Archives: ஜூன் 2024

ஒருவரிடமிருந்தோருவர் கற்றல்

ஜூம் செயலி பிரேத்யேகமான தகவல்தொடர்பு கருவியாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்கக் காணொளி அழைப்பில் தன்னுடன் இணையுமாறு ஒரு தோழி என்னிடம் கேட்டாள். செய்வதறியாமல் நான் குழப்பமடைந்துள்ளேன் என்று மின்னஞ்சல்கள் வாயிலாக உணர்ந்துகொண்டாள். எனவே காணொளி அழைப்பை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டறிய எனக்கு உதவ ஒரு வாலிபரை அணுகும்படி அவள் பரிந்துரைத்தாள்.

அவளது ஆலோசனை, தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ரூத் மற்றும் நகோமியின் கதையில் தெளிவாகும் ஒன்று. ரூத் ஒரு விசுவாசமான மருமகளென்று அடிக்கடி புகழப்படுகிறாள்.நகோமியுடன் பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்ல தன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள் (ரூத் 1:16-17). அவர்கள் நகரை அடைந்தபோது நகோமியின் இளைய மருமகள், "நான் வயல்வெளிக்குப் போய்.. (நமக்காக) கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்" (2:2) என்றாள். இவள் முதியவளுக்கு உதவினாள், அவள் இளையவளுக்கு போவாஸை திருமணம் செய்ய உதவினாள். நவோமி ரூத்துக்கு கொடுத்த ஆலோசனை, போவாஸை இறந்துபோன திருமண உறவுகளின் ஆஸ்தியை வாங்குவதற்கும், ரூத்தை"மனைவியாக" கொள்ளவும் செயல்படத் தூண்டியது (4:9-10).

இளைய தலைமுறையினருடன் தங்கள் அனுபவமிக்க ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்களின் அறிவுரைகளை நாம் நிச்சயமாக மதிக்கிறோம். ஆனால் ரூத் மற்றும் நகோமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை விடச் சிறியவர்களிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. அன்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைமுறை உறவுகளை வளர்க்க முற்படுவோம். அது நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து, நாம் அறிந்திராததை கற்றுக்கொள்ள உதவும்.

 

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜோர்ன் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, ​​அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும்  தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் "ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை" தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும்  (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜோர்னும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம்.

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் "எதேச்சையான பயம்" என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, "இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று" (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: "பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்" (வ. 20). "பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்" என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, ​​​​நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய  ஆறுதலை நமக்களிக்கிறார்.

 

நற்கிரியைகளில் ஐசுவரியவான்

எழுபது ஆண்டுகளாக, தேய்த்தல், உலர்த்துதல், கையால் துணிகளை அலசுதலென்று  ஒரு சலவை செய்யும் பெண்ணாகக் கடின உழைப்புக்குப் பிறகு, ஓசியோலா மெக்கார்ட்டி, இறுதியாக எண்பத்தாறு வயதில் ஓய்வு பெறத் தயாரானார். அத்தனை ஆண்டுகளும் அவர் தனது சொற்ப வருமானத்தை மிகக் கவனமாகச் சேமித்து வைத்திருந்தார். மேலும் தனது சுற்றுப்புறத்தாரை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஓசியோலா அருகிலுள்ள பல்கலைக்கழகத்திற்குத் தோராயமாக 1.24 கோடி ரூபாயை நன்கொடையாக ஏழை மாணவர்களின் உதவித்தொகை நிதியாக வழங்கினார். அவரது தன்னலமற்ற கொடையால் ஈர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் அவரது அறக்கொடையை மும்மடங்காகப் பெருக போதுமான அளவு நன்கொடை அளித்தனர்.

செல்வத்தைத் தனது சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தாமல், பிறரை ஆசிர்வதிப்பதற்காகப் பயன்படுத்துவதே அதின் உண்மையான மதிப்பென்பதை ஓசியோலா புரிந்துகொண்டார். இந்த உலகத்தில் ஐசுவரியவான்களாக இருப்பவர்களுக்கு “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக” (1 தீமோத்தேயு 6:18) இருக்கக் கட்டளையிடும்படி அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்தினார். நாம் ஒவ்வொருவரும் உக்கிராணக்காரர்களாய் இருக்கும்படி நமக்குச் செல்வம் கொடுக்கப்பட்டுள்ளது, அது பணமாக இருக்கலாம் அல்லது பிற வளமாக இருக்கலாம். நம்முடைய ஆதாரங்களில் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, தேவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்குமாறு பவுல் எச்சரிக்கிறார் (வ.17).மேலும் “தாராளமாய்க் கொடுக்கிறவர்களாக” இருப்பதன் மூலம், பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேமித்து வைக்க வேண்டும் (வ.18).

தேவனின் பொருளாதார கொள்கையில் பிசினித்தனமும், தாராளமாகக் கொடுக்காததும் வெறுமைக்கே வழிவகுக்கும். அன்பினால் பிறருக்குக் கொடுப்பதே நிறைவின் வழி. அதிகமாகப் பாடுபடுவதற்குப் பதிலாக, போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (வ. 6). ஓசியோலாவைப் போல, நமது வளங்களைத் தாராளமாகக் கொடுப்பது எவ்வாறிருக்கும்? தேவன் நம்மை வழிநடத்துவதுபோல இன்று நற்செயல்களில் ஐசுவரியமுள்ளவர்களாக இருக்க முயல்வோம்.

 

ஆராதனை வீடு

இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் குண்டுவீசித் தாக்கப்பட்டபோது, ​​பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அதன் அசல் வடிவமைப்பின்படி அதை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கூறினார். அது சிறியதாக இருக்க வேண்டும், எனவே விவாதங்கள் நேருக்கு நேர் இருக்கும். அது அரைவட்டமாக இல்லாமல் நீள்வட்டமாக இருக்க வேண்டும், அரசியல்வாதிகள் "சபையின் மையத்திற்கு வர" ஏற்றதாயிருக்கும். இது இடது மற்றும் வலதுசாரியினர் அறை முழுவதும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் பிரிட்டனின் கட்சி அமைப்பைப் பாதுகாத்தது. மேலும் கட்சிமாறுமுன் கவனமாகச் சிந்திக்கவும் வேண்டியிருந்தது. "நாம் நமது கட்டிடங்களை வடிவமைக்கிறோம், பின்னர் நமது கட்டிடங்கள் நம்மை வடிவமைக்கின்றன" என்று சர்ச்சில் முடித்தார்.

யாத்திராகமத்தில் உள்ள எட்டு அதிகாரங்கள் (அதிகாரங்கள் 24-31) ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கான வழிமுறைகளை விவரிக்கின்றன. ஆறு (அதிகாரங்கள் 35-40) இஸ்ரவேலர் அதை எவ்வாறு செய்தனர் என்பதை விவரிக்கிறது. தேவன் அவர்களின் ஆராதனையில் அக்கறை காட்டினார். ஜனங்கள் பிராகாரத்தினுள் நுழைந்தபோது, ​​மின்னும் தங்கமும், கூடாரத்தின் வண்ணமயமான திரைச்சீலைகளும் (26:1, 31-37) அவர்களை வியப்பூட்டின. தகனபலிபீடம் (27:1-8) மற்றும் தண்ணீர்தொட்டி (30:17-21) அவர்களின் மன்னிப்பின் கிரயத்தை அவர்களுக்கு நினைவூட்டியது. வாசஸ்தலத்தில் ஒரு குத்துவிளக்கு (25:31-40), சமூகப்பத்து மேசை (25:23-30), தூபபீடம் (30:1-6), மற்றும் உடன்படிக்கைப் பெட்டி (25:10-22) ஆகியவை இருந்தன. ஒவ்வொரு பொருளும் பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. 

இஸ்ரவேலுக்கு செய்ததைப் போல, தேவன் நம்முடைய ஆராதனை  ஸ்தலத்திற்கு விரிவான வழிமுறைகளை வழங்கவில்லை, ஆனால் நமது ஆராதனை எவ்விதத்திலும் குறைவானதல்ல. நாம்தான் அவர் வாசம்பண்ணும்படி பிரித்தெடுக்கப்பட்ட கூடாரமாக இருக்க வேண்டும். நாம் செய்யும் அனைத்தும் அவர் யார், அவர் என்ன செய்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டட்டும்.