எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

ஆசீர்வாத திற்காக காத்திருத்தல்

பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான உணவகம் 45 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சமைத்து வரும் ஒரு குழம்பில் இருந்து சூப் ஒன்றை பரிமாறுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் அது மீண்டும் மீண்டும் நிரப்பப்படுகிறது. 'நிரந்தர குழம்பு' என்று அழைக்கப்படும் இந்த நடைமுறை இடைக் காலத்திற்கும் முந்தையது. சில 'எஞ்சியவை' சில நாட்களுக்குப் பிறகு நன்றாக ருசிப்பது போல நீட்டிக்கப்பட்ட சமையல் நேரம் ஒன்றிணைந்து தனித்துவமான சுவைகளை உருவாக்குகின்றது. இந்த உணவகம் தாய்லாந்தில் மிகவும் சுவையான குழம்புக்கான பல விருதுகளை வென்றுள்ளது.
நல்ல விஷயங்கள் பெரும்பாலும் நேரம் எடுக்கும், ஆனால் நம் மனித இயல்பு பொறுமையுடன் போராடுகின்றது. "எவ்வளவு காலம்?" என்ற கேள்வி முழு வேதாகமத்திலும் வருகிறது. ஒரு தெளிவான உதாரணம் ஆபகூக் தீர்க்கதரிசியிடமிருந்து, அவர் தனது புத்தகத்தை இவ்வாறு தொடங்குகிறார். "கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் நீர் கேளாமல் இருக்கிறீரே!" (ஆப. 1:2). ஆபகூக் (பெயரின் அர்த்தம் 'மல்யுத்த வீரர்') இரக்கமற்ற பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தின் படையெடுப்பு மூலம் தனது நாடு (யூதா) மீது கடவுளின் தீர்ப்பை முன்னறிவித்தார். மேலும் ஊழல் செய்தவர்கள் மற்றவர்களை சுரண்டும் போது வளர்வதற்கு கடவுள் எவ்வாறு அனுமதிக்க முடியும் என்று அவர் போராடினார். ஆனால் கடவுள் தம்முடைய நேரத்தில் நம்பிக்கையையும் மீட்டு எடுப்பதையும் வாக்களித்தார். குறித்த காலத்துக்கு தரிசனம் (கடவுளின் உதவி) இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு. அது நிச்சயமாய் வரும். அது தாமதிப்பதில்லை" (2:3).
பாபிலோனின் சிறையிருப்பு 70 வருடம் நீடித்தது. மனித கணக்கெடுப்பின்படி அது ஒரு நீண்ட காலம், ஆனால் கடவுள் அவருடைய வார்த்தைக்கு உண்மையும் நேர்மையும் உள்ளவர்.
கடவுளின் சில மிகச்சிறப்பான ஆசீர்வாதங்கள் வருவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். அது தாமதித்தாலும், அவரையே நோக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவர் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் சரியான ஞானத்துடனும் அக்கறையுடனும் தயார் செய்கிறார். நாம் காத்திருப்பதற்கு அவர் எப்போதும் தகுதி வாய்ந்தவர்.

தேவனின் கால் சுவடுகள்

“கடவுள் எங்கே வாழ்கிறார் என்று எனக்கு தெரியும்” என்று என் நான்கு வயது பேரன்  என் மனைவி கேரியிடம்  கூறினான். “அது எங்கே ?” என்று ஆர்வத்துடன் அவள்  கேட்டாள். “உங்கள் வீட்டின் அருகில் உள்ள காட்டு வெளியில் ஆவர் வாழ்கிறார்” என்று என் பேரன்  கூறினான்.

அவர்கள் இருவரும் உரையாடியதை பற்றி   கேரி என்னிடம்  கூறி அவனுடைய சிந்தனையை எது தூண்டியது என்று ஆச்சரியப்பட்டாள். “எனக்கு தெரியும்” என்று நான் கூறினேன். “அவன் சென்ற முறை வந்திருந்தபோது நாங்கள் அருகிலுள்ள காட்டு வெளியில் நடந்து சென்றோம். அப்பொழுது அவனிடம், நாம் தேவனை காண முடியாவிட்டாலும் அவர் செய்திருப்பவைகளை  நாம் காணலாம்.”  “நான் ஏற்படுத்துகிற கால் சுவடுகளை உன்னால்  பார்க்க முடிகிறதா?” என்று அந்த நதியின் மணலான பகுதியில் நடந்து செல்லும் போது என் பேரனிடம் கேட்டேன். “இந்த மிருகங்களும் மரங்களும் நதியும் தேவனின் கால் சுவடுகள். அவர் படைத்தவற்றை காணும்போது அவர் இங்கே இருக்கிறார் என்பதை நாம் அறியலாம்.”

104-ஆம் சங்கீதத்தை எழுதியவரும் படைப்பில் தேவன் இருக்கும் ஆதாரங்களை சுட்டிக்காட்டி, ஆச்சரியத்துடன் “ கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது” என்று கூறுகிறார் (வச 24). இங்கே காணப்படும் ஞானத்திற்கான எபிரேய வார்த்தை திறமையான கைவினைத்திறனை விவரிக்க வேதாகமத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையில் தேவனின் கைவேலை அவர் இருப்பதை பறைசாற்றி அவரை துதிக்க விரும்ப செய்கிறது.

சங்கீதம் 104 “என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி” என்ற வார்த்தைகளில் தொடங்கி நிறைவடைகிறது (வச  1, 35). ஒரு குழந்தையின் கையில் இருந்து ஒரு கழுகின் கண் வரை, நம்மைச் சுற்றியுள்ளவைகள்  நம் சிருஷ்டிகரின் கலைத்திறனையும் அவருடைய முழுமையான திறமையைப் பற்றியும் பேசுகிறது. அவை எல்லாவற்றையும் இன்று நாம் ஆச்சரியத்துடன் எடுத்துக் கொள்வோம் - அதற்காக அவரைத் துதிப்போம்!

காணப்படாதவைகளின் தேவன்

“சில நேரங்களில் நான் யாருக்கும் காணப்படாதவனாயும், அறியப்படாதவனைப் போலவும் உணருகிறேன் .ஆனால் தேவன் என்னை உபயோகிக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன்.

நான் சென்றிருந்த உணவகத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த அண்ணனிடம் பேசின போது தான் தெரிந்தது ஆச்சரியப்படும் விதமான சாட்சி அவர்களிடம் இருந்து .அவர்கள் சொன்னது என்னவென்றால் போதை பழகத்திற்கும் விபச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தேன் வீடு இல்லாமல் வீதிகளில் வாழ்ந்து வந்தேன் ஆனால் இவைகளை விட்டு தேவனை பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அறிந்து சில வருடத்திற்கு முன்பு ஒருநாள் முழங்கால்படியிட்டு அவர் பாதத்தில் விழுந்தேன் அவரோ என்னை எல்லா கட்டுக்களிலிருந்து விடுவித்தார் .

தேவன் அவர்கள் வாழ்வில் செய்த அற்புதத்தை சாட்சியாக என்னிடம் பகிர்ந்ததினால் அவர்களுக்கு நன்றி செலுத்தினேன். அந்த சாட்சியின் மூலம் நம் தேவன் ஒருவரின் வாழ்வை எவ்வளவு தூரம் மாற்ற முடியும் என்பதையும் அது எனக்கு செய்த கிரியையினால் தேவன் அவர்களை உபயோகப்படுத்தினார் என்று அவர்களிடம் கூறினேன்.
மற்றவர்கள் தவறாக எண்ணக் கூடிய நபர்களை கொண்டும் தேவன் தம் சித்தத்தை நிறைவேற்றுகிறார் அப்போஸ்தலர்களில் அந்திரேயாவை விட அனைவருக்கும் தன் சகோதரரான பேதுருவை தான் அதிகம் தெரியும் ஆனால் யோவான் புஸ்தகத்தில் நாம் வாசிப்பது என்னவென்றால் பேதுருவை மேசியாவிடம் அழைத்து வந்தது அந்திரேயா தான் (யோவா. 1:41-42).

அந்திரேயா மூலமாகத்தான் பேதுரு இயேசுவை சந்தித்தான். யோவானுடைய சீஷனாக இருந்த அந்திரேயா இயேசுவைப் பற்றி அறிந்தவுடன் உடனடியாக அவரை விசுவாசித்து பின் தொடர்ந்து தன் சகோதரனுக்கும் அறிமுகப்படுத்தினான் அந்திரேயாவின் தாழ்மையான விசுவாசமானது உலகை உலுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .

தேவன் உண்மையுள்ள ஊழியத்தை காணப்படுகிறார் நாம் எங்கு இருந்தாலும் யாரும் பார்க்கவில்லை என்றாலும் அவர் நம்மை உபயோகப்படுத்த முடியும் .

சமாதானம் உடைக்கப்படும்போது

1914 ல், பெல்ஜியத்தில் ஒரு குளிர்ந்த கிறிஸ்மஸ் ஈவ் அன்று வீரர்கள் தோண்டிய ஒரு பதுங்கு குழியிலிருந்து பாடல் சத்தம் மிதந்துக் கொண்டிருந்தது. 'சைலன்ட் நைட்" என்ற பாடல் ஜெர்மன் மொழியிலும் பிறகு ஆங்கிலத்திலும் ஒலித்தன. முந்தய நாளில் ஒருவருக்கொருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய போர் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அகழிகளிலிருந்து வெளியே வந்து அவர்களுக்கு இடையே இருந்த யாருக்கும் சொந்தமல்லாத நிலத்தில், கைக்குலுக்கவும், கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும், எதிர்பாராத பரிசுகளையும் பரிமாறிக்கொண்டனர். போர் நிறுத்தம் அடுத்த நாள் வரை தொடர்ந்தது. வீரர்கள் பேசுவதும், சிரிப்பதும், ஒன்றாக சேர்ந்து கால்பந்து போட்டிகளையும் ஏற்பாடு செய்தனர்.

முதலாம் உலகப் போரின் வெஸ்டர்ன் ஃபிரன்டில் 1914ம் ஆண்டு நிகழ்ந்த கிறிஸ்மஸ் போர்நிறுத்தம், நீண்ட காலத்திற்கு முன்பு கிறிஸ்மஸ் ஈவ் அன்று தேவதூதர்கள் அறிவித்த சமாதானத்தின் சுருக்கமாக காட்சியளித்தது. பயந்துப்போன மேய்ப்பர்களிடம் ஒரு தூதன் 'பயப்படாதிருங்கள்; இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்" என்ற உறுதியளிக்கும் வார்த்தைகளால் பேசினார் (லூக். 2:10-11). அப்பொழுது பரமசேனைத் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" என்றுச் சொல்லி தேவனைத் துதித்தனர் (வச. 13-14).

இயேசு சமாதானக் காரணர் - நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டவர் (ஏசா. 9:6). சிலுவையில் அவர் செய்த தியாகத்தினிமித்தம் அவர் பாவமன்னிப்பையும், அவரை நம்புகிற அனைவருக்கும் தேவனோடு சமாதானத்தையும் கொடுக்கிறார்.

கிறிஸ்மஸ் பிரசன்னம்

‘’அவருடைய வருகையை எந்தக் காதும் கேட்காது, ஆனால் இந்த பாவ உலகத்தில், சாந்தகுணமுள்ள ஆத்துமாக்கள் அவரை ஏற்றுக்கொள்ளும் காலகட்டத்தில் அன்பான இயேசு பிறக்கிறார்." எல்லோராலும் நேசிக்கப்பட்ட “ஓ லிட்டில் டவுன் ஆஃப் பெத்லெஹேம்" என்ற பாடலின் வரிகள் கிறிஸ்மஸ்ஸின் மைய கருத்தை சுட்டிக்காட்டுகிறது. நம்மை பாவத்திலிருந்து மீட்கவும், தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் தேவனோடு ஒரு புதிய மற்றும் முக்கியமான உறவை ஏற்படுத்தவும் இயேசு கிறிஸ்து, உடைந்துபோன இந்த உலகத்திற்கு வந்தார்.

இந்தப் பாடல் எழுதிய பல வருடங்களுக்குப்பின், இந்த பாடலாசிரியர் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அனுபவித்த இந்த உறவைப் பற்றி 'இது எனக்கு எவ்வளவு தனிப்பட்டதாக வளர்கிறது என்று கூற முடியாது. அவர் இங்கே இருக்கிறார். அவர் என்னை அறிந்திருக்கிறார், நானும் அவரை அறிந்திருக்கிறேன். இது வெறும் வார்த்தை அல்ல. உலகத்தில் இது மிக உண்மையானது, மற்றும் ஒவ்வொரு நாளும் இதை அதிக உண்மையாக்கி கொண்டே இருக்கிறது. வருடங்கள் செல்லும்போது இது எப்படி வளரும் என்று ஆச்சரியப்பட வைக்கிறது" என்று விவரிக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய பிரசன்னத்தை உறுதியாய் கூறுவது, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட பெயர்களில் ஒன்றான 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்" (ஏசாயா 7:14) என்பதை பிரதிபலிக்கிறது. மத்தேயு எழுதின சுவிஷேத்தில் எபிரேய மொழியில் இம்மானுவேல் என்பதற்கு 'தேவன் நம்மோடிருக்கிறார்" என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது (12:23)

தேவன், நாம் எப்போதும் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்துக்கொள்ள, இயேசுவின் மூலமாக நம்மிடம் வந்தார். அவர் நம்முடன் இருப்பதே நம் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய பரிசு.

எல்லாவற்றையும் கேட்கும் தேவன்

உலகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிக நேரமெடுத்து போய் சேர்ந்தடைந்த அஞ்சல் 89 வருடம் கழித்து பெறுநரிடம் போய் சேர்ந்தது. 2008ஆம் ஆண்டில் யுகேவை சேர்ந்த ஒருவருக்கு, அவர் முகவரியில் குடியிருந்தவருக்கு, 1918ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு விருந்து அழைப்பிதல் வந்தது. "ராயல் மெயில்"  முழுமையாக அனுப்பப்பட்ட இந்த அஞ்சல் இத்தனை வருடம் தாமதமான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகத்தின் தலைசிறந்த தொடர்புகொள்ளும் முறைகள் கூட நம்மை சில நேரங்களில் கைவிடலாம். ஆனால் வசனம் நமக்கு தெளிவாக கூறுவது என்னவென்றால் விசுவாசிகளின் ஜெபத்தை தேவன் கேட்காமல் போவதில்லை. யெகோவா தேவனுக்கும், பாகாலுக்குமுள்ள வித்யாசத்தை தெளிவாக எலியா 1 இராஜாக்கள் 18'ல் நிரூபித்தான்.  அங்கு உண்மையான தேவன் யார் என்று நிரூபிக்கும் பாகால் தீர்க்கதரிசிகளின் நீண்ட நேர ஜெபத்தை பார்த்து எலியா கேலி  செய்தான். "உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்" (வச. 27). அதன் பிறகு எலியா, அந்த மக்கள் விசுவாசத்திற்கு திரும்பும்படியாக தேவன் அவனுக்கு பதிலளிக்கும்படியாக ஜெபித்தான். அவர் வல்லமை மிகவும் தெளிவாக அங்கு விளங்கினது.

நம் ஜெபங்கள் எலியாவின் ஜெபத்தைபோல் உடனடியாக பதிலளிக்கப்படவில்லை என்றாலும், அவைகளை தேவன் கேட்டுகொண்டியிருக்கிறார்  என்று நிட்சயித்துகொள்வோம் (சங். 34:17). பரிசுத்தவான்களுடைய ஜெபங்களை, பொற்கலசங்களிலுள்ள தூபவர்கங்களைப் போல அவர் நம் ஜெபங்களை பொக்கிஷிமாக கருதுகிறார் (வெளி. 5:8) என்று வாசிக்கிறோம். தேவன் நம் ஜெபங்களை தம்முடைய சொந்த வழியிலும், விலைமதிப்பற்ற ஞானத்தினாலும் தகுந்த சமயத்தில் பதிலளிக்கிறார். பரலோகத்துக்கு அனுப்பின எந்த கடிதமும் தொலைந்துபோவதில்லை.

நட்சத்திரங்களுக்கு அப்பால் கேட்பது

கைப்பேசி, அருகலை (Wi-Fi), தடங்காட்டி (GPS), ஊடலை (Bluetooth) சாதனங்கள், மற்றும் நுண்ணலைஅடுப்பு (microwave) இல்லாத வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் உள்ள Green Bank என்னும்  ஊரில் இவைகள் எல்லாமே கிடையாது. அமெரிக்காவிலேயே மிக நிசப்தமான ஊர் என்று சொல்லப்படுகிறது. இங்கே தான் உலகத்திலேயே மிகப்பெரிய ‘திசைமாற்றக் கூடிய வானொலி தொலைநோக்கி’ கொண்ட Green Bank Observatory இருக்கிறது. இந்த தொலைநோக்கிக்கு அமைதி முக்கியம்; அப்பொழுதுதான்  விண் வெளியில் காணும் pulsars மற்றும்  galaxies  உமிழும் இயற்கையான வானொலி அலைகளை உணர முடியும்.. அந்த தொலைநோக்கியினுடைய பரப்பு கால்பந்து மைதானத்தை விட அதிகம்.. அது மின்னணுக்கள் அதன் துல்லிய உணர்திறனில் குறுக்கிடாத ஒரு இடத்தில், 13,000 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட ’தேசிய வானொலி அமைதி மண்டலத்தில்’ இருக்கிறது.  

இவ்விதமான அமைதியில் தான் விஞ்ஞானிகள் கோட்களின் இசையை கேட்க முடியும்.  இந்த பிரபஞ்சத்தை உண்டாக்கின சிருஷ்டிகரின் சத்தத்தை கேட்க வேண்டும் என்றால் நாமும் நம்மை இவ்விதமாக அமைதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.. வழிதவறிய, எளிதாக கவனம் சிதற கூடிய  மக்களுக்கு இறைவன் ஏசாயா மூலமாக இவ்விதம் பேசினார்: “உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்... உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.( ஏசா. 55: 3) அவரை நாடி அவருடைய மன்னிப்பை தேடுகிறவர்களிடத்தில் நிச்சயமாக அன்பு கூறுவார்.

வேத வாசிப்பின் மூலமாகவும் ஜெபத்தின் மூலமாகவும் நாம் கருத்தாக இறைவனை  நோக்கலாம். அவர் தூரத்தில் அல்ல. நாம் அவரை இம்மையிலும் மறுமையிலும் முதன்மையாக வைத்து, அன்றாடம் அவருக்கு நேரம் ஒதுக்கவேண்டுமென்று  அவர் விரும்புகிறார்.

நம்முடைய ஜெபத்தின் மூலம் மற்றவர்களை நேசித்தல்

1450 ல் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவர் தன்னுடைய அச்சகத்தை நகர்த்தக்கூடிய முறையில் இணைத்து,  மேற்கத்திய வெகுஜன தொடர்பின் சகாப்தத்தின்போது இதை பயன்படுத்தி, கற்றலை புதிய சமூக பகுதிகளுக்கு பரப்பினார், உலகமுழுவதும் கல்வியறிவு அதிகரித்தது. புதிய யோசனைகள் சமூக மற்றும் மத சூழலில் விரைவான மாற்றத்தை கொண்டு வந்தது. குட்டன்பெர்க், வேதாகமத்தின் முதல் அச்சிடப்பட்ட பதிப்பை தயாரித்தார். இதற்கு முன்பு, வேதாகமம் மிகுந்த சிரத்தையோடு, எழுத்தாளர்களால் ஒரு வருடம் வரை கைநகலெடுக்கப்பட்டது.

பல நூற்றாண்டுகளக, அச்சகத்தின் மூலமாக நீங்களும் நானும் வேதத்தை நேரடியாக அணுகமுடிகிறது. நம்மிடத்தில் மின்னணு பதிப்புகள் இருந்தாலும்,  அனேகர் அவருடைய கண்டுபிடிப்பாகிய அச்சிடப்பட்ட வேதாகமத்தையே நம் கரங்களில் வைத்திருக்கிறோம், வேதாகமத்தின் செலவு மற்றும் அதை நகலெடுக்கும் நேரத்தைக் கொண்டு, ஒரு காலத்தில் அணுகமுடியாமல் இருந்த வேதாகமம் இன்று நம் விரல் நுனியில் உள்ளது.

தேவனுடைய சத்தியத்தை அணுகுவது ஒரு ஆச்சர்யமான சிலாக்கியம். நீதிமொழிகளை எழுதியவர் நாம் வேத வசனங்களில் அவருடைய கட்டளைகளை,  நேசிக்க வேண்டிய ஒன்றாக, கண்மணியைப் போல (நீதி. 7:2) கருதவேண்டும் என்று குறிப்பிடுகிறார். அவைகளை விரல்களில் கட்டி, இருதய பலகையில் எழுதிக்கொள்ளவும் (வச. 3) குறிப்பிடுகிறார். நாம் வேதத்தை புரிந்துக்கொண்டு அதன் ஞானத்தின்படி வாழ முயலும்போது, நாம், எழுத்தாளர்களைப் போல, தேவனுடைய சத்தியத்தை, நாம் எங்கு சென்றாலும் எடுத்து செல்ல, விரல்களிலிருந்து இருதயத்திற்குள் இழுக்கிறோம்.

மிகச் சிறந்த அலை

“அலையை” ஏற்படுத்த மக்கள் விரும்புவர்.  உலகெங்கும் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், இசைக் கச்சேரிகளிலும் ஒரு சில மக்கள் எழுந்து நின்று, தங்கள் கைகளை உயர்த்தி அசைக்கின்றனர், இதுவே ஆரம்பம், சில நொடிகளில், அவர்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும் எழுந்து அதனையே செய்கின்றனர். இலக்கு என்னவெனில், ஓர் அசைவு தொடர்ச்சியாகப் பரவி, முழு அரங்கையும் அசையச் செய்வதேயாகும். அது அரங்கத்தின் கடைசி முனையை எட்டியதும், அதனைத் தொடங்கியவர் சிரித்து ஆர்ப்பரிக்கின்றார், தொடர்ந்து அசைவுகளை போய்க் கொண்டிருக்கச் செய்கின்றார்.

முதல் முதலாக பதிவு செய்யப்பட்ட அலை நிகழ்வு, 1981 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்வில் ஏற்படுத்தப் பட்டது. இத்தகைய அலையில் பங்கு பெற நான் விரும்புகின்றேன், ஏனெனில் அது வேடிக்கையாக இருக்கும். இந்த அலையைச் செய்யும் போது, நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியும், ஒன்றிணைவதும் சுவிசேஷத்தைப் பிரதிபலிக்கின்றது- இயேசுவில் நாம் பெறுகின்ற இரட்சிப்பு என்கின்ற நற்செய்தி, எங்கும் உள்ள விசுவாசிகள் அனைவரையும் அவரைப் போற்றுவதிலும் நம்பிக்கையிலும் ஒன்றிணைக்கின்றது. இந்த “முழுமையான அலை” இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் துவங்கியது. கொலோசே சபை அங்கத்தினர்களுக்கு பவுல் எழுதும் போது, இதனைக் குறித்து, “அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன் தருகிறது போல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவக் கிருபையைச் சத்தியத்தின்படி அறிந்து கொண்ட நாள் முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாயிருக்கிறது” (கொலோ.1:6) என்கின்றார். இந்த நற்செய்தி தருகின்ற பலன் என்னவெனின், பரலோகத்தில் உங்களுக்காக (நமக்காக) வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம் பெற்றுள்ள, கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசமும் அன்பும் ஆகும் (வ.3-4).

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம், சரித்திரத்திலேயே மிகப் பெரிய அலையில் பங்கெடுக்கின்றோம். அதனைத் தொடர்ந்து செய்வோம்! நாம் அனைவரும் அதனை நிறைவேற்றி முடிக்கும் போது, அதைத் துவக்கியவரின் முகத்தில் ஏற்படும் சிரிப்பைக் காண்போம்.