வெண்கல கண்ணாடிகளால்
ஆன சுவர்களில் தண்ணீர் மேலிருந்து மழைபோல ஊற்றி ஒரு சிறிய குளம் போன்று இருக்கும்.
அந்த அறையில் முனைவர் மார்ட்டின் லூத்தர் கிங் கூறிய சொற்கள் எழுதப்பட்டிருந்தன “நீதி மழையை போல பெய்யும் வரை, நேர்மை ஒரு வல்லமையான ஓடையை போல புரண்டு ஓடும் வரை நாம் போராடுவோம் என்று நாம் தீர்மானித்திருக்கிறேன்”.. இந்த வல்லமையுள்ள வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் ஆமோஸின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
மத வழிபாடுகளிலும்,பண்டிகைகள் கொண்டாடுவதிலும், பலிகள் செலுத்துவதிலும் அதிகம் நாட்டம் கொண்டு ஆனா உள்ளத்தில் தேவனை விட்டு வெகு தூரத்தில் இருந்த மக்களின் மத்தியில் தான் ஆமோஸ் தீர்க்கதரிசியாக வாழ்ந்து வந்தார். அவர்களுடைய செயல்கள் தேவனுடைய கட்டளைகளையும், தேவையுள்ளவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் ஒதுக்கினதால் தேவன் அவர்கள் செயல்களை நிராகரித்தார்.
அணைத்து மக்களின் நலனுக்காக உண்மையான அக்கறை தம் மக்கள் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ஆமோஸ் தன புத்தகத்தில் எழுதியுள்ளார். இப்பேற்பட்ட வாழ்வுமுறை மற்ற உயிரை வலிமையாக்கும் நதியாக இருக்கும்.
தேவனின் இணைந்து இருக்கிறோம் என்பதற்கு சான்றாக நம்மை சுற்றி இருப்பவர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பது வெளிப்படுத்தும் என்று இயேசு கற்றுக்கொடுக்கிறார் (மத் 22:37-39). தேவனை நேசிக்க நம் இதயங்கள் நாடுவது நீதியை நேசிக்கும் இடத்தில் இருந்தும் வருவதாக.
எக்காள சத்தம்
‘டப்ஸ் ‘என்கிற எக்காள சத்தம் ஆனது அமெரிக்க ராணுவ தளத்தில் தினமும் நாள் முடியும்போதும் இறுதிச் சடங்குகளிலும் பாடப்படும் அழைப்பானது நான் அந்த பாடல் அழைப்பின் வசனங்களை வாசிக்கும் போது ஆச்சரியப்பட்டுப் போனேன் அதில் உள்ள அநேக வரிகள் தேவன் நம் அருகே என்கிற சொற்களோடு முடிந்தது.ராணுவ வீரர்கள் இருட்டு நிறைந்த காட்டில் இருந்தாலும் அல்லது தன் நெருங்கிய நண்பரின் இழப்பை குறித்து துக்கப்படும்போதும் ‘ தேவன் நம் அருகே’ என்கிற தான இந்த வார்த்தை அவர்களுக்கு நிச்சயமாக நம்பிக்கை தரும் .
பழைய ஏற்பாட்டிலும் இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் தம் அருகே இருக்கிறார் என்பதை நினைவூட்டும் படி இதேபோல் எக்காலம் ஊதப்படும் தேவனுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் உள்ள உடன்படிக்கையின் ஒப்பந்தத்தின்படி பண்டிகை நாட்களில் எக்காளம் ஊதவேண்டும் எக்காலம் ஊதினால் தேவ பிரசன்னத்தை நினைவுபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவன் அவர்களின் எக் காலங்களையும்எதிர்பார்ப்புகளையும் கேட்க வல்லவராயிருக்கிறார் என்று கேட்பவர்களுக்கு உதவ வாஞ்சையாய் இருக்கிறார் என்பதையும் உணர்த்தும் படி இந்த ஒப்பந்தம் .
இன்றைக்கும் டேவன் நம் அருகில் இருக்கிறார் என்பதை நாம் நினைவு கூறுவோம் ஒருவேளை நம் ஜெபமும் தேவனுக்கு எக்காளம் போல் தொனி த்து அதைக் கேட்டு பதில் அளிப்பார் என்பதை குறித்து நாம் ஊக்குவிக்கப்படுவோம்( 1 பேதுரு 3:12 ) .நம் வருத்தங்களும் கஷ்டங்களும் தீரும் படி அவர் பெலப்படுத்தும் பிரசனத்தினால் நாம் வேண்டுதலுக்கு பதிலளிக்கிறார்.
உலகத்துக்கு மகிழ்ச்சி
ஓவ்வொரு கிறிஸ்மஸிற்கும், உலகெங்கிலும் உள்ள, கிறிஸ்துவின் பிறப்பிடம் பற்றிய காட்சிகளால் எங்கள் வீட்டை அலங்கரிக்கிறோம். எங்களிடம் ஒரு ஜெர்மன் பிறப்பிட பிரமிட் உள்ளது. பெத்லெகேமிலுள்ள ஒலிவ மரத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட முன்னணைக் காட்சி மற்றும் பிரகாசமான வண்ண மெக்ஸிகன் நாட்டுப்புற பதிப்பும் உள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து விசித்திரமாய் நுழைந்தது எங்கள் குடும்பத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. பாரம்பரியமான ஆடுகள் மற்றும் ஒட்டகங்களுக்கு பதிலாக, ஒரு நீர்யானை குழந்தை இயேசுவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது.
ஒரு தனித்துவமான பாரம்பரிய முன்னோக்கு இந்த பிறப்பிடக் காட்சிகளுக்கு உயிர்கொடுத்தது. இயேசுவின் பிறப்பு ஒரு தேசத்திற்கோ அல்லது கலாச்சாரக்திற்கோ மட்டுமல்ல என்பதை ஆழ்ந்து சிந்திக்கும்போது ஒவ்வொரு அழகான நினைவூட்டலும் என் இதயத்தை அன்பினால் நிறப்புகிறது. இது பூமி முழுதுக்கும் ஒரு நல்லச் செய்தி, ஒவ்வொரு நாட்டினரும், இனத்தவரும் மகிழ்ந்திருக்க ஒரு காரணம். நம்முடைய ஓவ்வொரு பிறப்பிடக்காட்சியிலும் சித்தரிக்கப்பட்ட சிறு குழந்தை, தேவனுடைய இதயத்தின் உண்மையை இந்த முழு உலகத்துக்கும் வெளிப்படுத்தியது. ஆர்வமிக்க பரிசேயனான நிக்கோதேமுவுடன் கிறிஸ்து உரையாடுவதைக் குறித்து யோவான் 'தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தாhர்" (யோவா. 3:16) என்று எழுதுகிறார்.
இயேசுவாகிய பரிசு அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. உலகத்தில் எந்த இடத்தை நீங்கள் இருப்பிடமாய் கொண்டிருந்தாலும்,, இயேசுவின் பிறப்பு தேவன் உங்களுக்கு கொடுக்கும் சலுகை, அன்பு மற்றும் சமாதானமே. கிறிஸ்துவில் புதிய வாழ்வைக் கண்ட யாவரும் 'சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களும், ஜாதிகளிலுதிருந்து" ஒருநாள் தேவனுடைய மகிமையை என்றென்றைக்கும் கொண்டாடுவார்கள் (வெளி. 5:9).
ஜெபத்தின் சலுகை
நாட்டுப்புற பாடலாசிரியர் கிறிஸ் ஸ்டேபிள்டன் அவர்களால் எழுதப்பட்ட “டேடி டஸன்ட் ப்ரே எனிமோர்” என்ற பாடல் தன்னுடைய தகப்பனார் தனக்காக ஏறெடுக்கும் ஜெபத்தினால் ஈர்க்கப்பட்டு எழுதியது. அதன் கடுமையான வாரிகள், தன் தகப்பனாரின் ஜெபம் ஏமாற்றத்தாலோ, சோர்வினாலோ முடிவடைந்ததினால் அல்ல, ஆனால் அவருடைய மரணத்தில் முடிவடைந்ததை வெளிப்படுத்துகிறது. தன் தகப்பன் ஜெபத்தில் இயேசுவோடு பேசுவதற்கு மாறாக இயேசுவுடன் நடந்துக்கொண்டு முகமுகமாய் அவருடன் பேசிக்கொண்டிருப்பதை கற்பனை செய்கிறார்.
தன் தகப்பன் தனக்காக செய்யும் ஜெபத்தினை நினைக்கும்போது, வேதத்தில் ஒரு தகப்பன் தன் மகனுக்காக ஜெபிப்பதை நினைவுபடுத்துகிறது. தாவீது ராஜா தன் கடைசி நாட்களிலே தன் மகன் சாலொமோன் இஸ்ரவேலின் அடுத்த புதிய ராஜாவாக பதவியேற்க ஆயத்தம் பண்ணினார். சாலொமோனை அபிஷேகம் பண்ண தேசத்தை ஒன்று கூட்டின தாவீது ராஜா எப்போதும் போலவே ஜனங்களை ஜெபத்தில் வழி நடத்தினார். இஸ்ரவேலின் மேல் தேவனுடைய கிருபையை நினைவுகூர்ந்த ராஜா, இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு எப்போதும் விசுவாசமாயிருக்க ஜெபித்தார். பிறகு, ராஜா தேவனிடம் தன் மகனுக்காக ஒரு தனிப்பட்ட வேண்டுதலாக 'என் குமாரனாகிய சாலொமோன், உம்முடைய கற்பனைகளையும், உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கு அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும்" (1 நாளாகமம் 29:19) என்று ஜெபித்தார்.
தேவன் நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கிற மக்களுக்காக விசுவாசத்தோடு ஜெபிப்பதற்காக குறிப்பிட்ட உரிமையை தந்திருக்கிறார். நம்முடைய விசுவாசத்தின் மாதிரி ஜீவியம் நாம் மரித்த பின்பும் அழியாத தாக்கத்கை ஏற்படுத்தும். சாலொமோனுக்காகவும், இஸ்ரவேலுக்காகவும் தாவீதின் வேண்டுதலை, தாவீது மரித்த பின்பும், தேவன் பதிலளித்தது போல நம்முடைய ஜெபத்தின் தாக்கமும் நம் காலம் கடந்து வாழ்ந்திருக்கும்.
இனிமையான அறுவடை
நாங்கள் எங்கள் புதிய வீட்டை வாங்கும்போது நிறுவப்பட்ட ஒரு திராட்சை தோட்டத்தையும் அதினோடு சுதந்தரித்துக்கொண்டோம். போதுமான அளவு குடும்பமாக நேரம் செலவளித்து தோட்டத்தை பண்படுத்தவும், நீர்பாய்ச்சவும், அதை பண்படுத்த ஆரம்பித்தோம். இறுதியில் எங்கள் முதல் அறுவடை வந்ததும் ஆர்வத்துடன் ஒரு திராட்சையை பறித்து புசித்தேன். ஏமாற்றமடையும் விதமாய் யாரும் விரும்பாத புளிப்பு நிறைந்த சுவையை உடையதாக இருந்தது. மிகவும் பிரயாசப்பட்டு பராமரித்த தோட்டத்தின் புளிப்பான அறுவடையைக்குறித்து மிகவும் எரிச்சலடைந்தேன்.
ஏசாயா 5ல் தேவனும் இதைபோல் எரிச்சலடைவதை பார்க்கிறோம். இஸ்ரவேல் தேசத்தோடே அவருடைய உறவைக்குறித்து இங்கு விவரிக்கிறது. திராட்சை தோட்டக்காரராக, "அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்"
(ஏசா. 5:2). ஆனால் அவருக்கு திகைப்பூட்டும்படி, அவர் திராட்சை தோட்டமாகிய இஸ்ரவேல் தனது அநீதியும், சுயநலமுமான புளிப்பான பழங்களை தந்தது. தேவன் அந்த தோட்டத்தை அளித்து அதிலே சிலவற்றை மாத்திரம் பிரித்தெடுத்து அவைகளை வெவ்வேறு திசைகளில் சிதரப்பண்ணி, அவைகள் ஒரு நாள் நல்ல கனிகளை தருமென்று எண்ணினர்.
திராட்சைத்தோட்டத்தை மறுபடியும் இயேசு யோவான் சுவிசேஷத்தில் உவமையாக்குவதை பார்க்கிறோம். "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்" (யோவான் 15:5). இதிலே இயேசு, விசுவாசிகளாகிய நாம் கொடியாகவும், திராட்சச்செடியாகிய அவரில் இணைந்திருக்கும்படி நம்மை அழைக்கிறார். நாம் ஜெபத்துடன் ஆவிக்குள்ளவர்களாய் இயேசுவுக்குள் இணைந்திருந்தால் ஆவியின் கனிகளில் முதன்மையும் இனிமையுமான அன்பை நாம் சுலபமாக அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
நம்பிக்கையைத் தேர்ந்தேடுத்தல்
உலகில் எஸ் ஏ டி (SAD) எனப்பட்ட ( காலா கால கோளாறு) மன அழுத்தத்தில் பாதிக்கப்படுகிற இலட்சக் கணக்கான மக்களில் நானும் ஒருவள். இந்த மன அழுத்தம் குளிர் காலத்தில் சூரிய வெளிச்சம் மிக குறுகிய நேரம் இருக்கும் இடங்களில் காணலாம். எல்லாவற்றையும் உறையவைக்கும் அந்த சாபத்திற்கு முடிவு உண்டோ என்று நான் அங்கலாய்க்கும்போது நீண்ட நாட்களும் வெப்பமான சீதோஷணமும் வருமா என்று நான் ஏங்குவதுண்டு.
மீதி இருக்கும் பனி ஊடே பூக்கள் துளைத்துக்கொண்டு வெளிவரும்போது --- அது வசந்த காலத்தின் அறிகுறி - தேவன் நம்முடைய இருண்ட காலத்தை கூட மாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு நினைவுவரும்.. இவ்விதமான உறையும் குளிர் நாட்களைப் போல இஸ்ரவேலர் தேவனை விட்டு தங்கள் முகத்தை திருப்பியபோது தான், மீகா தீர்க்கதரிசி இவ்விதம் அறிக்கையிட்டார்: “மனுஷரில் செம்மையானவன் இல்லை”
(மீகா 7:2)
அந்த இரருண்ட நாட்கள் மிகவும் மோசமாக இருந்தாலும் கூட, அந்த தீர்க்கதரிசி நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் தெரியாவிட்டாலும் கூட தேவன் கிரியை செய்துகொண்டுதான் இருக்கிறார் (வச. 7) என்று விசுவாசித்தார்.
நாமும் கூட முடிவில்லா குளிர்காலங்களில் வசந்த காலம் வெளிப்படாத நேரங்களில் அவ்விதமாக போராடுகிறோம். இன்னும் விரக்திக்குள் செல்வோமா அல்லது “என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்போமா?” (வச. 7)
தேவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோம. 5:5) அலறுதலும், வருத்தமுமில்லாத வாசஸ்தலத்தை அவர் கொண்டுவருகிறார் (வெளி. 21:7). அது வரை நாம் அவரில் “ நீரே என் நம்பிக்கை” (சங்கீதம் 39:7) என்று இளைப்பாறலாம்.