Archives: நவம்பர் 2022

ஆக்கப்பூர்வமான விசுவாசம்

2021 ஜூன் மாதம், மாலை நேரத்தில் ஒரு சமூகத்தில் சூறாவளி புயல் வீசியது. அது அங்கிருந்த ஒரு குடும்பத்தினரின் கொட்டகையை அழித்தது. அது 1800ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் குடும்ப சொத்தாக இருந்ததினால், அதின் அழிவு அவர்களுக்கு சோகத்தை வருவித்தது. ஜானும் அவருடைய மனைவியும் அடுத்த நாள் காலை தேவாலயத்திற்குச் செல்லும் வழியில், காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் அந்த சேதத்தைப் பார்த்து, எப்படி அவர்களுக்கு உதவ முன்வரலாம் என்று யோசித்தனர். ஏற்பட்டிருக்கிற அந்த சேதாரத்திலிருந்து முதலில் அவைகள் சுத்தம்செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்தனர். உடனே தங்கள் காரை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு, உடை மாற்றிக்கொண்டு, புயல் காற்றின் மூலமாய் அந்த வீட்டில் ஏற்பட்ட சேதாராத்தை சுத்தம் செய்ய துவங்கினர். அந்த குடும்பத்தினருக்கு உதவிசெய்ததின் மூலம், அவர்களுடைய விசுவாசத்தை ஆக்கபூர்வமான விசுவாசமாய் மாற்றினர். 

“கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது” (யாக்கோபு 2:26) என்று யாக்கோபு சொல்லுகிறார். அதற்கு ஆபிரகாமின் உதாரணத்தை காண்பிக்கிறார். அவர் எங்கு செல்கிறார் என்று தெரியாதபோது கீழ்ப்படிதலுடன் தேவனைப் பின்தொடர்ந்தார் (வச. 23; பார்க்க ஆதியாகமம் 12:1-4; 15:6; எபிரெயர் 11:8). எரிகோ பட்டணத்தை வேவு பார்க்க வந்த வேவுக்காரர்களை தன் வீட்டில் மறைத்து வைத்து, இஸ்ரவேல் தேவன் மீது தனக்கிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்திய ராகாபையும் யாக்கோபு உதாரணப்படுத்துகிறார் (யாக்கோபு 2:25; பார்க்க, யோசுவா 2; 6:17).

“ஒருவன் தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன?” (யாக்கோபு 2:14). “விசுவாசமே வேர், நற்கிரியைகளே பலன்; இரண்டும் நம்மிடம் இருக்கும்படிக்கு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று மேத்யூ ஹென்றி குறிப்பிடுகிறார். நம்முடைய நற்கிரியைகள் தேவனுக்கு தேவையில்லை; ஆனால் நம்முடைய விசுவாசம் நற்கிரியைகளின் மூலமாகவே நிரூபிக்கப்படுகிறது.

பின்னோக்கி வாசித்தல்

ஒரு நல்ல நாவல் புத்தகத்தின் கடைசி அத்தியாத்தை முதலில் வாசிப்பது என்பது, அக்கதையின் சுவாரஸ்யத்தை உடைக்கும் தவறான ஒரு முயற்சி. ஆனால் அக்கதை எப்படி முடியும் என்பதை சிலர் தெரிந்துகொண்ட பிறகும், அதை சுவாரஸ்யம் குறையாமல் வாசிக்கும் சிலர் இருக்கின்றனர். 

வேதாகமத்தை பின்னோக்கி வாசிப்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை எழுத்தாளர் ரிச்சர்ட் ஹேஸ் குறிப்பிடுகிறார். வேதாகம வார்த்தைகளும் சம்பவங்களும் எவ்விதம் எதிர்காலத்தை சார்ந்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி, வேதாகமத்தை முன்னும் பின்னும் வாசிப்பதற்கான காரணத்தை பேராசிரியர் ஹேஸ் தருகிறார்.

உடைக்கப்பட்ட ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் எடுப்பித்து கட்டுவேன் என்று இயேசு சொன்ன காரியங்களை, அவருடைய உயிர்த்தெழுதலுக்கு பின்னரே சீஷர்கள் விளங்கிக்கொண்டனர் என்று ஹேஸ் குறிப்பிடுகிறார். அப்போஸ்தலனாகிய யோவான், “அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்” (யோவான் 2:21) என்று சொல்லுகிறார். அதுவரை பஸ்கா பண்டிகை அநுசரிப்பதின் காரணத்தை அறியாதவர்கள், அப்போதுதான் அறிந்துகொண்டனர் (மத்தேயு 26:17-29). ஒரு பண்டைய ராஜாவின் ஆழமான உணர்வுகளுக்கு இயேசு எவ்வாறு முழு அர்த்தத்தை அளித்தார் என்பதை பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே அவர்களால் புரிந்துகொள்ள முடியும் (சங்கீதம் 69:9; யோவான் 2:16-17). தேவனுடைய மெய்யான ஆலயத்தினை (இயேசு) குறித்து பின்னாலிருந்து வாசித்தால் மட்டுமே, இஸ்ரவேல் மார்க்கத்தின் சடங்காச்சாரங்கள் மற்றும் மேசியா குறித்ததான நம்பிக்கையில் சீஷர்கள் தெளிவு காண முடியும். 

இப்போது, இதே வேதாகமத்தை முன்னும் பின்னுமாக வாசிப்பதன் மூலம் மட்டுமே, இயேசுவில் நம்முடைய தேவைகளை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

சாக்ரடிக் கிளப்

1941 இல், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சாக்ரடிக் கிளப் என்று ஒன்று நிறுவப்பட்டது. இது கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் மற்றும் அஞ்ஞானவாதிகள் ஆகியோருக்கு இடையே விவாதத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தோற்றுவிக்கப்பட்டது.

ஒரு மதச்சார்பற்ற பல்கலைக்கழகத்தில் மார்க்கத்தைக் குறித்த விவாதம் புதியது அல்ல. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சாக்ரடிக் கிளப்பின் பதினைந்து ஆண்டுகள் தலைவராக இருந்தவர், சிறந்த கிறிஸ்தவ அறிஞர் சி. எஸ். லூயிஸ். கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையானது, கடும் எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடியது என்று அவர் நம்பினார். இயேசுவை நம்புவதற்கு சரியான பகுத்தறிவு ஆதாரம் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

ஒரு விதத்தில், உபத்திரவத்தினால் சிதறிக் கிடக்கும் திருச்சபை விசுவாசிகளுக்கு பேதுருவின் ஆலோசனையை லூயிஸ் நடைமுறைப்படுத்தியிருக்கக்கூடும், “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15). பேதுரு இரண்டு முக்கிய குறிப்புகளை கூறுகிறார்: கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதற்கு நமக்கு நேர்த்தியான காரணங்கள் உள்ளன. மேலும் நமது நியாயத்தை “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” முன்வைக்க வேண்டும்.

கிறிஸ்துவை நம்புவது என்பது மார்க்கத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியோ அல்லது சுய விருப்பமோ கிடையாது. நம்முடைய விசுவாசமானது, சரித்திரப்பூர்வமாகவும், இயேசுவின் உயிர்த்தெழுதலின் ஆதாரங்களினாலும், சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கும் சிருஷ்டிப்புகளினாலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாம் தேவனுடைய ஞானத்தையும் அவருடைய ஆவியின் பெலத்தையும் சார்ந்துகொள்ளும்போது, நம்முடைய மேன்மையான விசுவாசத்தை நம்புவதற்கான காரணங்களை நாம் அறியக்கூடும்.

தேவன் உன்னை அறிந்திருக்கிறார்

ஒரு முறை பள்ளியில் சில பிரச்சனைகளுக்கு பிறகு, என்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் என் விரக்தியான முகத்தை மறைக்க முயன்றேன். “என்ன விஷயம்?” என்று என் அம்மா கேட்டார். அவர் மேலும், “அது ஒன்றுமில்லை என்று சொல்வதற்கு முன், நான் உன்னுடைய அம்மா என்பதை நினைவில் வைத்துக்கொள். நான் உன்னைப் பெற்றெடுத்தேன், நீ உன்னை அறிவதை விட உன்னை நான் நன்றாக அறிவேன்” என்று சொன்னார். நான் எப்படிப்பட்டவன் என்பதைக் குறித்த என்னுடைய அம்மாவின் அந்த தெளிவான அறிவு, என்னுடைய துக்கமான நேரங்களில் அவர்களின் ஆதரவு எனக்கு தேவை என்பதை நினைப்பூட்டுகிறது. 

கிறிஸ்தவர்களாகிய நாம், நம்மை நன்றாய் அறிந்த ஒரு தேவனால் பராமரிக்கப்படுகிறோம். சங்கீதக்காரன் தாவீது, தேவன் அவருடைய பிள்ளைகளின் வாழ்வில் கொண்டிருக்கும் அக்கறைக்காக தேவனைத் துதிக்கிறார், “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத்  தூரத்திலிருந்து அறிகிறீர்” (சங்கீதம் 139:1-2). நாம் யார் என்பதையும், நம்முடைய எண்ணம், ஆசை மற்றும் செயல் ஆகியவற்றையும் தேவன் அறிந்திருப்பதால், அவருடைய அபரிவிதமான அன்பு மற்றும் பாதுகாப்பின் எல்லையைத் தாண்டி நாம் எங்கும் செல்ல முடியாது (வச. 7-12). மேலும், “நான்… சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும்” (வச. 9-10) என்று தாவீது பாடுகிறார். வாழ்க்கையில் நாம் எங்கிருந்தாலும், ஜெபத்தில் தேவனை கூப்பிடும்போது, அவர் நமக்குத் தேவையான அன்பையும், ஞானத்தையும், வழிகாட்டுதலையும் தருவார் என்று உறுதியாய் நம்பலாம். 

சிந்தனையும் ஜெபமும்

“உங்களுக்காக நான் நிச்சயமாய் ஜெபித்துக்கொள்கிறேன்.” இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்களானால், அதைச் சொல்லும் நபர் உண்மையில் அதைச் சொல்கிறாரா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் எட்னா டேவிஸ் அதைச் சொல்லும்போது நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைவரும் எட்னாவின் மஞ்சள் நோட்டு புத்தகத்தை பக்கம் பக்கமாக அறிவர். அதில் எழுதப்பட்டிருக்கும் ஜெபக்குறிப்புகளை ஒவ்வொரு நாள் காலையிலும் சத்தமாக ஜெபப்பது அவரின் வழக்கம். அவருடைய ஜெபப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் ஜெபத்திற்கான பதில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் எட்னாவின் மரணத்தில், சாட்சிட்ட மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தெய்வாதீனமான ஏதோ ஒன்று அவருடைய ஜெபத்தின் மூலமாகவே நடந்தது என்று சாட்சியளித்தனர். 

பேதுருவின் சிறைச்சாலை அனுபவத்தில், ஜெபத்தின் வல்லமையை தேவன் வெளிப்படுத்தினார். ஏரோது ராஜாவின் மனிதர்களால் பிடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட பிறகு, “வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்” (அப்போஸ்தலர் 12:4). அவன் தப்பிக்கும் வாய்ப்பிற்கு இடமேயில்லை. ஆனால் “சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்” (வச. 5). அவர்கள் பேதுருவை தங்கள் சிந்தையில் வைத்து ஜெபித்தனர். தேவன் ஆச்சரியமான ஒன்றை செய்தார். சிறைச்சாலையில் இருந்த பேதுருவுக்கு ஒரு தேவதூதன் வெளிப்பட்டு, அவனுடைய சங்கிலிகளிலிருந்து அவனை விடுவித்து, சிறைக்கு வெளியே பாதுகாப்பாக அவனை அழைத்துச் சென்றார் (வச. 7-10).

சிலர் தங்களுடைய “சிந்தனைகளையும் ஜெபங்களையும்” வீணாய் பயன்படுத்தலாம். ஆனால் நம்முடைய பரமபிதா நம்முடைய சிந்தையை அறிந்திருக்கிறார். நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார., அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நமக்காகச் செயல்படுகிறார். சர்வ வல்லமையுள்ள ஆண்டவருக்கு நாம் ஊழியம் செய்யும்போது, நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பதும், மற்றவர்கள் நமக்காக ஜெபிப்பது சிறிய காரியமல்ல.