பில் மற்றும் சாண்டி, அகதிக் குழந்தைகளின் கதைகளைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்து அதில் இருவரை தங்களுடைய வீட்டில் தங்கவைத்துக்கொள்ள மனம்திறந்தனர். அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்த பிறகு, அவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்று அமைதியாய் யோசித்தனர். அவர்கள் இங்கே தங்குவதற்கு மனரீதியாய் ஆயத்தமாய் இருக்கிறார்களா? அவர்களுடைய மொழி, கலாச்சாரங்கள் ஆகியவைகள் வேறு என்றாலும், அவர்கள் இந்த விலைமதிப்பற்ற குழந்தைகளுக்கு அடைக்கலமான மக்களாக மாறினார்கள்.
ரூத்தின் கதையைக் கேட்டு போவாஸ் நெகிழ்ச்சியடைந்தார். அவள் தன்னுடைய சொந்த ஜனத்தை விட்டுவிட்டு, நகோமிக்கு ஆதரவாய் செயல்படுவதற்கு முன்வந்த கதையைக் கேள்விப்பட்டு, போவாஸ் “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக” (ரூத் 2:12) என்று அவளுக்காக ஜெபித்து அவளை ஆசீர்வதித்தான்.
ஒரு நாள் இரவில் ரூத் போவாஸுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவனுடைய ஆசீர்வாதத்தை அவனுக்கு நினைப்பூட்டுகிறாள். தன் கால்களில் ஏதோ ஒருவகையான அசைவை உணர்ந்த போவாஸ் “நீ யார்” என்று கேட்கிறான். அதற்கு ரூத், “நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்” (3:9).
வஸ்திரத்தின் ஓரம் என்பதற்கும் செட்டைகள் என்பதற்கும் எபிரெயம் ஒரே வார்த்தையையே பயன்படுத்துகிறது. போவாஸ் ரூத்தை மணந்துகொள்வதின் மூலம் அவளை சுதந்தரவாளியாக்குகிறான். அவர்களுடைய கொள்ளுபேரனாகிய தாவீது அந்த கதையை தன்னுடைய பாடலில் பரதிபலிக்கிறான்: “தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங்கீதம் 36:7).
உங்களுக்கு யாராவது எப்போதாவது அடைக்கலம் கொடுத்துள்ளார்களா? அது உங்களை எப்படி உணரச்செய்தது? பெரிய அல்லது சிறிய வழிகளில் நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கலாம்?
தந்தையே, உம்முடைய செட்டைகளின் நிழலில் நான் அடைக்கலம் புகுகிறேன். உம்முடைய அடைக்கலத்தை மற்றவர்களுக்கு பிரஸ்தாப்பபடுத்த எனக்கு உதவிசெய்யும்.