ஆலிவ், தனது நண்பர் தனது பல் மருத்துவ உபகரணங்களை அவரது காரில் ஏற்றுவதைப் பார்த்தாள். அவரும் ஒரு பல் மருத்துவர். இவளிடமிருந்த உபகரணங்களை அவர் விலைகொடுத்து வாங்கிச் சென்றார். பல் மருத்துவராய் பணியாற்றும் ஆலிவின் கனவு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. அவளது மகன் கைல், பெருமூளை வாதத்துடன் பிறந்தபோது, அவனைப் பராமரிக்கும் நோக்கத்துடன் மருத்துவ பணியை அவள் நிறுத்தவேண்டியிருந்தது.

“என்னுடைய வாழ்நாள் ஒரு மில்லியன் ஆண்டுகள் நீடிக்கும் வாய்ப்பிருந்தாலும், நான் அதே வேலையைத்தான் செய்வேன்” என்று என்னுடைய சிநேகிதி ஒருத்தி சொல்வாள். பல் மருத்துவ சேவையை விடுவது என்பது கனவு தொலையும் தருணம். 

நாம் புரிந்து கொள்ள முடியாத சிரமங்களை அடிக்கடி சந்திக்கிறோம். ஆலிவைப் பொறுத்தவரை, இது அவளது குழந்தையின் எதிர்பாராத சரீர வியாதி மற்றும் தனது சொந்த லட்சியங்களைத் துறந்தததினால் ஏற்பட்ட இருதய வேதனை. நகோமிக்கோ, தன் முழு குடும்பத்தையும் இழந்த மன வியாகுலம் அது. ரூத் 1:21ல், சர்வவல்லவர் என்னை கிலேசப்படுத்தியிருக்கிறார் என்று புலம்புகிறாள். 

ஆனால் நகோமியின் சம்பவத்தில் அவளால் பார்க்க முடியாத சில காரியங்கள் உண்டு. தேவன் அவளைக் கைவிடவில்லை. ஓபேத் என்ற ஒரு பேரனை அவளுக்கு கொடுத்ததன் மூலம் அவர் அவளுக்கு ஆசீர்வாதத்தை திரும்பத்தந்தார் (ரூத் 4:17). நகோமியின் கணவர் மற்றும் மகனின் பெயரை மட்டும் இந்த ஓபேத் எடுத்துக்கொள்ளுவது மட்டுமன்றி, அவன் இயேசுவின் மூதாதையரான போவாஸின் உறவினன் (மத்தேயு 1:5,16).

தேவன் நகோமியின் வேதனையை மாற்றினார். நரம்பியல் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு மத்தியில் ஊழியத்தைத் தொடங்கியதன் மூலம் ஆலிவின் வியாகுலத்தையும் அவர் மாற்றினார். நாம் மனவேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றும்போது, அவர் நம் வேதனையை மாற்ற முடியும் என்று நம்பலாம். அவருடைய அன்பினாலும் ஞானத்தினாலும், அவற்றிலிருந்து நன்மையை கொண்டுவர அவரால் கூடும்.