மூன்று ராஜாக்கள்
புகழ்பெற்ற ஹாமில்டனின் இசையில், இங்கிலாந்தின் மன்னரான மூன்றாம் ஜார்ஜ், நகைச்சுவையாக ஒரு கார்ட்டூன் சித்திரத்தில் குழப்பமான வில்லனாக சித்தரிக்கப்படுகிறார். இருப்பினும், ஜார்ஜ் மன்னரின் புதிய வாழ்க்கை வரலாறு, அவர் ஹாமில்டன் அல்லது அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ள கொடுங்கோலன் இல்லை என்று கூறியது. அமெரிக்கர்கள் சொல்லுவது போல ஜார்ஜ் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்திருந்தால், அவர்களின் சுதந்திரப் போராட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அவர் தனது “நாகரிகமான, நல்ல சுபாவத்தால்” அப்படி செய்யவில்லை.
ஜார்ஜ் மன்னன் வருத்தத்துடன் இறந்தானா? யாருக்குத் தெரியும்? அவர் தனது குடிமக்களிடம் கடுமையாக செயல்பட்டிருந்தால், அவரது ஆட்சி ஒருவேளை இன்னும் வெற்றிகரமாக இருந்திருக்குமா?
அந்த விவாதம் தேவையற்றது. வேதாகமத்தில் யோராம் ராஜாவைப் பற்றி வாசிக்கிறோம். “யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்” (2 நாளாகமம் 21:4). “அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்” (வச. 6). அவனது இரக்கமற்ற ஆட்சி அவனது மக்களை அந்நியப்படுத்தியது. அவர்கள் அவனது மரணத்திற்காக அழவில்லை. “அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை” (வச. 19).
மூன்றாம் ஜார்ஜ் மிகவும் மென்மையாக இருந்தாரா என்று வரலாற்றாசிரியர்கள் விவாதிக்கலாம். ஆனால் யோராம் நிச்சயமாக மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்” (யோவான் 1:14) வந்த இயேசுவின் வழியே ஒரே சிறந்த வழி. கிறிஸ்துவின் எதிர்பார்ப்புகள் உறுதியானவை (அவர் உண்மையை எதிர்பார்க்கிறார்). ஆனாலும் அவர் தோல்வியுற்றவர்களை அரவணைக்கிறார் (அவர் கிருபையை நீட்டிக்கிறார்). தம்மை விசுவாசிக்கிற நம்மை அவருடைய வழியைப் பின்பற்றும்படி இயேசு அழைக்கிறார். பின்னர், அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் மூலம், அவர் அவ்வாறு செய்ய நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.
சாம்பலுக்கு சிங்காரம்
கொலராடோ வரலாற்றில் மிகவும் அழிவுகரமான தீவிபத்தான மார்ஷல் தீவிபத்திற்கு பிறகு, அதில் விலைமதிப்பு மிக்க பொருட்களை இழந்தவர்களுக்கு அதை சாம்பலில் தேடித்தருவதற்காக ஒரு குழுவினர் முன்வந்தனர். விலைமதிப்பற்ற பொருட்கள் இன்னும் அப்படியே பாதுகாக்கப்பாக இருக்கும் என்று குடும்ப உறுப்பினர்கள் நம்பினர். ஆனால் மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு நபர் தனது திருமண மோதிரத்தைப் பற்றி மென்மையாக பேசினார். அவர் அதை மாடி படுக்கையறையில் தனது அலமாரியில் வைத்திருந்திருக்கிறார். வீடு இப்போது இல்லை, அவை அப்படியே எரிந்து சாம்பலாக இருந்தது. தேடுபவர்கள் படுக்கையறை இருந்த அதே மூலையில் மோதிரத்தைத் தேடினார்கள். அவர்களுக்கு மோதிரம் கிடைக்கவில்லை.
ஏசாயா தீர்க்கதரிசி எருசலேம் தரைமட்டமாக்கப்படப்போகிறது என்னும் அதின் அழிவைக் குறித்து மிகுந்த துக்கத்துடன் எழுதுகிறார். அதேபோல், நாம் கட்டியெழுப்பிய வாழ்க்கை சாம்பலாகிவிட்டதாக சில சமயங்களில் உணர்கிறோம். உணர்ச்சி ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் எங்களிடம் எதுவும் இல்லை என்று உணர்கிறோம். ஆனால் ஏசாயா நம்பிக்கை அளிக்கிறார்: “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலை” அளிக்கவும் அவர் என்னை அனுப்பியிருக்கிறார் (ஏசாயா 61:1-2). தேவன் நம் சோகத்தை மகிமையாக மாற்றுகிறார்: அவர் “சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தை” கொடுக்கிறார் (வச. 3). “அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்” (வச. 4) என்று வாக்களிக்கிறார்.
அந்த மார்ஷல் தீவிபத்து தளத்தில், ஒரு பெண் எதிர் பக்கத்தில் சாம்பலைத் தேடினார். அங்கு, அவரது கணவரின் திருமண மோதிரத்தைக் கண்டுபிடித்தார். உங்கள் விரக்தியில், உங்கள் சாம்பலில் தேவன் சிங்காரத்தை கண்டுபிடித்துக்கொடுக்கிறார். அது நீங்களே!
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் 2023!
சுசன்னா சோங் தனது இரண்டாவது கர்ப்பத்தின்போது இடைவிடாத உதிரப்போக்கினால், அவதிப்பட்டார். மருத்துவர்கள், நடக்கவோ பேசவோ முடியாத நிலையிலிருந்த அவரது முதல் குழந்தையைப் போலவே இந்த இரண்டாவது குழந்தையும் இருக்கும் என்று அவர்கள் கருதி, அவரை மரபணுசோதனைக்கு உட்படுத்தும்படி வற்புறுத்தினார்கள்.
இருப்பினும், சூசன்னா உறுதியாக மறுத்து, இந்த மருத்துவ பரிசோதனைகள் எதுவும் இல்லாமல் கர்ப்பகாலத்தைத் தொடர முடிவு செய்தார்.
“எனது முதல் குழந்தைக்குசெய்ததைப் போல் நான் மீண்டும் அத்தகையச் சூழலைக்கடக்க வேண்டும் என்பது தேவ சித்தமானால், என்னால் அதனைச் செய்ய முடியும்”.
அவரது இளைய மகன் குவான்யி இப்போது…
அனைவருக்கும் ஒரே கதவு
எனது குழந்தைப் பருவத்தில் இருந்த உணவகத்தின் நெறிமுறைகள் 1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் சமூக மற்றும் இன இயக்கவியலுக்கு இசைவாக இருந்தன. சமையலறை உதவியாளர் மேரி, சமையல்காரர் மற்றும் என்னைப் போன்று பாத்திரங்களைக் கழுவுபவர்கள் எல்லாம் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் உணவுபரிமாறும் இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெள்ளையர்கள். கறுப்பின வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்யலாம். ஆனால் அவர்கள் அதை பின் வாசலில் வந்து வாங்கிக்கொள்ளவேண்டும். இத்தகைய கொள்கைகள் அந்த சகாப்தத்தில் கறுப்பர்களின் சமத்துவமற்ற சிகிச்சையை வலுப்படுத்தியது. அந்த காலத்தைக் கடந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டாலும், தேவனின்; சாயலில் உருவாக்கப்பட்ட மக்களாக நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதில் இன்னும் வளர்ச்சிக்கு இடம் உள்ளது.
ரோமர் 10:8-13 போன்ற வேதப்பகுதிகள், தேவனுடைய குடும்பத்திற்கு அனைவருக்கும் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளதைக் காண்பிக்கிறது. அங்கே பின் கதவு இல்லை. சுத்திகரிப்பு மற்றும் மன்னிப்புக்காக இயேசுவின் மரணத்தை நம்புவதன் மூலம் அந்த வாசலின் வழியாய் எவரும் பிரவேசிக்கலாம். இந்த மறுரூப அனுபவத்திற்கு வேதம் கொடுக்கும் பெயர் “இரட்சிப்பு” (வச. 9,13). உங்கள் சமூகசூழ்நிலை அல்லது இனநிலை அல்லது மற்றவர்களின் நிலை ஆகியவை சமன்பாட்டிற்கு காரணியாக இல்லை. “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்” (வச. 11-12). இயேசுவைக் குறித்த வேதத்தின் சாட்சியை நீங்கள் உங்கள் இருதயத்தில் நம்புகிறீர்களா? இந்த குடும்பத்திற்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்!
மனதை தளரவிடாதே
என் அம்மா டோரதி நல்ல ஆரோக்கியத்துடன் எப்போது இருந்திருக்கிறார்கள் என்பதை என்னால் யோசிக்கமுடியவில்லை. பல ஆண்டுகளாக உடையக்கூடிய நீரிழிவு நோயாளியாக, அவரது இரத்த சர்க்கரை பெருமளவில் ஒழுங்கற்றதாக இருந்தது. சிக்கல்கள் உருவாகி, அவரது சேதமடைந்த சிறுநீரகங்களுக்கு நிரந்தர டயாலிசிஸ் தேவைப்பட்டது. நரம்பியல் மற்றும் எலும்பு முறிவு காரணமாக சக்கர நாற்காலி பயன்படுத்தப்பட்டது. அவர் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
ஆனால் அவரது சரீரம் சிகிச்சையை அனுமதிக்காததால், அவருடைய ஜெப வாழ்க்கை இன்னும் அதிகரிக்கத்துவங்கியது. தேவனின் அன்பை மற்றவர்கள் அறியவும் அனுபவிக்கவும் மணிக்கணக்காக ஜெபித்தார். வேதத்தின் விலைமதிப்பற்ற வார்த்தைகள் அவருக்கு இனிமையாக தெரிந்தது. அவரின் கண்பார்வை மங்குவதற்கு முன்பு, அவர் தன் சகோதரி மார்ஜோரிக்கு 2 கொரிந்தியர் 4-ல் உள்ள வார்த்தைகளை மேற்கோள்காட்டி ஒரு கடிதம் எழுதினாள்: “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரிந்தியர் 4:16).
மனம் தளருவது எவ்வளவு இயல்பானது என்பதை பவுல் அறிந்திருந்தார். 2 கொரிந்தியர் 11இல், அவர் தன்னுடைய ஜீவியத்தை அபாயங்கள், வலிகள் மற்றும் பஞ்சம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாகவே வெளிப்படுத்துகிறார் (வச. 23-29). ஆனாலும் அவர் அந்த “தொல்லைகளை” தற்காலிகமானதாகவே கருதினார். நாம் எதைக் காண்கிறோமோ அதைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், நம்மால் பார்க்க முடியாத நித்தியமானவைகளைப் பற்றியும் சிந்திக்கும்படி அவர் நம்மை ஊக்குவித்தார் (4:17-18).
நமக்கு என்ன நடந்தாலும், நம் அன்பான பரமபிதா ஒவ்வொரு நாளும் நம் உள்ளான சுத்திகரிப்பை தொடர்ச்சியாய் செய்கிறார். அவர் நிச்சயமாய் நம்மோடிருக்கிறார். அவர் கொடுத்த ஜெபம் என்னும் வரத்தின் மூலம் அவர் நமக்கு மிக அருகாமையில் வந்திருக்கிறார். மேலும், அவர் நம்மைப் பலப்படுத்தி, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருவதாக அவர் அளித்த வாக்குறுதிகள் மெய்யானவைகள்.