இந்த இன்டர்நெட் உலகத்தில் போட்டி மனப்பான்மை என்பது மிகவும் கடுமையாகிவிட்டது. பெரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஆக்கப்பூர்வமான வழிகளை உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, சுபாரு வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம். சுபாரு உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை விளம்பரப்படுத்தும்பொருட்டு நம்பிக்கைக்குரிய அதின் ரசிகர்களை அழைப்பித்து அவர்களையே “பிராண்ட் தூதுவர்களாக” பயன்படுத்துகின்றனர்.

அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது: “சுபாரு தூதர்கள் சுபாருவைப் பற்றிய புகழைப் பரப்புவதற்கும், பிராண்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவுவதற்கும் தங்கள் ஆர்வத்தையும் ஆற்றலையும் தன்னார்வத்துடன் வழங்கும் திறமைமிக்க பிரத்யேகமான குழுவாகும்.” சுபாரு வாகனங்களை பயன்படுத்துகிறவர்கள் மக்களின் மத்தியில் ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதினால் அவர்களைக் கொண்டு அதின் புகழானது பரப்பப்படுகிறது.

2 கொரிந்தியர் 5 இல், இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு பவுல் ஒரு வித்தியாசமான தூதுவர் திட்டத்தை விவரிக்கிறார். “ஆகையால் கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்” (வச. 11). “தேவன்… ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஓப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்” (வச. 19-20).

இன்று பல தயாரிப்புகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், மகிழ்ச்சி, முழுமை மற்றும் நோக்கம் ஆகியவற்றின் உணர்வை வழங்குவதாகவும் உறுதியளிக்கின்றன. ஆனால் கிறிஸ்தவர்களாகிய நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட ஒப்புரவாக்குதலின் செய்தி, நற்செய்தி. அந்த நற்ச்செய்தியை ஒரு அவிசுவாசமான உலகிற்கு கொடுப்பதற்கான பாக்கியம் நமக்கு அருளப்பட்டிருக்கிறது.