எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சிண்டி ஹெஸ் காஸ்பர்கட்டுரைகள்

நம்மை நாமே கவனித்துக் கொள்ளல்

எனது கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்த அன்று, அவரது படுக்கையண்டை இருந்து அந்த இரவை மிகக் கவலையுடன் கழித்தேன். நடுப்பகலில் வழக்கமாக நான் அன்று செய்ய வேண்டிய சிகை திருத்தத்தைப் பற்றி நினைவு கூர்ந்து, சிக்குப் பிடித்த என் தலைமுடியை விரல்களால் போதிவிட்டுக் கொண்டு “நான் அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினேன்.

“அம்மா, உங்கள் முகத்தைக் கழுவிக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டபடி சிகை திருத்தத்திற்கு செல்லுங்கள்” என்று என் மகள் கூறினாள்.
“வேண்டாம், வேண்டாம் பரவாயில்லை, நான் இங்கே இருக்க…

மறைந்திருக்கும் பொக்கிஷம்

நானும், என் கணவரும் வெவ்வேறு முறைகளில் வேதத்தை வாசிப்போம். ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக டாம் கற்றிருந்தான். ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி மெதுவாக வாசிக்கும் பழக்கமுடையவர். நான் மேலோட்டமாக, மிகவேகமாக வாசித்து விடுவேன். ஆனால் என் கணவர் என்னை விட வசனங்களை மிக ஆழமாக வாசித்து, வாசிப்பதைத் தன் மனதில் ஞாபகம் வைத்துக் கொள்வார். ஒரு வாரத்திற்கு முன்னால் வாசித்ததைக் கூட ஞாபகப்படுத்தி மேற்கோள் காட்டுவார். நான் ஓர் புத்தகத்தை அல்லது திரையில் சிலவற்றை வாசித்து முடித்த அந்த நிமிடமே வாசித்தது என் ஞாபகத்திற்கு வராமல்…

வங்கியில் என்ன இருக்கிறது?

2009 ஆம் ஆண்டில் குளிர் காலத்தில், நியூ யோர்க் (New York) நகரின் ஹட்சன் ஆற்றில் (Hudson River) அவசர நிலையில் பயணிகள் விமானம் ஒன்று இறக்கப்பட்டது. எந்த ஒரு உயிர் சேதமுமின்றி பாதுகாப்பாக இறக்கப்பட்ட அந்த விமானத்தின் தலைமை விமானி, செஸ்லி சலன்பெர்கரிடம் (Chesley Sullenberger), வாழ்வா சாவா எனத் தீர்மானிக்கும் தருணங்களை எதிர்கொண்டதை குறித்து கேட்டார்கள். அதற்கு அவர், “ஒருவகையில் பார்த்தால், 42 வருடங்களாக, அனுபவம், கல்வி, பயிற்சி என்னும் வங்கியில் சிறு சிறு வைப்புகளாக சீராக சேமித்து வந்துள்ளேன், அக்கணக்கிலிருந்து…

ஞானிகளின் வார்த்தைகள்

எனது சகோதரனின் மருமகன் ஒரு சமூக வலைத்தளத்தில் கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதினார். “மெல்லிய சத்தத்தில் செய்ய வேண்டாமென்று எனக்குள்ளாக வார்த்தைகள் கேட்கப்படாமல் இருந்திருந்தால், நான் இன்னும் அதிகமாக இணயதளத்தில் சொல்லி இருப்பேன். கிறிஸ்தவ விசுவாசிகளாக நீங்கள் அந்த மெல்லிய சத்தம் பரிசுத்த ஆவியானவருடையது என்று எண்ணுவீர்கள். அப்படி இல்லை. அது என் மனைவி ஹெய்டியின் சத்தமே”

சிரிப்புடன் கூட ஒரு தெளிவான எண்ணமும் வருகிறது. உண்மையான தன்மையை அறியக்கூடிய ஒரு சிநேகிதனின் எச்சரிப்புகள், தேவனின் ஞானத்தைப் பிரதிபலிக்கலாம். “ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள்” என்று…

அன்பு முதலில் வருகிறது

ஒரு நாள் மாலை எனது சிநேகிதி அவளது வீட்டின் முன் அறையில் தொங்கவிடப்படக்கூடிய அலங்கரிக்கப்பட்ட மூன்று தகடுகளில் ஒன்றை என்னிடம் காண்பித்தாள். “அன்பு” என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட அந்த தகட்டைத் தூக்கி பிடித்துக் கொண்டு “பார், எனக்கு அன்பு கிடைத்துவிட்டது” என்று கூறினாள். விசுவாசமும் நம்பிக்கையும் வந்து கொண்டிருக்கின்றன என்றாள்.
ஆகவே அன்பு முதலாவது வருகிறதென்று எண்ணினேன். விசுவாசமும், நம்பிக்கையும் அதைப் பின்தொடருகின்றன.
அன்பு முதலில் வந்து விட்டது. ஏனெனில் அன்பு தேவனிடமிருந்து ஆரம்பிக்கிறது. “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில்…

என்னைத் தாங்கிப் பிடித்தல்

எனது பெற்றோரோடு சேர்ந்து குடும்பமாக சாலை வழியாக பயணம் செய்வதை நான் நிறுத்தினபொழுது, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வசித்து வந்த எனது தாத்தா, பாட்டியை சென்று பார்ப்பது மிகவும் அபூர்வமாகிவிட்டது. ஆகவே ஒருமுறை அவர்கள் வசித்து வந்த விஸ்கான்சிஸினிலுள்ள லேண்டு ஆஃப் லேக்ஸ் (Land of Lakes) என்ற சிற்றூருக்கு ஒரு விமானம் மூலம் சென்று நீண்ட வார விடுமுறை நாட்களை கழிக்க தீர்மானம் பண்ணினேன். நான் திரும்பி எனது ஊருக்குச் செல்ல விமான நிலையத்திற்கு சென்றபொழுது, விமானப் பயணம் செய்திராத எனது பாட்டி…