எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

அலிசன் கீடாகட்டுரைகள்

தோட்டத்தில்

என் அப்பா பழைய பாமாலைகளைப் பாடுவதை விரும்பினார். அவருக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஒன்று "இன் த கார்டன் (தோட்டத்தில்)". சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது அடக்கத்தில் நாங்கள் அதைப் பாடினோம். அனுபல்லவி எளிதானது: "அவர் என்னுடன் நடக்கிறார், அவர் என்னுடன் பேசுகிறார், நான் அவருடையவன் என்று அவர் என்னிடம் கூறுகிறார், நாங்கள் அங்கே தங்கியிருக்கும்போது நாங்கள் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி வேறு யாரும் அறிந்திருக்கவில்லை."அந்த பாடல் என் அப்பாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது – அது எனக்கு கொடுத்தது போலவே.

யோவானின் நற்செய்தியின் 20 ஆம் அதிகாரத்தைப் படித்த பிறகு 1912-ன் வசந்த காலத்தில் இந்த பாமாலையை எழுதியதாக ஸ்தோத்திரப் பாடல் எழுத்தாளர் சி. ஆஸ்டின் மைல்ஸ் கூறுகிறார்.“அன்று நான் அதைப் படிக்கும்போது, நானும் அந்த காட்சியின் ஒரு பகுதியாகத் தெரிந்தேன். மரியாளின் வாழ்க்கையில் அந்த வியத்தகு தருணத்திற்கு அவள் தனது இறைவனுக்கு முன்பாக மண்டியிட்டு, ‘ரபூனி  [போதகர்]’ என்று அழுத அந்த காட்சியின் மெளன சாட்சியாக மாறினேன்.

யோவான் 20-ல், மகதலேனா மரியாள் இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு அருகில் அழுதுகொண்டிருப்பதைக் காண்கிறோம். அவள் ஏன் அழுகிறாள் என்று கேட்ட ஒரு மனிதனை அங்கே சந்தித்தாள். அது தோட்டக்காரர் என்று நினைத்து, உயிர்த்தெழுந்த மீட்பருடன் பேசினார் - இயேசுவே! அவளுடைய துக்கம் மகிழ்ச்சியாக மாறியது, சீடர்களிடம், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று சொல்ல ஓடினாள். (வச. 18).

இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற உறுதி நமக்கும் இருக்கிறது! அவர் இப்போது பிதாவுடன் பரலோகத்தில் இருக்கிறார், ஆனால் அவர் நம்மை தனியாக விட்டுவிடவில்லை. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு அவருடைய ஆவியானவர் அவர்களுக்குள் இருக்கிறார், அவர் மூலமாக அவர் நம்முடன் இருப்பதையும் நாம் “அவருடையவர்கள்” என்பதை அறிந்து கொள்வதிலும் நமக்கு உறுதியும் மகிழ்ச்சியும் இருக்கிறது,

என்னை கவனி!

என் தேவதை நடனத்தை பாருங்கள் பாட்டி! என்று என் மூன்று வயது பேத்தி மகிழ்ச்சியுடன் அழைத்தாள். முகத்தில் ஒரு பெரிய சிரிப்புடன் எங்கள் அறையின் முற்றத்தை சுற்றி அவள் ஓடினாள். அவளுடைய “நடனம்” புன்னகையைக் கொண்டு வந்தது; மற்றும் “அவள் நடனமாடவில்லை, ஓடுகிறாள்” என்ற அவளுடைய பெரிய சகோதரனுடைய கடினமான வார்த்தைகள், குடும்பத்துடன் விடுமுறையில் இருப்பதில் அவள் கொண்டிருந்த மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை.

முதல் குருத்தோலை ஞாயிறு என்பது உயர்வு மற்றும் தாழ்வின் நாள். இயேசு கழுதை மீதேறி எருசலேமுக்குச் சென்றபோது ​​திரளான ஜனங்கள்: “கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” (மத்தேயு 21: 9) என்று உற்சாகமாக ஆர்ப்பரித்தார்கள். ஆயினும் கூட்டத்தில் இருந்த பலரும் மேசியா அவர்களை ரோமர்களிடமிருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அதே வாரத்தில் அவர்கள் செய்த பாவங்களுக்காக மரிக்கவிருக்கும் இரட்சகரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அந்த நாளின் பிற்பகுதியில் இயேசுவின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தி பிரதான ஆசாரியர்கள் கோபத்திலிருந்தபோதிலும் அத்தேவாலயத்திலிருந்த குழந்தைகள் “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என ஆர்ப்பரித்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் (வச.15). ஒருவேளை முற்றத்தை சுற்றி ஓடும்போது குதித்து பனை ஓலைகளை அசைக்கலாம். அவர்களால் அவரை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை, இயேசு கோபமாக இருந்த தலைவர்களிடம், “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் (உம்முடைய) துதி உண்டாகும்படி செய்தீர்” (வச. 16) என்றார். அவர்கள் இரட்சகருடைய பிரசன்னத்தில் இருந்தார்கள்.

அவர் யார் என்பதற்காக அவரைக் காணவும் இயேசு நம்மை அழைக்கிறார். சந்தோஷத்தில் நிரம்பி வழியும் குழந்தையைப்போல நாமும் செயல்படும்போது நிச்சயமாக அவர் பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்போம்.

ஒரு நெருக்கடி நிலை குறிகையை அனுப்புகிறது

அலாஸ்காவின் ஒரு மலைப்பிரதேசத்தில் குடியேறியவரின் குடிசையில் தீப்பிடித்தபோது, ​​அமெரிக்காவின் குளிரான மாநிலத்தில் சில வசதிகளே இருந்தன. ஒரு விறைப்பான குளிர் காலத்தின் நடுவில், குடியேறியவருக்கு போதுமான தங்குமிடம் இல்லாமல் இருந்தது.. மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒரு விமானம் பறந்து, பனியில் அவரால் முத்திரை குத்தப்பட்ட மற்றும் புகைக்கறியால் கருமையாக்க பட்ட பெரிய நெருக்கடி நிலை குறிகையை அவர்கள் உளவு பார்த்தபோது, ​​அந்த நபர் இறுதியாக மீட்கப்பட்டார்.

 சங்கீதக்காரர் தாவீது நிச்சயமாக மிகுந்த நெருக்கடியில் இருந்தார். பொறாமை கொண்ட சவுல் அவரைக் கொல்ல முயன்றார். எனவே அவர் காத் நகரத்திற்கு ஓடினார், அங்கு அவர் தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக பைத்தியக்காரனாக நடித்தார் (1 சாமு. 21ஐப் பார்க்கவும்). அந்த நிகழ்வுகளில் 34 சங்கீதம் வெளிவந்தது, அங்கு தாவீது தேவனிடம் ஜெபத்தில் கூப்பிட்டு சமாதானத்தைக் கண்டார் (வச. 4, 6). கர்த்தர் அவருடைய வேண்டுகோளைக் கேட்டு அவரை விடுவித்தார்.

நீங்கள் ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருக்கிறீர்களா, உதவிக்காக அழுகிறீர்களா? இன்றும் நம்முடைய அவநம்பிக்கையான ஜெபங்களுக்கு தேவன் செவிசாய்த்து பதிலளிப்பார் என்பதில் உறுதியாக இருங்கள். தாவீதுக்கு செய்தது போலவே, அவர் நம்முடைய துயர அழைப்புகளை கவனித்து, நம்முடைய அச்சங்களை நீக்குகிறார் (வச. 4) - மேலும் சில சமயங்களில் “இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிப்பார். (வச. 6). “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” (சங். 55:22) என்று வேதாகமம் நம்மை அழைக்கிறது. நம்முடைய கடினமான சூழ்நிலைகளை நாம் தேவனிடம் ஒப்படைக்கும்போது, ​​அவர் நமக்குத் தேவையான உதவியை வழங்குவார் என்று நம்பலாம். அவருடைய திறமையான கைகளில் நாம் பாதுகாப்பாக இருப்போம்.

பழைய வழக்கத்தை முறித்துவிடு

டேவிடுக்கு முதல் முறையாக தன் தகப்பனிடம்மிருந்து தனது பதினாலாவது பிறந்த நாள் அன்று அடி கிடைத்தது. தெரியாமல் வீட்டு கண்ணாடியை அவன் உடைத்ததினால் “என்னை மிதித்து உன்னை குற்றினார்” என்று சொன்னான் டேவிட். ஆனால், அதர்க்கு பிறகு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றான். அவர் குடித்துவிட்டு எப்போதும் பிரச்சனை பண்ணிகொண்டிருப்பார். இதற்கு ஒரு முடிவு உண்டாகும்படி நான் பிரயாசப்படுகிறேன் என்று வருத்ததுடன் கூறினான்.
இதற்கு முடிவு வரவேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த டேவிடுக்கு இந்த நிலமைக்கு வருவதர்க்கு அதிக வருடங்கள் எடுத்தது. தன் வாலிபத்தின் அதிக நாட்கள் அவன் சிறைச்சாலைகளிளும் போதை சிகிச்சை மையங்களிலும் தான் கிளத்தான். தன் கனவுகளை அனைத்தும் உடைந்து போன நிலமையில் இருக்கும்போது அவன் செல்லும் சிகிச்சை நிலையில் மூலம் இயேசு கிறிஸ்துவைபற்றி அற்நதான். அது முதல் அவன் நம்பிக்கை படி படியாக வளர தொடங்கியது. இப்போதோ டேவிட் சொல்வது என்னவென்றால் “கசப்பு நிறைந்த என் வாழ்வு இப்போது அதர்க்கு எதிர்மாறாக மாரிவிட்டது. அனுதினமும் காலையில் என வாழ்கையை அவருக்கு அர்பனிக்கிறேன்.
மற்றவர்களோ அல்லது நாம் நமக்கு செய்த தவறுகளால், உடைக்கப்பட்ட இருதயத்தோடு நாம் தேவனிடம் வருவோமானால், தேவன் அதை எடுத்து புதிதாக மாற்றுகிறார் (2 கொரி. 5:11). தேவ அன்பும் புது வாழ்வும் நம் பழைய வாழ்க்கையை முறித்துவிட்டு ஒரு புது வாழ்வையும் எதிர்காலத்தையும் நமக்கு தருகிறது. அதை தொடர்ந்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்பிக்கையும் பெலனும் அவரிடம் இருந்து பெறும்படி நம்மோடு இருக்கிறார்.

நல்ல புத்தகத்துடன் நெருங்கு

ஐஸ்லாந்து என்று சிறிய நாடு வாசிப்பவர்களின் நாடு. உண்மையில் இந்த நாட்டில், ஒரு நபருக்கு, ஒவ்வொரு வருடமும், மற்றெந்த நாடுகளையும் விட அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டு வாசிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் ஈவ் அன்று ஐஸ்லாந்து மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் புத்தகங்களைக் கொடுப்பதும் பிறகு இரவு முழுவதும் நீண்ட நேரம் வாசிப்பதும் ஒரு பாரம்பரியம். இந்தப் பாரம்பரியம் இரண்டாம் உலகப் போருக்கு முந்தையது, இறக்குமதிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் காகிதம் மலிவாயிருந்தது. இலையுதிர் பிந்தய காலத்தில் ஐஸ்லாந்து வெளியீட்டாளர்கள் புதிய தலைப்புகளுடன் சந்தையை புத்தகங்களினால் நிரப்பினர். இப்போது நாட்டினி புதிய வெளியீடுகளின் பட்டியல் நவம்பர் நடுப்பகுதியில் ஒவ்வொரு ஐஸ்லாந்திய வீட்டிற்கும் அனுப்பப்படுகிறது. இந்தப் பாரம்பரியம் கிறிஸ்மஸ் புத்தக வெள்ளம் என்று அழைக்கப்படுகிறது.

ஓரு நல்ல கதையை உருவாக்கும் திறனையும் அதனை கற்பிக்கவும், அவர்களுடைய வார்த்தைகளின் மூலம் மற்றவர்களை ஊக்குவிக்கவும் தேவன் அனேகரை ஆசீர்வாதமாக வைத்திருப்பகற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க முடியும். ஒரு நல்ல புத்தகம் போல் எதுவும் இல்லை! எல்லாவற்றிலும் அதிகம் விற்பனையாகும் புத்தகம், பைபிள், பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட, கவிதை மற்றும் உரைநடை, சில மாபெரும் கதைகள்-சில அவ்வாறு இல்லை, ஆனால் அவையனைத்தும் ஊக்கமளித்தன. அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டியது போல 'வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துக்கொள்ளுகலுக்கும், சீர்த்திருத்தலுக்கும், நீதியை படிப்பிக்கிறதற்கும், பிரயோஜனமுள்ளவைகளாய் இருக்கிறது" (2 தீமோ. 3:16-17). வேத வாசிப்பு நம்மைக் கண்டித்து உணர்த்துகிறது, ஊக்குவிக்கிறது, அவருக்காக வாழ உதவி செய்கிறது மற்றும் சத்தியத்திற்குள்ளாக நம்மை வழிநடத்துகிறது (2:15).

நம்முடைய வாசிப்பில், எல்லாவற்றிலும் மகத்தான புத்தகமான பைபிளை வாசிக்க நேரத்தை கடைப்பிடிக்க மறந்துவிடக்கூடாது.

சுவாசமும் அதின் சுருக்கமும்

மரண படுக்கையில் படுத்திருக்கும் எனது தந்தையின் சுவாச காற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. இறுதியில் ஒரு நாள் அது நின்று போவதை நானும் என் சகோதரியும் அம்மாவும் அழுகையுடன் பார்த்தோம். அவருடைய மரணம் எங்கள் வாழ்க்கையை வெறுமையாக்கினது. எங்களோடு கூட எப்போதும் இருந்த அவர் இப்போது அவருடைய நினைவுகளை மட்டுமே வைத்து சென்றுவிட்டார். இருப்பினும் அவரோடு மறுபடியும் ஒன்றிணைக்க படுவோம் என்கிற விசுவாசம் எங்களுக்கு இருக்கிறது.

அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனென்றால் அவர் தேவனை அறிந்தவரும் தேவன் மேல் அன்புவைத்தவராகவும் இருந்தார். என் தந்தையின் முதல் சுவாசத்தை தேவன் அவர் நாசியிலே ஊதினார். அவர் முதல் சுவாசத்திலிருந்து அதை தொடர்ந்து எல்லா சுவாசத்திலும் தேவனுடைய நெருக்கமான ஈடுபாடு அவரோடு இருந்தது. அதைப்போல் தான் அவர் நம் வாழ்விலும் எல்லா சுவாசத்திலும் ஈடுபட்டு வருகிறார். தேவனே நாம் கருவிலிருக்கும் போது பிரமிக்கத்தக்க அதிசயமாய் நம்மை உருவாக்கினார் (வச. 14). அதுமுதல் இருந்து என் தந்தை போல் நம் இறுதி சுவாசம் வரையில் தேவனே நம்மோடு இருந்து நம்மை அன்போடும் அரவணைப்போடும் மறுபடி அவரோடு சேர்த்துக் கொள்வார்.

எல்லா தேவ பிள்ளைகளுக்கும்  இது உண்மையாக இருக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள். ஆகையால் சுவாசமுள்ள யாவும் தேவனை துதிப்பதாக என்கிற வசனத்தின்படி, நமக்கு மீதமுள்ள ஒவ்வொரு நாளும் அவரை துதிப்போம்.

அனைவருக்கும் ஒரு வழிகாட்டி தேவை

என்னுடைய புது மேற்பார்வையாளருடைய அறைக்குள் நான் நுழையும் போது சற்றே பயந்து தயக்கம் கொண்டேன். ஏனென்றால் பழைய மேற்பார்வையாளர் கடினமான குணம் உள்ளவர். அடிக்கடி அவருக்கு கீழ் வேலை செய்கிறவர்களை அழ வைத்தார். புதிதாக வந்தவர் எப்பேற்பட்டவரோ என்று யோசித்துக்கொண்டே அந்த அறையில் நுழைந்தேன். அவர் என்னை முகம் மலர்ந்து வரவேற்றபோது என்னுடைய பயங்கள் நீங்கியன; என்னுடைய அனுபவங்களை அவர் விசாரித்து கனிவாக பேசினார். அவர் உண்மையிலேயே கரிசனை கொண்டவர் என்று நான் அறிந்துகொண்டேன். இயேசுவின் மேல் விசுவாசம் கொண்ட  அவர் எனக்கு நண்பரும், ஊக்குவிப்பவரும், குருவுமாக ஆனார்.

அப்போஸ்தலர் பவுல் இவ்விதமாக “பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு” (தீத்து 1:1) ஆவிக்குரிய குரு. அவனுக்கு எழுதின நிருபத்தில் அவன் சபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி “நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. (தீத்து 2:1),  “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக”. (வ 7-8)  என்கிறார். அதனால் தீத்து அவருடைய “சகோதரனும்,கூட்டாளியும், உடன்வேலையாளுமாக (2 கொரி. 2:13; 8:23) கருதப்பட்டான்.

நம்மில் அநேகர்  - ஒரு ஆசிரியர், பயிற்சியாளர், தாத்தா, இளைஞர் தலைவர் அல்லது போதகர் - இவர்கள் மூலமாக அறிவு, ஞானம் ஊக்கம், தேவன் மேல் விசுவாசம் இவைகளில் வளர்ந்திருக்கிறோம்.  இயேசுவுடன் பயணிக்கும்போது நீங்கள்  கற்றுக்கொண்ட ஆவிக்குரிய படங்களால் யார் பயன் பெறலாம்.

ஏமாற்றப்பட வேண்டாம்

வெட்டுக்கிளி, புள்ளிகளுள்ள வெளிப்புற இறக்கைகளுடனும், பறக்கும் போது ஒளிரும் தன்மையுள்ள மஞ்சள் நிறத்தில் மைப்பூச்சுப்போல படிந்திருக்கும் இறக்கைகளையுமுடைய ஒரு அழகிய பூச்சி. ஆனால் அதனுடைய அழகு சிறிது ஏமாற்றக்கூடியதாயிருக்கிறது. இந்தப் பூச்சி பயிர்களை ஆக்கிரமித்து, சுற்றுசூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய திறன் கொண்டது. வெட்டுக்கிளி, கோதுமை, மக்காச்சோளம், மற்றும் பிற தாவரங்கள் அடங்கிய பச்சை நிறமான பகுதிகளை தின்றுவிடும். அவைகள் இந்தத் தாவரங்களிலுள்ள சாறுகளை உறிஞ்சி அவைகளை பயனற்றவைகளாக்கி விடும்.

ஆதாம் மற்றும் ஏவாளின் கதையில், நாம் ஒரு வித்தியாசமான அச்சுறுத்தலைப்பற்றி காண்கிறோம். சர்ப்பமாகிய சாத்தான், இந்த தம்பதியர், தேவனுக்கு கீழ்படியாமலும், அவர்கள் தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டால் தேவர்களைப்போல இருப்பார்கள் என்றும் சொல்லி, ஏமாற்றினான் (ஆதீ. 3:1-7). ஆனால் ஏன் ஒரு சர்ப்பத்திற்கு செவிகொடுக்க வேண்டும்?. அவனுடைய வார்த்தைகள் ஏவாளைக் கவர்ந்ததா அல்லது அவனில் வேறு எதுவும் கவர்ச்சிகரமாக இருந்ததா?. சாத்தான் மிகவும் அழகுள்ளவனாக சிருஷ்டிக்கப்பட்டான்  என்று வேதம் சொல்லுகிறது. (எசே. 28:12). ஆயினும் சாத்தான் தான் ஏவாளைக் கவர்ந்திழுக்க பயன்படுத்திய அதே சோதனையினால் தானும் விழுந்தான். : “நான் உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” (ஏசா. 14:14, எசே. 28:9).

இப்பொழுது சாத்தானுக்கு இருக்கும் எந்த அழுகும் ஏமாற்றத்தான் பயன்படுகிறது (ஆதி. 3:1, யோவா. 8:44, 2 கொரிந்தியர் 11:14). அவன் விழுந்ததைப்போல, மற்றவர்களையும் வளரவிடாதப்படி கீழே இழுக்க பார்க்கிறான். ஆனால் அவனைக்காட்டிலும் வல்லமையுள்ளவர் நம் அருகில் இருக்கிறார். நம் அழகான மீட்பர் இயேசுவிடம் நாம் ஓடலாம்.

வறண்ட பகுதியில் பிரகாசிக்கும் புள்ளிகள்

கர்நாடகா மாநிலத்தில், பாறை நிறைந்த ஒரு சிறிய பகுதியை நானும் என்னுடைய கணவனும் பார்வையிட்ட போது, ஒரு வறண்ட பாறையில் மலர்ந்திருந்த சூரிய காந்தி மலரைப் பார்த்தேன். அவ்விடத்தில் முட்களைக் கொண்ட கள்ளிச் செடிகளும், களைகளுமே வளர்கின்றன. இந்த சூரியகாந்தி செடி வீடுகளில் வளரும் மற்றவற்றைப் போல உயரமாக வளர்ந்திருக்கவில்லை. ஆனால் அந்த மலரின் பிரகாசம் என்னை மகிழ்ச்சியாக்கியது.

ஒரு வறண்ட நிலப் பரப்பில் காணப்பட்ட எதிர் பாராதபிரகாசம், இயேசுவின் விசுவாசிகளின் வாழ்வும் வெறுமையாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் இருப்பதை நினைவுபடுத்தியது. பிரச்சனைகள் மேற்கொள்ள முடியாதவைகளாக காணப்படலாம். சங்கீதக்காரனின் கதறலைப் போன்று, நம்முடைய ஜெபங்களும் செவிகொடுக்கப் படாதவைகளாக காணப்படலாம். “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்” (சங். 86:1) என்கின்றார். அவரைப் போல நாமும் மகிழ்ச்சிக்காக ஏங்கிக் கொண்டிருக்கலாம் (வ.4).

நாம் ஆராதிக்கும் தேவன் உண்மையுள்ளவர் என்று தாவீது வெளிப்படுத்துகின்றார், “ஆண்டவரே  நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும்…………கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்” (வ.5) என்கின்றார். நீர் பதிலளிக்கின்ற தேவன் (வ.7).

சில வேளைகளில், வறண்ட பகுதியில், தேவன் ஒரு சூரியகாந்தி மலரை அனுப்புகின்றார். ஊக்கம் தரும் வார்த்தையை நண்பன் மூலம் அனுப்புகின்றார், அல்லது ஆறுதலான வேத வார்த்தையைத் தருகின்றார், நம்பிக்கையுடைய சிறிய நடைகளோடு, நாம் முன்னோக்கிச் செல்ல அழகிய சூரிய உதயத்தைத் தருகின்றார். நம்முடைய கஷ்டங்களிலிருந்து தேவன் நம்மை விடுவிப்பதை நாம் அநுபவிக்க காத்திருக்கும் போது, நாமும் சங்கீதக் காரனோடு     சேர்ந்து, “தேவரீர் மகத்துவமுள்ளவரும், அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்” (வ.10) என்று தெரிவிப்போம்.