2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு, இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில், திறன் மற்றும் நினைவக பயிற்சிகளுக்கு இடையில் ஏற்படும் மாறுதலைக் குறித்து ஆய்வுமேற்கொண்டனர். ஆச்சரியவிதமாக, ஒரே நேரத்தில் பல திறமைகளை வெளிப்படுத்தமுடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்களைக் காட்டிலும் ஒரே நேரத்தில் ஒரே திறனை வெளிப்படுத்துகிறவர்கள் சிறப்பானவர்களாய் செயல்பட்டுள்ளனர். பல்திறனாளிகள் தங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதற்கும், தேவையற்ற தகவல்களை அப்புறப்படுத்துவதற்கும் சிரமப்படுகின்றனர். நம்முடைய மனது சிதறும்போது, அவற்றை ஒருமுகப்படுத்துவது என்பது சவாலாய் அமைகிறது.

இயேசு மரியாள் மற்றும் மார்த்தாள் வீட்டிற்குச் சென்றபோது, மார்த்தாள் மும்முரமாக பற்பல வேலைகளை செய்துகொண்டிருந்தாள் (லூக்கா 10:40). அவளது சகோதரியாகிய மரியாளோ, இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய போதனைகளை கேட்பதின் மூலம் என்றுமே தன்னைவிட்டு எடுபடாத ஞானத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்தாள். (வச. 39-42). மார்த்தாள், மரியாளை தனக்கு உதவி செய்ய அனுப்பும்புடிக்கு இயேசுவிடம் கேட்டபோது, அவர்;, “மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்” (வச. 41:42).

நாம் தேவன் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் மார்த்தாளைப் போன்று நாம் அநேக காரியங்களைக் குறித்து சிந்தித்து திசைதிருப்பப்படுகிறோம். நமக்கு தேவையான ஞானத்தையும் நம்பிக்கையையும் தேவனால் மட்டுமே நமக்கு அருளமுடியும் என்று தெரிந்தும், தேவனுடைய பிரசன்னத்தை நாம் புறக்கணிக்கிறோம். நாம் ஜெபத்தின் மூலமாகவும் வேதவாசிப்பின் மூலமாகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்போமாகில், நாம் நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு அவர் நமக்கு வழியையும் பெலனையும் கொடுக்கிறார்.