மேற்கு டெக்ஸாஸில் ஓர் உஷ்ணமான நாளில் ஓர் பெண் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் விளக்கு ஸ்தம்பம் அருகில் ஒரு எழுதப்பட்ட வாசகத்தைப் பிடித்துக்கொண்டு நிற்பதை என் மருமகள் வானியா பார்த்தாள். வாகனத்தை அவள் அருகாமையில் ஓட்டிச்சென்று, அதில் என்ன எழுதியிருக்கிறது என்று வாசிக்க முயற்சித்தாள். தனக்குள் அதில் ஆகாரம் அல்லது பணஉதவி கேட்டு எழுதியிருப்பாள் என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் இந்த மூன்று வார்த்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள். அதில் “உனக்கு நோக்கம் உண்டு” என்றிருந்தது.

தேவன் நம் ஒவ்வொருவரையும் ஓர் குறிப்பிட்ட நோக்கத்துடன்தான் படைத்திருக்கிறார். அதில் மிக முக்கியமான நோக்கம் என்னவெனில் பிறர் தேவைகளை சந்தித்து தேவனுக்கு கனத்தைக் கொடுப்பது. இது ஓர் வழியாகும். சிறு பிள்ளைகளை வளர்க்கும் தாய் அவர்கள் மூக்கிலிருந்து வடியும் சளியைத் துடைத்து தன் பிள்ளைகளுக்கு இயேசுவைப்பற்றி கூறுவதாகும். தனக்கு திருப்தி அளிக்காத ஓர் பணியில் ஈடுபட்டிருக்கும் ஓர் பணியாள் மனச்சாட்சியுடன் தன் பணியைச் செய்து அப்பணியைத் தன் தேவனுக்காகச் செய்கிறேன் என்று எண்ணித் தன் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் (கொலோ. 3:23–24). தன் கண்பார்வையை இழந்த ஓர் பெண்மணி, தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்காக ஜெபித்து, அவர்களை தேவன் மீது நம்பிக்கை வைக்க உற்சாகப்படுத்துவது அவள் நோக்கம் என்பதை அவள் அறிய வேண்டும்.

நாம் பிறப்பதற்கு முன்பே “அவைகள் அனைத்தும் (நாம்) உருவேற்படும் நாட்களும், உமது புத்தகத்தில் எழுதியிருந்தது” என்று சங்கீதம் 139:16ல் வாசிக்கிறோம். நாம் நமது சிருஷ்டி கர்த்தாவுக்கு மகிமையைக் கொடுக்கத்தக்கதாய் “பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்” (சங். 139:14). ஒருபோதும் மறவாதீர்கள் – உங்களுக்கு நோக்கமுண்டு.