தமது மனைவி, மகன் மற்றும் மகளை இழந்த தொடர் சோகங்களுக்குப் பிறகு, தமது 89ஆம் வயதில் ஃபாஜா சிங் தம்முடைய ஆர்வமான ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார். பஞ்சாபி-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிங், டொராண்டோ வாட்டர்ஃபிரண்ட் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தினை நிறைவு செய்த முதல் 100 வயது நபர் என்னும் சாதனையை நிகழ்த்தினார். அவரது ஆரோக்கியமான உணவு, உடல் வலிமை, மன ஒழுக்கம் முதலியவை அவரது சாதனைக்கு உதவியிருக்கலாம். ஆனால் அவர் தம்முடைய 5 வயது வரை நடக்கமுடியாமல் இருந்தவராம். அதனால் அவரை எல்லோரும் “குச்சி” என்ற கிண்டல் செய்வார்களாம். ஆனால் தற்போது அவருடைய சாதனையைக் கண்டவர்கள் அவரை “முண்டாசிட்ட புயல்காற்று” என்று அழைக்கின்றனர். 

அப்போஸ்தலனாகிய பவுலும் தமது நாட்களில் இதேபோன்ற ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களை அங்கீகரித்தார் (1 கொரிந்தியர் 9:24). ஆனால் அவர்கள் எவ்வளவு பயிற்சி செய்தாலும் இறுதியில் அவர்களின் வலிமை குன்றுவதையும் அவர் கண்டார். ஆனால் நித்தியத்தை பாதிக்கும் விதத்தில் இயேசுவுக்காக வாழ நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று போதித்தார். தற்காலிகப் பெருமைக்காக பாடுபடும் விளையாட்டு வீரர்கள் மிகவும் கடினமாக உழைக்க முடியும் என்றால், “அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு” வாழ்பவர்கள் எவ்வளவு அதிகமாக பிரயாசப்படவேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 25).

இரட்சிப்பைப் பெறுவதற்கு நாம் பயிற்சியளிக்கவில்லை. மாறாக, நமது இரட்சிப்பு எவ்வளவு மேன்மையானது என்பதை நாம் உணரும்போது, அது நமது வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தி நம்முடைய ஓட்டத்தை எவ்வளவு நேர்த்தியாகவும் உண்மையாகவும் நிறைவுசெய்யவேண்டும் என்பதை உணர்த்துகிறது.