நாட்டுப்புற பாடலாசிரியர் கிறிஸ் ஸ்டேபிள்டன் அவர்களால் எழுதப்பட்ட “டேடி டஸன்ட் ப்ரே எனிமோர்” என்ற பாடல் தன்னுடைய தகப்பனார் தனக்காக ஏறெடுக்கும் ஜெபத்தினால் ஈர்க்கப்பட்டு எழுதியது. அதன் கடுமையான வாரிகள், தன் தகப்பனாரின் ஜெபம் ஏமாற்றத்தாலோ, சோர்வினாலோ முடிவடைந்ததினால் அல்ல, ஆனால் அவருடைய மரணத்தில் முடிவடைந்ததை வெளிப்படுத்துகிறது. தன் தகப்பன் ஜெபத்தில் இயேசுவோடு பேசுவதற்கு மாறாக இயேசுவுடன் நடந்துக்கொண்டு முகமுகமாய் அவருடன் பேசிக்கொண்டிருப்பதை கற்பனை செய்கிறார்.

தன் தகப்பன் தனக்காக செய்யும் ஜெபத்தினை நினைக்கும்போது, வேதத்தில் ஒரு தகப்பன் தன் மகனுக்காக ஜெபிப்பதை நினைவுபடுத்துகிறது. தாவீது ராஜா தன் கடைசி நாட்களிலே தன் மகன் சாலொமோன் இஸ்ரவேலின் அடுத்த புதிய ராஜாவாக பதவியேற்க ஆயத்தம் பண்ணினார். சாலொமோனை அபிஷேகம் பண்ண தேசத்தை ஒன்று கூட்டின தாவீது ராஜா எப்போதும் போலவே ஜனங்களை ஜெபத்தில் வழி நடத்தினார். இஸ்ரவேலின் மேல் தேவனுடைய கிருபையை நினைவுகூர்ந்த ராஜா, இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு எப்போதும் விசுவாசமாயிருக்க ஜெபித்தார். பிறகு, ராஜா தேவனிடம் தன் மகனுக்காக ஒரு தனிப்பட்ட வேண்டுதலாக ‘என் குமாரனாகிய சாலொமோன், உம்முடைய கற்பனைகளையும், உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கு அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும்” (1 நாளாகமம் 29:19) என்று ஜெபித்தார்.

தேவன் நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கிற மக்களுக்காக விசுவாசத்தோடு ஜெபிப்பதற்காக குறிப்பிட்ட உரிமையை தந்திருக்கிறார். நம்முடைய விசுவாசத்தின் மாதிரி ஜீவியம் நாம் மரித்த பின்பும் அழியாத தாக்கத்கை ஏற்படுத்தும். சாலொமோனுக்காகவும், இஸ்ரவேலுக்காகவும் தாவீதின் வேண்டுதலை, தாவீது மரித்த பின்பும், தேவன் பதிலளித்தது போல நம்முடைய ஜெபத்தின் தாக்கமும் நம் காலம் கடந்து வாழ்ந்திருக்கும்.