ரஷ்யாவுடனான மூன்று மாத குளிர்காலப் போரில் (1939-1940) பின்லாந்தைச் சேர்ந்த ஒரு வீரர் போர்க்களத்தில் காயமடைந்து கிடந்தார். ஒரு ரஷ்ய வீரர் தனது துப்பாக்கியை அவருக்கு நேரே நீட்டியபடியே அவர் அருகே சென்றார். காயமடைந்தவர், தான் மரிக்கப்போவதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், ரஷ்யர் ஒரு மருத்துவப் பொருட்கள் கொண்ட பெட்டியை அவரிடம் கொடுத்தார், அது அவரது உயிரைக் காப்பாற்றியது. ஆச்சரியப்படும்படி, முன்னர் காயமடைந்த இந்த வீரர் பின்னர் இதேபோன்ற சூழ்நிலையில் தன்னைக் கண்டார், கதாபாத்திரங்கள் மட்டுமே தலைகீழாக மாறி இருந்தது; ஒரு ரஷ்ய வீரர் காயமடைந்து உதவியற்ற நிலையில் போர்க்களத்தில் கிடக்க. இப்போது காயமடைந்த எதிரிக்கு உதவ இவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்தது.

இயேசுவானவர் நம் வாழ்க்கைக்கு மையமானதும் வழிகாட்டுவதுமான ஒரு  நியமத்தைக் கொடுத்தார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” (மத்தேயு 7:12). விசுவாசிகள் இந்த ஒரு எளிய கொள்கையைக் கடைப்பிடித்தால், நம் உலகம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ? நாம் அனைவரும் இயேசுவின் ஞான ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்தால் எவ்வளவு அடக்குமுறை முடிவுக்கு வரும் என்று கணிக்க முடிகிறதா? அவர் நம்மை வழிநடத்தினால் மாத்திரமே, நாம் பெறுவோம் என்று நம்புகிற அதே இரக்கத்தையும் கருணையையும்  நாம் பிறருக்கும் கொடுப்போம். நாம் பிறருக்கு “நல்ல ஈவுகளை” கொடுக்கும்போது, ​​தாம் நேசிக்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுக்கும் பரலோகத்திலிருக்கிற நமது பிதாவின் (வ.11) இருதயத்தையே பிரதிபலிக்கிறோம்.

பிறரை வெறும் சத்துருக்களாகவோ அல்லது அந்நியர்களாகவோ அல்லது உடைமைகளுக்காகவும் வாய்ப்புகளுக்காக நாம் போட்டியிடும் நபர்களாகவோ பார்க்காமல் இருப்பது அவசியம். மாறாக, நம்மைப்போன்றே அவர்களுக்கும் வேண்டிய கருணை மற்றும் இரக்கத்தின் தேவையை நாம் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, ​​நமது அணுகுமுறையும் கண்ணோட்டமும் மாறும். பின்னர், தேவன் வழங்குவதற்கேற்ப  அவர் நமக்கு இலவசமாக அருளிய அன்பை நாம் அவர்களுக்கும் இலவசமாக அருள முடியும்.