ராஜரிகத்தை உபசரிப்பது
ஸ்காட்லாந்தில் ஷிண்ட்டி (ஹாக்கி போன்ற விளையாட்டு) விளையாட்டில் இங்கிலாந்து ராணியை சந்தித்த பிறகு, சில்வியா மற்றும் அவரது கணவர் தேநீருக்காக அரச குடும்பத்தினர் அவர்களை சந்திக்க விரும்புகிறார்கள் என்ற செய்தி அவர்களை வந்தடைந்தது. சில்வியா சுத்தம் செய்து தயார்படுத்தத் தொடங்கினார். அரச விருந்தினர்களுக்கு விருந்தளிப்பதில் பதட்டமாக இருந்தார். அவர்கள் வருவதற்குள் மேசை மீது வைக்க சில பூக்களை எடுத்துவர அவள் வெளியே சென்றாள், அவளுடைய இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. உடனடியாக, அவர்தான் ராஜாதி ராஜா என்பதையும் அவர் ஒவ்வொரு நாளும் அவளுடன் இருக்கிறார் என்பதையும் தேவன் நினைவூட்டுவதை அவள் உணர்ந்தாள். உடனே அவள் சமாதானமாக உணர்ந்தாள், “மொத்தத்தில் எப்படியிருந்தாலும், இது ராணி மட்டுமே!” என்று எண்ணினாள்.
சில்வியா யோசித்தது சரிதான். அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டது போல, “தேவன் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்” (1 தீமோத்தேயு 6:15), அவரை பின்பற்றும் யாவரும் “தேவனுடைய புத்திரர்கள்” (கலாத்தியர் 3:26). நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறோம் (வச. 29). இனி நாம் பிரிவினைகளால் கட்டுப்பட்டவர்களல்ல - இனம் சமூக நிலை அல்லது பாலின வேறுபாடுகள் போன்றவை – “நாமெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்” (வச. 28). நாமெல்லாரும் இராஜாவின் பிள்ளைகள்.
சில்வியாவும் அவரது கணவரும் ராணியுடன் ஒரு அற்புதமான உணவு விருந்தை அனுபவித்திருந்தாலும், எதிர்காலத்தில் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ராஜாதி ராஜா ஒவ்வொரு தருணத்திலும் என்னுடன் இருக்கிறார் என்ற நினைப்பூட்டலை நான் விரும்புகிறேன். இயேசுவை முழுமனதுடன் விசுவாசிப்பவர்கள் (வச. 27) தாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றறிந்து ஒற்றுமையில் வாழமுடியும்.
இந்த சத்தியத்தைப் பிடித்துக் கொள்வது இன்று நாம் வாழும் முறையை எவ்வாறு வடிவமைக்கும்?
தேனை விட மதுரமானது
அக்டோபர் 1893இல் சிகாகோ தினத்தில் நகரத்தின் திரையரங்குகள் மூடப்பட்டன. ஏனெனில் அனைவரும் உலக கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று உரிமையாளர்கள் கண்டறிந்தனர். ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்றனர். ஆனால் சிகாகோவின் மறுமுனையில் டுவைட் மூடி (1837–1899) ஒரு இசை மண்டபத்தை பிரசங்கத்தாலும், போதனையாலும் நிரப்ப விரும்பினார். கண்காட்சியின் அதே நாளில் மூடியால் ஒரு கூட்டத்தை ஈர்க்க முடியுமா என்று அவரது நண்பர் ஆர். ஏ. டோரே (1856-1928) சந்தேகப்பட்டார். ஆனால் தேவனுடைய கிருபையால், அவர் செய்து காட்டினார். கூட்டம் ஏன் வந்ததென்றால் “இந்த பழைய உலகம் அறிய விரும்பும் ஒரு புத்தகம்-வேதம்” என்பதை மூடி அறிந்திருந்தார் என்று, பின்னர் டோரே கூறிமுடித்தார். மூடியைப் போலவே மற்றவர்களும் வேதாகமத்தை நேசிக்க வேண்டுமென்றும், அதை அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் தவறாமல் வாசிக்க வேண்டுமென்றும் டோரி விரும்பினார்.
சிகாகோவில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேவன் தம்முடைய ஆவியின் மூலம் தன் ஜனங்களைத் தன்னிடம் கொண்டுவந்தார். இன்றும் அவர் தொடர்ந்து பேசுகிறார். சங்கீதக்காரன் தேவன் மீதும் அவருடைய வேதவசனங்களின் மீதும் கொண்டிருந்த அன்பை நாமும் பிரதிபலிக்கமுடியும். “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங்கீதம் 119:103). சங்கீதக்காரனைப் பொறுத்தவரை தேவனுடைய கிருபை மற்றும் சத்தியம் அவரது பாதைக்கு ஒரு வெளிச்சமாகவும் அவரது கால்களுக்கு ஒரு தீபமாகவும் செயல்பட்டன (வச. 105).
நீங்கள் எவ்வாறு மீட்பரிலும் அவருடைய செய்தியிலும் கொண்டுள்ள அன்பில் இன்னும் அதிகமாய் வளர முடியும்? நாம் வேதத்தில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும்போது, தேவன் நாம் அவரிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அதிகரிக்கச் செய்து நமக்கு வழிகாட்டுவார், நாம் நடந்து செல்லும் பாதைகளில் அவருடைய ஒளியைப் பிரகாசிக்கப்பண்ணுவார்.
காலைதோறும் புதியவைகள்
என் சகோதரர் பால் கடுமையான கால்-கை வலிப்புடன் போராடி வளர்ந்தார், அவர் தனது வாலிப பருவத்தில் நுழைந்தபோது அது இன்னும் மோசமாகிவிட்டது. ஒரே நேரத்தில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியான வலிப்புத்தாக்கங்களை அவர் அனுபவித்ததால், இரவுநேரம் அவருக்கும் எனது பெற்றோருக்கும் வேதனையளித்தது. அறிகுறிகளைத் தணிக்கும் ஒரு சிகிச்சையை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, அதே நேரத்தில் நாளின் ஒரு பகுதியையாவது அவரை விழிப்புடன் வைத்திருக்கிறார்கள். என் பெற்றோர் ஜெபத்தில் கூக்குரலிட்டனர்: “தேவனே, தேவனே,, எங்களுக்கு உதவுங்கள்!”
அவர்களின் உணர்ச்சிகள் நொறுங்கியிருந்தாலும், அவர்களின் உடல்கள் களைப்படைந்து இருந்தாலும், பவுலும் என் பெற்றோரும் ஒவ்வொரு புதிய நாளுக்கும் தேவனிடமிருந்து போதுமான பலத்தைப் பெற்றார்கள். கூடுதலாக, என் பெற்றோர் புலம்பல் புத்தகம் உட்பட வேதாகம வார்த்தைகளில் ஆறுதல் கண்டனர். பாபிலோனியர்கள் எருசலேமை அழித்ததைப் பற்றி எரேமியா தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், “எட்டியும் பிச்சுமாகிய” சிறுமையை நினைவு கூர்ந்தார் (3:19). இன்னும் எரேமியா நம்பிக்கையை இழக்கவில்லை. கர்த்தரின் இரக்கங்களை அவர் மனதில் கொண்டார், அவருடைய இரக்கங்கள் “அவைகள் காலைதோறும் புதியவைகள்;” (வச. 23). என் பெற்றோரும் அவ்வாறே செய்தார்கள்.
நீங்கள் எதை எதிர்கொண்டாலும், தேவன் ஒவ்வொரு காலைதோறும் உண்மையுள்ளவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் நாளுக்கு நாள் நம் பலத்தை புதுப்பித்து, நம்பிக்கையைத் தருகிறார். சில நேரங்களில், என் குடும்பத்திற்கு செய்தது போலவே, ஆறுதலும் தருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு புதிய மருந்து கிடைத்தது, இது பவுலின் தொடர்ச்சியான இரவுநேர வலிப்புத்தாக்கங்களை நிறுத்தி, எனது குடும்பத்திற்கு மறுசீரமைப்பு தூக்கத்தையும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் அளித்தது.
நம்முடைய ஆத்மாக்கள் நமக்குள் முறிந்துபோகிறபோது (வச. 20), தேவனின் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் என்ற வாக்குறுதிகளை நாம் மனதில் கொள்ளலாம்.
நாம் தேவன் இல்லை
மேரே கிறித்துவத்தில், சி.எஸ். லூயிஸ் நாம் பெருமிதம் கொள்கிறோமா என்று கண்டுபிடிக்க சில கேள்விகளைக் கேட்க பரிந்துரைத்தோம்: மற்றவர்கள் என்னை பொருட்படுத்தாமல் இருக்கும் பொழுது அல்லது, கீழ்த்தரமாக பார்க்கும் பொழுது அல்லது உதாசீனப்பதுதும் பொழுதும் அது எனக்கு எவ்வளவு விரும்பத்தகாததாக இருக்கிறது. லூயிஸ் பெருமையை "மிகவும் தீமை" மற்றும் வீடுகளிலும் நாடுகளிலும் துயரத்திற்கு முக்கிய காரணியாகக் கண்டார். அவர் அதை ஒரு “ஆவிக்குரிய புற்றுநோய்” என்று அழைத்தார், இது அன்பு, மனநிறைவு மற்றும் பொது அறிவு ஆகியவற்றை அழிப்பதாக இருக்கிறது.
பெருமை என்பது காலங்காலமாக ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம், சக்திவாய்ந்த கடற்கரை நகரமான தீரின் தலைவரை தேவன் தனது பெருமைக்கு எதிராக எச்சரித்தார். ராஜாவின் பெருமை அவரது வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்: “நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால் இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தார் உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்.” - (எசே. 28:6-7). அவர் ஒரு தேவன் அல்ல, மனிதர் என்று அவர் அறிவார் (வச. 9).
பெருமைக்கு மாறாக பணிவு என்பது தேவனை அறிவதன் மூலம் நாம் பெறும் ஒரு நல்லொழுக்கம் என்று லூயிஸ் பெயரிட்டார். லூயிஸ், உறவில் இருக்கும் பொழுது நாம் "மகிழ்ச்சியுடனும், தாழ்மையுடனும்" இருப்போம். முன்னர் நம்மை அமைதியற்றவர்களாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் மாற்றிய நம் சொந்த கர்வத்தைப் பற்றிய வேடிக்கையான முட்டாள்தனத்திலிருந்து விடுபடுவதில் நிம்மதி அடைகிறோம். நாம் தேவனை எவ்வளவு அதிகமாக ஆராதிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அவரை அறிவோம், மேலும் அவருக்கு முன்பாக அவ்வளவு அதிகமாக நம்மைத் தாழ்த்திக் கொள்வோம். நாம் மகிழ்ச்சியோடும் பணிவோடும் அன்பு செலுத்தி சேவை செய்பவர்களாக இருப்போம்.
அனைத்தையும் அர்ப்பணித்தல்
கலைத் துறையில் பிரசித்தி பெற்ற இரண்டு நபர்கள் தேவன் தங்களை அழைத்தார் என்று விசுவாசித்து தங்கள் தொழில்களை விட்டு விட்டு இயேசுவுக்கு சேவை செய்ய தங்களை அர்ப்பணித்தார்கள். சீனாவின் லிசு இன மக்களுக்கு சேவை செய்ய இங்கிலாந்தில் நடக்கும் கச்சேரிகளில் பியானோ வாசிப்பதை ஜேம்ஸ் ஓ ஃபிரசர்-ம் (1886-1938), சுவிசேஷகராக கலைத்துறையில் கிடைத்த வாய்ப்பை அமெரிக்கரான ஜட்சன் வான் டெவெண்டேர்-ம் துறந்தனர். பின்னர் மிகவும் பிரபலமான “இயேசுவுக்கே ஒப்புவித்தேன்” என்ற பாமாலையை எழுதினார்.
கலைத் துறையில் இருக்கும் அநேகரை தேவன் அழைத்துக் கொண்டிருக்கும் போது இந்த இரு மனிதர்களும் கீழ்ப்படிந்து ஒன்றை பின்பற்றும்படி மற்ற ஒன்றைக் கைவிட்டார்கள். ஒரு வேளை இயேசு, மாற்கு 10:17-25ல் இருக்கும் வாலிப ஐஸ்வரியவானுக்கு கொடுக்கும் அறிவுரையை பார்த்து இவர்களும் ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம். அந்த பரிமாற்றத்தை பார்த்த பேதுரு “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே!” என்று கூறினார் (வச 8). தேவனை பின்பற்றுகிறவர்களுக்கு நித்தியத்தில் இதைவிட “நூறத்தனையாக”வும் நித்திய ஜீவனும் உண்டு என்று இயேசு உறுதியளிக்கிறார். ஆனால் அவருடைய ஞானத்தின் படி “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள்” (வச 31)
தேவன் நம்மை எங்கே வைத்திருந்தாலும் அனுதினமும் நம் வாழ்வை அவருக்கென்று அர்ப்பணிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். நமது வேலை பார்க்கும் அலுவலகமாக இருந்தாலும் அல்லது வீட்டில் இருந்து வெகு தூரமாக இருந்தாலும் அவருடைய கனிவான அழைப்பிற்கு கீழ்ப்படிந்து நமக்கு தந்த தாலந்துகளையும் வளங்களையும் வைத்து அவரை பின்பற்றும் போது நாம் மற்றவர்களை நேசிக்கவும் அவர்களின் தேவைகளையும் அறியவும் தேவன் நமக்கு உதவுவார்.
பழுக்க வைக்கும் செயல் முறை
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் தன்னுடைய 50 ஆண்டுகால ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் சார்லஸ் சிமியோன் (1759 -1836) தன் அருகில் வாழ்ந்த போதக நண்பரான ஹென்றி வென்னையும் அவருடைய மகள்களையும் சந்தித்தார். பார்த்து முடித்து செல்லும் போது அவருடைய மகள்கள் இருவரும் சிமியோனின் கடுமையான நடக்கை குறித்தும் சுய உறுதிப்பாடான குணத்தை குறித்தும் தங்கள் தந்தையிடம் குறிப்பிட்டார்கள். அதற்கு பதிலளிக்கும் படி அவருடைய மகள்களிடம் அருகில் இருந்த மரத்தில் இருந்து இன்னும் கனியாகாத பழத்தை ஒன்று பறிக்க சொன்னார். அதை ஏன் அவர் சொன்னார் என்று அவர்கள் இருவரும் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் “ இப்பொழுது இது பச்சையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வெயிலுக்கு பின்னரும் மறைக்க பின்னரும் அது பழமாகும். இதே போல் தான் சிமியோனும்” என்று கூறினார்.
வருட போக்கில் தேவனுடைய உருமாற்றும் கிருபையால் சிமியோன் மென்மையானார். அதற்கு ஒரு காரணம் தினமும் வேதம் வாசித்து ஜெபிப்பதற்கு அவர் அர்ப்பணித்தது. “ இதுதான் அவருக்கு இருக்கும் பெரிய கிருபைக்கும் ஆவிக்குரிய பெலத்திற்கான ரகசியம்” என்று அவருடன் சில மாதங்கள் தங்கி இருந்த நண்பர் அவரை குறித்து சாட்சி கொடுத்தார். எரேமியா தீர்க்கதரிசியை போல விசுவாசத்துடன் தேவ வார்த்தையை கைப்பற்றி வந்தார் சிமியோன். “‘ உம்முடைய வார்த்தைகள் கிடைத்த உடனே அவைகளை உட் கொண்டேன்” (எரேமியா 15:16) என்று எரேமியா கூறுகிறார். தேவனுடைய வார்த்தைகளை உட்கொள்ளுவது அவருக்கு ஆனந்தமும் அவர் இருதயத்துக்கு களிப்புமாக இருந்தது.
நாமும் கூட பச்சையாக புளிக்கும் பழமாக இருக்கலாம் ஆனால் தேவ ஆவியால் அவருடைய வார்த்தையை நாம் அதிகம் அறிந்து கொண்டு நாம் மென்மை பட தேவனை நாம் விசுவாசிக்கலாம்.
இடிபாடுகளின் மறுசீரமைபட்பு
பதினேழு வயதில், டோவெய்ன், திருடுதல் மற்றும் போதைக்கு அடிமைபட்டிருந்ததால், தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தன்னுடைய குடும்ப வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர் வெகுதூரம் செல்லவில்லை, தனது தாயின் கொல்லைப்புறத்தில் நெளிந்த உலோகத்தினால் ஒரு சிறு குடிலை அமைத்து, நாளடைவில் இது போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் கேசினோ என்ற இடமாக அறியப்பட்டது. எனினும் தன் பத்தொன்பதாம் வயதில் டோவெய்ன் இயேசுவின் இரட்சிக்கும் விசுவாசத்திற்குள் வந்தார். போதைப் பொருட்களிலிருந்து விடுதலைப் பெறுவது ஒரு நீண்டதும் சோர்வானதாவும் ஆனால், தேவனுடைய உதவியாலும், இயேசுவை விசுவாசிக்கும் நண்பர்களின் ஆதரவோடும் அவர் சுத்தமாகிவிட்டடர். டோவெய்ன் கேசினோ கட்டிப் பத்து வருடங்கள் கழித்து அவரும் மற்றவர்களும் சேர்ந்து அந்த குடிசையை ஒரு ஆலய வீடாக மாற்றினர். ஒரு காலத்தில் இருண்ட மற்றும் தடை செய்யப்பட்டதாக இருந்த இடம் இப்போது ஜெபிக்கும் மற்றும் ஆராதனைச் செய்யும் இடமாகியது.
இந்த ஆலயத்தின் தலைவர்கள், எரேமியா 33ல், டோவெய்ன் மற்றும் முன்னாள் கேசினோவுக்கு செய்ததைப் போல, தேவன் மக்களையும், இடத்தையும் எவ்வாறு குணப்படுத்தி மீட்டெடுக்க முடியும் என்பதைக் காண்கிறார்கள். எரேமியா தீர்க்கதரிசி, சிறைப்பிடிக்கப்பட்ட தேவமக்களிடம் பேசி, நகரம் காப்பாற்றப்படாது என்றாலும், தேவன் தம்முடைய ஜனத்தை குணமாக்கி அவர்களைக் கட்டுவித்து, அவர்களுடைய பாவங்களற அவர்களை சுத்திகரிப்பேன் என்று பேசினார் (எரே. 33:7,8). அப்பொழுது அந்த நகரம் அவருக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும், புகழ்ச்சியாயும், மகிமையுமாய் இருக்கும் (எரே. 33:9).
இதயத்தை உடைக்கும் பாவத்தைப்பற்றி நாம் விரக்தியடைந்து மனக்கசப்புடன் இருக்கும்போது, அவர் மேனன்பெர்க்கில் கொல்லைப்புறத்தில் செய்தது போல, தேவன் சுகத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வர நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.
எப்போதும் நன்றி சொல்லவேண்டும்
பதினேழாம் நூற்றாண்டில் மார்ட்டின் ரிங்கிட், ஜெர்மனியிலுள்ள சாக்சனி மாநிலத்தில் போதகராய் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக பணியாற்றி வந்தார். அப்போது ஜெர்மனி முழுவதும் போர் நடந்து வந்தது, அதோடு கூட கொள்ளை நோயும் பரவி கொண்டு வந்தது. அந்த வருடமே அவர் மனைவி அடக்க ஆராதனையை சேர்த்து கிட்டத்தட்ட நான்காயிரம் ஆராதனைகளை நடத்திவைத்தார். பஞ்சத்தின் மிகுதியால் அவர் குடும்பத்திற்கு ஆகாரமும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் அவர் விசுவாசத்தில் உறுதியாய் தரித்திருந்து தேவனுக்கு விடாமல் நன்றி கூறி பிரபல ஆங்கில பாடலான "Now thank we all our God" இயற்றினார்.
தேவனுடைய பிள்ளைகள் எப்போதும் துதி செலுத்தி சோர்வான நேரத்திலோ, எதிராளி அவர்களை கொடுக்கும் போது, எப்போதும் நன்றி செலுத்த வேண்டும் என்று ஏசாயா கூறியதற்கு ரின்கார்ட் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தேவ நாமத்தை துதித்து அவர் நாமத்தை பிரஸ்தாபம் பண்ணினார்கள் (வச. 4).
நம்மை சுற்றி நன்மைகள் நடக்கும் போது, நமக்கு உண்ண உணவு இருக்கும் போது தேவனுக்கு நன்றி சொல்வது கடினம் அல்ல. ஆனால் நம் நெருங்கிய உறவு நம்மை விட்டு பிரிந்திருக்கும் போதும் நமக்கு உண்ண உணவு இல்லாமல் இருக்கும் போதும் தேவனுக்கு நன்றி செலுத்த முடியுமா?
நாமும் போதகர் ரின்கார்டுடன் சேர்ந்து நம் இருதயத்தை ஒன்றிணைத்து தேவனுக்கு துதிகள் செலுத்தி அவரை கீர்த்தனம் பண்ணுவோம். பூமியெங்கும் அவர் நாமம் அறியப்படக்கடவது (வச. 5).
தேவன் பேசும்போது
வேதாகமத்தை மொழிபெயர்பவர் லில்லி . ஒரு முறை தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு தனது தேசத்திற்கு திரும்பியபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தினார்கள். தனது கைபேசியில் உள்ள புதிய ஏற்பாட்டின் ஆடியோ பதிவை கண்டதால் அதையும் பறிமுதல் செய்து அடுத்த இரண்டு மணிநேரமாக கேள்விமேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த ஆடியோவை சோதனை செய்யும்படியாக அதை கேட்கத் தொடங்கினார்கள், அப்பொழுது பதிவில் மத்தேயு 7:1-2 வாசிக்க கேட்டார்கள் " நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்." இந்த வார்த்தைகளை தனது சொந்த மொழியில் கேட்டபோது அங்குள்ள அதிகாரிகளில் ஒருவருக்கு வியர்க்கத் தொடங்கியது. இறுதியில் லில்லி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அந்த அதிகாரி தன் மனதில் என்ன நினைத்தார் என்று நமக்கு தெரியாது. ஆனால் ஒன்றை நாம் அறிவோம், அவர் (தேவன்) வாயிலிருந்து புறப்படும் வசனம் அவர் விரும்பியதை நிச்சயமாக நிறைவேற்றுகிறது (ஏசா. 55:11). ஏசாயா இந்த நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை தேவ மக்களுக்கு அவர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கும்போது வாக்குத்தத்தமாக உரைத்தார். அவர்களுக்கு நம்பிக்கை தரும் படி அவர் வாயிலிருந்து புறப்படும் எந்த வார்த்தையும் முளைக்கச்செய்கிற உறைந்த மழையைப்போல் - அவர் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருக்கிறது.
தேவன் மேல் உள்ள நம்பிக்கையை மேம்படுத்தும்படி இந்த வசனங்களை வாசிக்கலாம். லில்லியுடைய சூழ்நிலையைப்போல் நாமும் கடந்து செய்வோமானால், கிரியை செய்கிற தேவன் நமக்கு உண்டென்று நிச்சயித்து அவர்மேல் நம்பிக்கை வைப்போம்.