மிச்செல்லன் பிலிப்பைன்ஸில் வளர்ந்தபோது பல சவால்களைச் அவள் சந்திக்க நேர்ந்தது. அவர் எப்போதும் வேத வார்த்தைகளை நேசித்து ஆறுதல் அடைந்துகொள்வது வழக்கம். அவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் போது ஒரு நாள் யோவான் சுவிசேஷத்தின் முதலாம் அதிகாரத்தைப் படிக்கையில் அவளுடைய “கடின இருதயம் கலங்கியது.” அவருடைய உள்ளுணர்வு, “ஆம்! நீ வார்த்தைகளை நேசிக்கிறாய், அதை அறிவாயா? நித்திய வார்த்தை என்று ஒன்று உண்டு. அவர் ஒருவரால் மட்டுமே எப்பொழுதும் இருளை அழிக்க முடியும். அந்த வார்த்தை மாம்சமாகியது. அந்த வார்த்தையினால் உன்னை நேசிக்க முடியும்” என்று அவளிடம் கூறியது. 

அவள் வாசித்த யோவான் சுவிசேஷத்தின் துவக்க வரிகளை வாசிப்பவர்களுக்கு, ஆதியாகமத்தின் துவக்க வார்த்தைகள் நினைவுக்கு வரும்: “ஆதியிலே…” (ஆதியாகமம் 1:1). யோவான் தன் சுவிசேஷத்தில், இயேசு தேவனோடு ஆதியிலே இருந்தார் என்பதை மட்டுமல்ல; இயேசுவே தேவன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் (யோவான் 1:1). அந்த ஜீவனுள்ள வார்த்தை மாம்சமாகி, “நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (வச. 14). மேலும், அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்று கொண்டவர்கள் அவரின் பிள்ளைகளானார்கள் (வச. 12). 

மிச்செல்லன் அன்றே தேவனுடைய அன்பைத் தழுவி “தேவனாலே மறுபடியும் பிறந்தார்” (வச. 13). அவளுடைய குடும்பத்தின் தொடர் போதைப் பழக்கத்திலிருந்து தேவனே அவளை மீட்டெடுத்தார். தற்போது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை பகிர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவளாய் கிறிஸ்துவின் சுவிசேஷ வார்த்தைகளை அதிகமாய் எழுதுகிறார். 

நாம் கிறிஸ்துவின் விசுவாசிகளாயிருந்தால் நாமும் தேவனுடைய நற்செய்தியையும் அவருடைய அன்பையும் பகிரலாமே. இந்த 2022 ஆம் ஆண்டு துவக்கத்தில், எப்படிப்பட்ட கிருபை நிறைந்த வார்த்தைகளை நாம் பேசப்போகிறோம்?