தேவனை நம்மூலமாக பிரதிபலித்தல்
ச ந்திரனுக்கு அதன் சொந்த ஒளி இல்லை, அது சூரியனின் ஒளியை வெறுமனே பிரதிபலிக்கிறது என்பதைக் குறிப்பிடுவது எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், இருண்ட இரவின் போது, தனது முழு பிரகாசத்தில் ஒளிர்ந்திடும் சந்திரனை விட அதிக ஆறுதல் எதுவும் நமக்குத் தருவதில்லை. வெளிச்சத்தை குறித்து வேதாகமம், "மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." என்று மத்தேயு 5:16 இல் கூறுகிறது. இதன் பொருள் நாம் ஒருபோதும் ஒளியின் தோற்றுவிப்பாளர்கள் அல்ல, நாம் அதன் பிரதிபலிப்பாளர்கள். எனவே,…
மெதுவான கிருபை
“மெல்லமான ஆடை வடிவமைப்பு” பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த பிரபல இயக்கமானது, வேகமாகவும் மலிவாகவும் ஆடைகளை உற்பத்திசெய்யும் இயக்கத்திற்கு எதிரானது. இந்த வேகமான பாணியில் உருவாக்கப்படும் ஆடைகள் கடைவீதிகளுக்கு விற்பனைக்கு வந்த மாத்திரத்திலேயே, பழமையானதாக மாறிவிடுகிறது. அதிலும் சில பெரிய நிறுவனங்கள் அதிக அளவிலான ஆடைகளை அதே பாணியில் உற்பத்திசெய்து, அந்த வடிவமைப்பை பழமையானதாக மாற்றிவிடுகிறது.
ஆனால் மெல்லமான ஆடை வடிவமைப்பு இயக்கமானது, பொறுமையாக மக்களை அணுகும்படிக்கு வலியுறுத்துகிறது. நவீன யுகத்திற்கேற்றாற்போல் உடனே நம்முடைய ஆடையை மாற்றிக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்கு மத்தியில், அந்த இயக்கமானது நேர்த்தியாகவும் தரமாகவும், நீண்டகாலத்திற்கு உழைக்கக்கூடிய ஆடைகளை வடிவமைத்து அதை தேர்ந்தெடுக்க வலியுறுத்துகிறது.
மெல்லமான இந்த ஆடை வடிவமைப்பு இயக்கத்தின் அழைப்பை ஏற்ற போது, வேகமான ஆடை வடிவமைப்பு இயக்கத்தின் நவீன ஆடையை தேர்ந்தெடுக்கும் பரபரப்பான எண்ணத்தைக் குறித்து நான் ஆச்சரியப்பட்டதுண்டு. கொலோசெயர் 3இல், கிறிஸ்துவில் மறுரூபமாக்கப்படும் அனுபவமானது துரிதமாய் நிகழும் காரியமல்ல என்பதை பவுல் வலியுறுத்துகிறார். இது வாழ்நாள் முழுவதும் மெல்லமாய் நிகழும் மறுரூப அனுபவமாகும்.
நவீன உலக ஆடைகளால் நாம் நம்மை அலங்கரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதைப் பார்க்கிலும், “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமை” (வச. 12) என்று நம்முடைய தாகத்தை மாற்றிக்கொள்ள பிரயாசப்படுவோம். கிறிஸ்து நம்முடைய இருதயத்தை மறுரூபமாக்கும் இந்த நித்திய பயணத்தில், நாம் பொறுமையைக் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம் (வச. 15).
நமக்கு வேண்டிய ஞானம்
ஜான் எம். பாரி தனது பிரபல புத்தகமான “தி கிரேட் இன்ஃப்ளூயன்ஸா”வில் 1918 காய்ச்சல் தொற்றுநோய் பற்றிய கதையை விவரிக்கிறார். சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பில் இருந்து பிடிபடுவதற்குப் பதிலாக, ஒரு பெரிய பாதிப்பை எவ்வாறு எதிர்பார்த்தார்கள் என்பதை பாரி வெளிப்படுத்துகிறார். முதல் உலகப் போர், நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் அகழிகளில் அடைக்கப்பட்டு, எல்லைகளைத் தாண்டிச் செல்வது, புதிய வைரஸ்களைக் கட்டவிழ்த்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். ஆனால் அழிவைத் தடுக்க இந்த அறிவு பயனற்றது. சக்திவாய்ந்த தலைவர்கள், போர் மேளங்களை அடித்து, வன்முறையை செயல்படுத்தினர். தொற்றுநோய் நிபுணர்கள், போரின் படுகொலையில் கொல்லப்பட்ட இருபது மில்லியனையும் சேர்த்து ஐம்பது மில்லியன் மக்கள் தொற்றுநோயில் இறந்ததாக மதிப்பிடுகின்றனர்.
நம்முடைய மாம்சீக அறிவானது தீமையிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள போதுமான தீர்வல்ல என்பதை நாம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டேயிருக்கிறோம் (நீதிமொழிகள் 4:14-16). நாம் அபரிமிதமான அறிவைப் பெற்றிருந்தாலும், குறிப்பிடத்தக்க நுண்ணறிவுகளை திறமையாய் செயல்படுத்தினாலும், நாம் ஒவ்வொருவரையும் காயப்படுத்தக்கொள்வதை நிறுத்தமுடியவில்லை. காரிருளுக்கு நம்மை அழைத்துச் செல்லும் துன்மார்க்கரின் பாதையில் நாம் செல்ல முடியாது. நாம் சிறந்த அறிவை பெற்றிருந்தாலும், எதில் நாம் இடறுகிறோம் என்பதை நம்மால் கண்டுபிடிக்க இயலாது (வச. 19).
ஆகையினால் தான் நாம் ஞானத்தையும் புத்தியையும் சம்பாதிக்க அறிவுறுத்தப்படுகிறோம் (வச. 5). ஞானமானது, நம்முடைய புத்தியில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது. நமக்கு தேவையான மெய்யான தெய்வீக ஞானமானது தேவனிடத்திலிருந்து நமக்கு வருகிறது. நம்முடைய அறிவு எப்போதும் குறைவுள்ளது. ஆனால் நமக்கு தேவையானதை அவருடைய ஞானம் நமக்கு அருளுகிறது.
தேர்ந்தெடுப்பு
எனது ஆருயிர் நண்பன் மரித்து சில வாரங்கள் கழித்து அவனுடைய தாயாரிடத்தில் நான் பேசினேன். அவர்கள் துக்கமாயிருக்கும் அந்த தருவாயிலும் எப்படியிருக்கிறீர்கள் என்னும் கேள்வி பொருந்தாத கேள்வி என்று தெரிந்தும் அவர்களிடத்தில் நான் அதைக் கேட்டேன். ஆனால் “நான் மகிழ்ச்சியாய் இருப்பதை தெரிந்துகொண்டேன்” என்ற அவர்களுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது.
என் சொந்த வாழ்க்கையில் சில விரும்பத்தகாத சூழ்நிலைகளைத் தாண்டிச் செல்ல நான் போராடியபோது அவர்களுடைய வார்த்தைகள் எனக்கு உதவியது. உபாகமத்தின் முடிவில் இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் கட்டளையையும் அவளுடைய வார்த்தைகள் எனக்கு நினைவூட்டின. மோசேயின் மரணத்துக்கும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர்கள் நுழைவதற்கும் சற்று முன்பு, அவர்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். மோசே, “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன்... நீங்கள் ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்” (உபாகமம் 30:19) என்று கட்டளையிடுகிறார். அவ்வாறு ஜீவனை தெரிந்துகொண்டால், அவர்கள் தேவனுடைய கட்டளைகளை பின்பற்றி நலமாக வாழமுடியும். இல்லையென்றால், தேவனை விட்டு விலகி, “மரணத்தையும் தீமையையும்” (வச. 15) தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.
நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது. தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்புவதின் மூலம் நாம் மகிழ்ச்சியை தேர்வுசெய்யலாம். அல்லது நம்முடைய வாழ்க்கைப் பாதையின் எதிர்மறையான காரியங்களை தேர்வுசெய்து நம்முடைய மகிழ்ச்சி பறிபோகும்படிக்கும் அனுமதிக்கலாம். அது பரிசுத்த ஆவியானவரை சார்ந்துகொண்டு செய்யப்படவேண்டியது. “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக” (ரோமர் 8:28) நடத்துகிற தேவனாலே நாம் மகிழ்ச்சியை தேர்ந்தெடுக்கலாம்.
எது சிறப்பாக இருக்கும்?
எரிக் தனது இருபதுகளின் ஆரம்பத்தில் இயேசுவின் அன்பைப் பற்றி கேள்விப்பட்டார். அவர் தேவாலயத்திற்குச் செல்லத் தொடங்கினார், அங்கு அவர் கிறிஸ்துவை நன்கு அறிந்துகொள்ள உதவிய ஒருவரைச் சந்தித்தார். எரிக்கின் வழிகாட்டி அவரை தேவாலயத்தில் ஒரு சிறுவர் குழுவிற்கு போதிக்கும்படி கேட்டுக்கொண்டார். பல ஆண்டுகளாக, தனது நகரத்தில் ஆபத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவவும், முதியவர்களைச் சந்திக்கவும், அண்டை வீட்டாருக்கு விருந்தோம்பல் காட்டவும் தேவன் எரிக்கை ஏவினார். இப்போது ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் எரிக் தனக்கு சேவை செய்ய ஆரம்பத்திலேயே கற்றுக் கொடுத்ததற்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை விளக்குகிறார்: “இயேசுவிடம் நான் கண்ட நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ள என் இதயம் நிரம்பி வழிகிறது. அவருக்குச் சேவை செய்வதைவிடச் சிறந்தது எது?” என்று சொல்லுகிறார்.
தீமோத்தேயுவின் தாயும் அவனுடைய பாட்டியும் அவன் குழந்தையாயிருந்தபோதிலிருந்து அவனை விசுவாசத்தில் வளர்த்தார்கள் ( 2 தீமோத்தேயு 1:5). மேலும் அவன் அப்போஸ்தலனாகிய பவுலைச் சந்தித்தபோது இளைஞனாக இருந்திருக்கலாம். தீமோத்தேயு தேவனுக்கு ஊழியம் செய்யும் அவனுடைய பாரத்தை பவுல் கண்டு, அவருடைய ஊழிய பயணத்தில் அவனையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார் (அப்போஸ்தலர் 16:1-3). பவல் தீமோத்தேயுவுக்கு ஊழியத்திலும் வாழ்க்கையிலும் வழிகாட்டியாக ஆனார். அவனைப் படிக்கவும், தவறான போதனைகளை எதிர்கொண்டபோது தைரியமாக இருக்கவும், தேவனுக்கு ஊழியம் செய்வதில் தனது திறமைகளைப் பயன்படுத்தவும் பவுல் தீமோத்தேயுவை ஊக்கப்படுத்துகிறார் (1 தீமோத்தேயு 4:6-16).
தீமோத்தேயு தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்யவேண்டும் என்று பவுல் ஏன் விரும்பினார்? அவர் “ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” (வச. 10) என்று எழுதுகிறார். இயேசுவே நம்முடைய நம்பிக்கையும் உலகத்தின் இரட்சகராகவும் திகழ்கிறார். அவருக்கு ஊழியம் செய்ய அதைக்காட்டிலும் வேறென்ன காரணம் தேவை?