“மக்கள் இன்னும் எனக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார்களா?.

மனைவி தன்னை சிறையில் சந்திக்கிறபோதெல்லாம் அந்த ஊழியர் இந்தக் கேள்வியை மனைவியினிடத்தில் முதலாவது கேட்பார். இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய விசுவாசத்திற்காக பொய்யாய் குற்றஞ்சாட்டபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறைச்சாலையின் நிபந்தனைகளாலும், அங்கு காணப்பட்ட விரோத போக்கினாலும் அவ்வப்பொழுது அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. உலகமெங்கும் உள்ள விசுவாசிகள் அவருக்காக ஊக்கமாக ஜெபித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஜெபிப்பதை நிறுத்தமாட்டார்கள் என்று உறுதி அளிக்க வேண்டி இருந்தது ஏனென்றால் அவர்களுடைய ஜெபத்தை தேவன் வல்லமையாக பயன்படுத்துகிறார் என்று நம்பினார்.

மற்றவர்களுக்காக நம்முடைய ஜெபங்கள் – முக்கியமாக விசுவாசத்திற்காக துன்புறுத்தப்படுபவர்களுக்கு – ஒரு முக்கியமான பரிசு. பவுல் தனது மிஷ்னரி பயணத்தின்போது எதிர்கொண்ட கஷ்டங்களை குறித்து கொரிந்து பட்டண விசுவாசிகளுக்கு எழுதுகிறார். “அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்” “பிழைப்போம் என்ற நம்பிக்கையும் அற்றுப்போயிற்று”
(2 கொரி. 1:8). ஆனால், பின்னர் தேவன் அவர் விடுவித்ததாக கூறி அதைச்செய்ய தான் பயன்படுத்திய விதத்தையும் விவரித்தார் : “அவர் எங்களை தொடர்ந்து தப்புவிப்பார் என்று நம்பினோம், நீங்கள் உங்கள் ஜெபங்களால் எங்களுக்கு உதவுவது போல” (வச. 10-11).

தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் பெரிய காரியங்களை சாதிக்க நம்முடைய ஜெபத்தின் மூலம் நகர்கிறார். மற்றவர்களை நேசிக்க ஒரு சிறந்த வழி அவர்களுக்காக ஜெபிப்பதே, ஏனென்றால் நம்முடைய ஜெபத்தின் மூலம் தேவன் மட்டுமே வழங்கும் கதவைத் திறக்கிறோம். மற்றவர்களுக்காக நாம் ஜெபிக்கும்போது நாம் தேவனுடைய பெலத்தினால் அவர்களை நேசிக்கிறோம். அவரைவிட பெரியவர் அல்லது அன்பானவர் வேறு யாருமில்லை.