ஸ்காட்லாந்தின் க்ரீநோக் பகுதியிலுள்ள ஒரு ஆரம்பநிலைப் பள்ளியில் பிரசவத்திற்காக விடுப்பிலிருந்த மூன்று ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளை அந்த பள்ளிக்கு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அழைத்துவந்து மற்ற குழந்தைகளுடன் பழக வைத்தனர். குழந்தைகளுடன் பிள்ளைகள் பழகும்போது, அவர்களுக்கு அனுதாபம், அக்கறை, பிறர்மீது கரிசனை போன்றவை வளருகிறது. அதிகம் பேசாத குழந்தைகளைக் கையாளுவது சற்று சவாலானதே என ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார். பள்ளி செல்லும் மாணவர்களே அதிகம் மற்றவர்களுடன் உரையாடுகின்றனர். ஒரு குழந்தையை பராமரிப்பதற்கான கடின உழைப்பையும், மற்றவர்களின் உணர்வுகளையும் அவர்கள் புரிந்து கொள்கின்றனர். 

பிறரிடம் கரிசனை கொள்வதைப் பற்றிச் சிறுபிள்ளைகளிடம் கற்பதென்பது விசுவாசிகளுக்குப் புதிதானதல்ல. இயேசுவின் பிறப்பைக் குறித்து முதலில் அறிந்தவர்கள் சாதாரண மேய்ப்பர்களே. பிள்ளைகளை இயேசுவிடம் ஜனங்கள் கொண்டுவருகையில், பிள்ளைகளைத் தகுதியற்றவர்களாய் எண்ணிய சீஷர்களை அவர் திருத்தினார். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” (மாற்கு 10:14) என்றார்.

இயேசு, “அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்” (வ.16). நம் வாழ்விலும், சிலசமயம் நாம் “சவால்களை” சந்திக்கக்கூடும், மதிப்பற்றவர்களாய் எண்ணப்படக்கூடும், ஆனால், குழந்தையாய்ப் பிறந்த இயேசு நம்மை அன்போடு ஏற்றுக்கொள்கிறார். இதன் மூலம் அன்பின் வல்லமையை நமக்குப் போதிக்கிறார்.