1863 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில் தெற்குப் படைகளின் பேரழிவுகரமான இழப்பைத் தொடர்ந்து, தோற்கடிக்கப்பட்ட தளபதி ராபர்ட் ஈ. லீ தனது தாக்கப்பட்ட துருப்புக்களை அவர்களின் சொந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தளபதி ஜார்ஜ் மீட் தலைமையிலான தனது படைகளைத் தாக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அவரது ஆட்கள் சோர்வாக இருப்பதைக் கண்டு, மாறாக மீட் தனது படைகளுக்கு ஓய்வளித்தார்.

அவரது வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என்று கோபமடைந்த லிங்கன், தனது இறகு மைக்கோலை எடுத்து, தனது நியாயமான கோபத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து, ஒரு குறிப்பை எழுதினார். மாற்றாக, அதின் உறையின் மேலும் அவர்: “தளபதி மீட் அவர்களுக்கு, ஒருபோதும் அனுப்பப்படவும் இல்லை அல்லது கையொப்பம் இடப்படவுமில்லை” என்றெழுதினார்,  உண்மையாகவே, அது ஒருபோதும் பெறப்படவில்லை.

லிங்கனுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மற்றொரு சிறந்த தலைவர் நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டார். எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், கோபம் என்பது ஆபத்தான ஆற்றல் வாய்ந்தது. சாலொமோன் ராஜா, “தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்” (நீதிமொழிகள் 29:20) என்றார். சாலொமோன் “நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்” (வ.4) என்பதை அறிந்திருந்தார். “மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்” (வ.11) என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.

இறுதியில், அந்த கடிதத்தை அனுப்பாதது, லிங்கனை அவரது உயர்மட்ட தளபதியை மனச்சோர்வடைய செய்வதிலிருந்து தடுத்தது, தேவையான போரை வெல்ல உதவியது மற்றும் ஒரு தேசத்தின் குணமாகுதலுக்கும் பங்களித்தது. அவருடைய கனமான கட்டுப்பாடு போன்ற உதாரணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்வது நமக்கும் நல்லது.