2020ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில், சான் டியாகோ கடற்கரையின் ஒளிரும் அலைகளின் மீது, மிதவைதட்டின் உதவியோடு வீரர்கள் உலா வந்தனர். இந்த ஒளிரும் அலைகள், பைட்டோபிளாங்டன் எனப்படும் நுண்ணிய உயிரிகளால் ஏற்படுத்தப்பட்டவைகள். அதற்கு கிரேக்கத்தில், “பரதேசி” அல்லது “சுற்றித் திரிபவன்” என்று பொருள். இந்த உயிரிகள் பகல் நேரத்தில், சிவப்பு அலைகளை உருவாக்கி அவற்றை இரசாயன ஆற்றலாக மாற்றும் சூரிய ஒளியை உள்வாங்குகிறது. இரவில் அவை நீல நிற மின்சார ஒளியை உருவாக்கும்.

பரலோகவாசிகளாகிய கிறிஸ்தவர்கள், பூமியில் வாழும் நாட்களில் இந்த சிவப்பு அலைகளை உருவாக்கும், பரதேசிகளாகவும் சுற்றித் திரிபவர்களாகவுமே வாழுகிறார்கள். தேவன் நமக்கு வகுத்திருக்கிற திட்டத்தை கடினமான சூழ்நிலைகள் தொந்தரவுசெய்யும்போது, உலகத்தின் ஒளியான இயேசுவைப் போல இருளில்  பிரகாசிக்கும் ஒளியாய் பரிசுத்த ஆவியானவர் நம்மை மாற்றுகிறார். பவுல் அப்போஸ்தலரைப் பொருத்தவரையில், தேவனோடு இருக்கிற உறவு மற்றும் அவர் மூலமாய் நமக்கு உண்டாகும் நீதியைவிட மேன்மையானது வேறு இல்லை (பிலிப்பியர் 3:8-9). இயேசுவை அறிகிற அறிவும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையும், பாடுகளின் மத்தியில் நம்முடைய வாழ்க்கை முறையை பாதிக்கிறது (வச. 10-16).

தேவகுமாரனோடு நாம் அனுதினமும் நேரம் செலவிடும்போது, கிறிஸ்துவின் சுபாவத்தை பிரதிபலிக்கும் வகையில் சவால்களை சந்திக்கும் சத்தியத்தை அறிகிற அறிவிற்கு நேராய் ஆவியானவர் நம்மை வழிநடத்துவார் (வச. 17-21). நாம் பரதீசு சேரும் நாள்வரை, தேவனுடைய அன்பு மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்காய் நாம் செயல்படமுடியும்.