ஒரு நல்ல நாவல் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தை முதலில் வாசிப்பது என்பது, அக்கதையின் சுவாரஸ்யத்தை உடைக்கும் தவறான ஒரு முயற்சி. ஆனால் அக்கதை எப்படி முடியும் என்பதை சிலர் தெரிந்துகொண்ட பிறகும், அதை சுவாரஸ்யம் குறையாமல் வாசிக்கும் சிலர் இருக்கின்றனர். 

வேதாகமத்தை பின்னோக்கி வாசிப்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை எழுத்தாளர் ரிச்சர்ட் ஹேஸ் குறிப்பிடுகிறார். வேதாகம வார்த்தைகளும் சம்பவங்களும் எவ்விதம் எதிர்காலத்தை சார்ந்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி, வேதாகமத்தை முன்னும் பின்னும் வாசிப்பதற்கான காரணத்தை பேராசிரியர் ஹேஸ் தருகிறார்.

உடைக்கப்பட்ட ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் எடுப்பித்து கட்டுவேன் என்று இயேசு சொன்ன காரியங்களை, அவருடைய உயிர்த்தெழுதலுக்கு பின்னரே சீஷர்கள் விளங்கிக்கொண்டனர் என்று ஹேஸ் குறிப்பிடுகிறார். அப்போஸ்தலனாகிய யோவான், “அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்” (யோவான் 2:21) என்று சொல்லுகிறார். அதுவரை பஸ்கா பண்டிகை அநுசரிப்பதின் காரணத்தை அறியாதவர்கள், அப்போதுதான் அறிந்துகொண்டனர் (மத்தேயு 26:17-29). ஒரு பண்டைய ராஜாவின் ஆழமான உணர்வுகளுக்கு இயேசு எவ்வாறு முழு அர்த்தத்தை அளித்தார் என்பதை பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே அவர்களால் புரிந்துகொள்ள முடியும் (சங்கீதம் 69:9; யோவான் 2:16-17). தேவனுடைய மெய்யான ஆலயத்தினை (இயேசு) குறித்து பின்னாலிருந்து வாசித்தால் மட்டுமே, இஸ்ரவேல் மார்க்கத்தின் சடங்காச்சாரங்கள் மற்றும் மேசியா குறித்ததான நம்பிக்கையில் சீஷர்கள் தெளிவு காண முடியும். 

இப்போது, இதே வேதாகமத்தை முன்னும் பின்னுமாக வாசிப்பதன் மூலம் மட்டுமே, இயேசுவில் நம்முடைய தேவைகளை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.