ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைத்தனத்திலிருந்த மக்களை விடுவித்தார் ,எதிரிகளும் சரணடைந்தனர். எனினும் டெக்சாஸ் மாநிலம் அடிமைகளின் சுதந்திரத்தை இன்னும் அறியவில்லை. ஜூன் 19, 1865 அன்று, கோர்டன் கிரேன்ஜர் என்ற இராணுவ தளபதி டெக்சாஸில் உள்ள ஒரு நகரத்திற்குள் நுழைந்து, அடிமைப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களையும் விடுவிக்குமாறு கட்டளையிட்டார். சுதந்திரத்தின் பிரகடனத்தைக் கேட்டபோது, சங்கிலிகள் அறுந்து. அடிமைத்தனத்திலிருந்தவர்கள் அடைந்த அதிர்ச்சியையும் , மகிழ்ச்சியையும் கற்பனை செய்து பாருங்கள்.

தேவன் ஒடுக்கப்பட்டவர்களைக் காண்கிறார், அநீதியால் நசுக்கப்படுபவர்களுக்கு அவர் மெய்யாகவே விடுதலை அளிப்பார். மோசேயின் காலத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் அது உண்மையாக இருக்கிறது. எரிகிற முட்செடியிலிருந்து அவசர செய்தியுடன் தேவன் அவனுக்கு வெளிப்பட்டு, “எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து(தேன்)” (யாத்திராகமம் 3:7) என்றார். அவர் இஸ்ரேலுக்கு எதிரான எகிப்தின் மிருகத்தனத்தைப் பார்த்தது மட்டுமன்றி, அதைக்குறித்து ஏதோவொன்று செய்யத் திட்டமிட்டுமிருந்தார். “அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி…நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்” (வ.8) என்று தேவன் முழங்கினார். அவர் இஸ்ரேலுக்குச் சுதந்திரத்தை அறிவிக்கச் சித்தம் கொண்டார். மோசே அவருடைய வாயாக இருப்பார்:”நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன்” (வ.10) என்று தன் ஊழியனிடம் கூறினார்.

தேவனுடைய வேளை நாம் எதிர்பார்ப்பதுபோல விரைவாக வரவில்லை  என்றாலும், ஒரு நாள் அவர் நம்மை எல்லா அடிமைத்தனத்திலிருந்தும், அநீதியிலிருந்தும் விடுவிப்பார். ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் நம்பிக்கையையும். விடுதலையையும் தருகிறார்.