டேவிட்டுக்கு முதல் முறையாக தன் தகப்பனிடமிருந்து தனது பதினாலாவது பிறந்த நாள் அன்று அடி கிடைத்தது. தெரியாமல் வீட்டு கண்ணாடியை அவன் உடைத்ததினால் “என்னை மிதித்து உன்னை குற்றினார்” என்று சொன்னான் டேவிட். ஆனால், அதற்க்கு பிறகு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றான். அவர் குடித்துவிட்டு எப்போதும் பிரச்சனை பண்ணிகொண்டிருப்பார். இதற்கு ஒரு முடிவு உண்டாகும்படி நான் பிரயாசப்படுகிறேன் என்று வருத்ததுடன் கூறினான்.
இதற்கு முடிவு வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்து கொண்டிருந்த டேவிட்டுக்கு இந்த நிலமைக்கு வருவதற்க்கு அதிக வருடங்கள் எடுத்தது. தன் வாலிபத்தின் அதிக நாட்கள் அவன் சிறைச்சாலைகளிலும் போதைச் சிகிச்சை மையங்களிலும் தான் கழித்தான். தன் கனவுகள் அனைத்தும் உடைந்து போன நிலைமையில் இருக்கும்போது அவன் செல்லும் சிகிச்சை நிலையில் மூலம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்தான். அது முதல் அவன் நம்பிக்கை, படி படியாக வளர தொடங்கியது. இப்போதோ டேவிட் சொல்வது என்னவென்றால் “கசப்பு நிறைந்த என் வாழ்வு இப்போது அதற்க்கு எதிர்மாறாக மாறிவிட்டது. அனுதினமும் காலையில் என் வாழ்கையை அவருக்கு அர்பணிக்கிறேன்.
மற்றவர்களோ அல்லது நாம் நமக்கு செய்த தவறுகளால், உடைக்கப்பட்ட இருதயத்தோடு நாம் தேவனிடம் வருவோமானால், தேவன் அதை எடுத்து புதிதாக மாற்றுகிறார் (2 கொரி. 5:11). தேவ அன்பும், புது வாழ்வும் நம் பழைய வாழ்க்கையை முறித்துவிட்டு ஒரு புது வாழ்வையும் எதிர்காலத்தையும் நமக்குத் தருகிறது. அதை தொடர்ந்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்பிக்கையும் பெலனும் அவரிடம் இருந்து பெறும்படி நம்மோடு இருக்கிறார்.