ஹோலி குக், வேலைக்காக லண்டன் சென்றபோது, ஒரு நண்பர் கூட அவளுக்கில்லை. அவளுடைய விடுமுறை நாட்கள் கொடுமையாக இருந்தது. தனிமையுணர்வு உள்ள மக்கள் அதிகமுள்ள நகரங்களில் லண்டன் முன்னிலை வகிக்கிறது. அதின் அண்டை நாடான போர்ச்சுகல் லிஸ்பனில் வசிப்பவர்களில் 10 சதவீதத்துடன் ஒப்பிடும்போது  ​​ 55 சதவீத லண்டன் மக்கள் தாங்கள் தனிமையில் இருப்பதாகக் கூறுவதாக உலகளாவிய கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.

பிறரோடு இணைந்திருக்க, ஹோலி தனது அச்சத்தை விட்டு, தி லண்டன் லோன்லி கேர்ள்ஸ் கிளப் என்ற சமூக ஊடகக் குழுவை உருவாக்கினாள், அதில் சுமார் முப்பத்தைந்தாயிரம் பேர் சேர்ந்துள்ளனர். சில வாரங்களுக்கு ஒருமுறை சிறிய குழுக்களாகச் சந்தித்து பூங்காக்களைச் சுற்றிப்பார்த்தல், கலைப் பாடங்கள், ஆபரணங்கள் வடிவமைத்தல், இரவு உணவுகள் மற்றும் நாய்க்குட்டிகளுடன் வெளிப்புற உடற்பயிற்சி வகுப்புகள் போன்றவற்றைச் செய்கின்றனர்.

தனிமையென்னும் போராட்டம் புதிதல்ல, தனிமையுணர்வுக்கான பரிகாரியும் புதியவரல்ல. நமது அனாதி தேவன், “தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்” (சங்கீதம் 68:6) என்று தாவீது எழுதினார். கிறிஸ்துவைப் போன்ற நண்பர்களுக்கு நேராக நம்மை நடத்தும்படி தேவனிடம் கேட்பது ஒரு பரிசுத்த பாக்கியம், எனவே நாம் அவரிடம் தாராளமாக இந்த வேண்டுகோளை எடுத்துச்செல்லலாம். அவர், “தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்” (வ. 5) என்றும், தாவீது, “எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே” (வ.19) என்றும் சொல்கிறார்.

இயேசு நமக்கு எவ்வளவு நல்ல நண்பர்! ஒவ்வொரு கணமும் தம்முடைய மகிமையான பிரசன்னத்தில் தொடங்கி அவர் நம்மோடு என்றென்றும் இருக்கும் நண்பர்களைத் தருகிறார். ஹோலி சொல்வது போல், “நண்பர்களுடனான நேரம் மனதுக்கு உகந்தது”