“உன் கைகளை பின்பாக கட்டிக் கொள். அது உனக்கு சௌகரியமாக இருக்கும்” ஜேன் ஒரு குழுவிற்கு முன்பாக பேசுவதற்கு முன், அவ ளுடைய கணவன் எப்போதும் கொடுக்கும் அன்பான அறிவுரை இதுதான். எப்போதெல்லாம் அவள் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கவோ  அல்லது ஒரு சூழ்நிலையை கட்டுப்படுத்தவோ நினைக்கும் போதெல்லாம் அவள் இந்த தோரணையில் தான் இருப்பாள். ஏனெனில் அது அவளுடைய மனதை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க பக்குவப்படுத்திகிறது. தனக்கு முன்பாக இருப்பவர்களை நேசிக்கவும், தாழ்மையாக இருக்கவும், பரிசுத்த ஆவியானவருக்கு தன்னை ஒப்புவிக்கவும் இந்த தோரணையை பயன்படுத்தினாள்.

தாழ்மையை குறித்ததான ஜேனின் இந்த புரிந்து கொள்ளுதல், தேவனிடமிருந்தே  அனைத்தும் வருகிறது என்ற தாவீது ராஜாவின் அனுமானத்தில் வேரூன்றி உள்ளது. தாவீது தேவனை நோக்கி “தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்” (சங்கீதம் 16:2) என்கிறார். அவர் தேவனை நம்பவும், அவருடைய ஆலோசனையை நாடவும் கற்றுக்கொண்டார்: “இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்”. (வ.7) “அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (வ.8) என்பதை அறிந்திருந்தார். அவர் தன்னை தானே உயர்த்த வேண்டியிருந்ததில்லை ஏனெனில் அவர் தன்னை நேசிக்கும் வல்ல தேவனை நம்பினார்.

நாம் அனுதினமும் தேவனை நோக்கிப் பார்த்து விரக்தி அடையும் போதெல்லாம் அவருடைய உதவியை கேட்கும்போதும் அல்லது நாவு கட்டப்பட்டாற்போல  போல பேச வார்த்தைகளின்றி, வார்த்தைகளுக்காக கேட்கும்போதும் அவர் நம்முடைய வாழ்வில் கிரியை செய்வதை நம்மால் பார்க்க முடியும். ஜேன் சொல்வது போல நாமும் “தேவனோடு கூட கூட்டாளி” ஆகலாம். பின்னர் நாம் சிறப்பாக செய்து முடித்ததை, நாம் உணர்ந்து கொள்வோம் ஏனெனில் தேவனே நாம் செழிக்க உதவியுள்ளார்.

நம் கைகளை நமக்கு பின்பாக தாழ்மையின் தோரணையாக கட்டிக்கொண்டு, சகலமும் தேவனிடமிருந்து நமக்கு வருகிறது என்பதை நினைவுகூர்ந்தவர்களாக, மற்றவர்களை நாமும் அன்போடு பார்க்க முடியும்.