ஒரு வாடகை பகிர்வு சவாரி வாடிக்கையாளர், ஒரு ஓட்டுநர் உலகின் மிக நாற்றமான பழத்தைச் சாப்பிடுவதையும், மற்றொரு ஓட்டுநர் காதலியுடன் சண்டையிடுவதையும், மற்றொருவர் அவரை ஒரு மோசடி திட்டத்தில் முதலீடு செய்யும்படி முயன்றதையும் சகித்துக்கொண்டதாகப் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மோசமான மதிப்பீட்டிற்குப் பதிலாக, அவர் ஓட்டுநர்களுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைக் கொடுத்தார். அவர், “அவர்கள் அனைவரும் நல்ல மனிதர்களாகத் தோன்றினர். எனது மோசமான மதிப்பீட்டின் காரணமாக அவர்கள் அந்த பயன்பாட்டுச் செயலியிலிருந்து வெளியேற்றப்படுவதை நான் விரும்பவில்லை” என்றும் விளக்கமளித்தார். அவர் போலியாக விமர்சித்திருந்தார். ஓட்டுநர்களிடம் இருந்தும், பிறரிடமிருந்தும் உண்மையை மறைத்தார்.
வெவ்வேறு காரணங்களுக்காக, நாம் பிறரிடமிருந்து உண்மையை மறைக்கலாம். ஆனால் எபேசுவின் விசுவாசிகள் கிறிஸ்துவில் புதிய சிருஷ்டிகளாக, ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசும்படி அப்போஸ்தலன் பவுல் ஊக்கப்படுத்தினார். இதற்கு “நீதி மற்றும் பரிசுத்தம்” (எபேசியர் 4:24) எனும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது அதாவது அவருக்காக பிரித்தெடுக்கப்பட்டதும் ,அவருடைய வழிகளைப் பிரதிபலிப்பதுமான ஒரு வாழ்க்கை. அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசுவதின் மூலம் பொய்யை மாற்றியமைக்க வேண்டும். ஏனெனில் பொய்கள் பிரித்துச் சீர்குலைக்கும், உண்மையோ நம்மை விசுவாசிகளாக இணைத்திடும். அவர், “அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்” (வ.25) என்று எழுதினார்.
மற்ற விசுவாசிகளுடனான நமது ஐக்கியத்தைச் சீர்குலைக்கக்கூடிய பொய்களையும், ஒருவருக்கொருவர் “போலி மதிப்பீடுகளை” வழங்குவதையும் எதிர்த்து நிற்கும் தைரியத்தை இயேசு நமக்கு அளிக்கிறார். அவர் நம்மை வழிநடத்துவதற்கேற்ப அன்பான ஒரு வாழ்க்கை வாழ்வது, “தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து” (வ.32) உண்மையின் வெளிப்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும்.
மற்ற விசுவாசிகளிடமிருந்து உண்மையை மறைக்க நீங்கள் எப்போது தூண்டப்படுகிறீர்கள்? நேர்மையான மற்றும் உண்மையானவற்றைப் பகிர்ந்துகொள்வது ஏன் இன்றியமையாதது?
அன்பு தேவனே, உம் மீதும் பிறர் மீதும் உள்ள அன்பினால் எனது உறவுகளில் உண்மையாக இருக்க எனக்கு உதவும்.